உடலுறவில் பாதிப்பு : உடலுறவில் ஈடுபடாதபோது அவர்கள் ஆணுறுப்பு விறைப்பின்மை பிரச்னையால் பாதிக்கப்படுவார்கள் என 2008 ஆண்டு வெளியான ஆய்வில் கூறப்பட்டுள்ளது. எனவே உடலுறவு வைத்துக்கொள்வதற்கான சூழல் இல்லாவிட்டாலும் சுய இன்பம் செய்தாவது விந்தணுக்களை வெளியேற்ற வேண்டும் என வல்லுநர்கள் அந்த ஆய்வில் குறிப்பிட்டுள்ளனர்.
புற்றுநோய் ஆபத்து : விந்தணுக்களை தேவைப்படும் காலத்தில் வெளியேற்றாமல் இருப்பது புரோஸ்டேட் புற்றுநோயை உண்டாக்கும் என ஆய்வில் கூறப்படுகிறது. வாரத்தில் நான்கு அல்லது ஆறு முறையேனும் விந்தணுக்களை வெளியேற்றினால் ஆண்களுக்கு புற்றுநோய் ஆபத்து குறைவு என்கிறது. எனவே அடிகடி விந்தணுக்களை வெளியேற்றிவிடுங்கள்.
இரத்த அழுத்தம் அதிகரிக்கும் : உடலுறவு கொள்ளாதவர்களைக் காட்டிலும் அடிக்கடி உடலுறவில் ஈடுபடுவோர் விந்தணுக்களை வெளியேற்றுவதால் மனதளவிலும் , உடலளவிலும் ஆரோக்கியமாக இருப்பதாக 2006 ஆண்டு மருத்துவ இதழில் வெளியேன பயோலாஜிக்கல் சைக்காலஜி ஆய்வு கூறுகிறது. இதனால் அவர்களுக்கு இரத்த அழுத்தமும் குறைவாக இருக்குமாம். அதேசமயம் உடலுறவுகொள்ளாத ஆண்களுக்கு இரத்த அழுத்தம் உயர்வாக இருப்பதையும் விந்தணு வெளியேற்றாததே காரணம் என சுட்டிக்காட்டுகிறது.
மன அழுத்தம் : ஒரு சிலருக்கு உடலுறவு வைத்துக்கொண்டாலே மனம் நிம்மதி அடையும். உற்சாகம் கிடைக்கும். அவர்கள் மனதளவிலும் ஆரோக்கியமாக இருப்பார்கள். இதற்காக சிலர் சுய இன்பத்தில் கூட ஈடுபடுவார்கள். இதற்குக் காரணம் உடலுறவின் போது மூளையில் சுரக்கும் எண்டோர்ஃபின் ஹார்மோன்களே காரணம். எனவே சுய இன்பம் அடைந்தாவது உங்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளுங்கள்.
நோய் எதிர்ப்பு சக்தி குறைவு : ஆண்கள் வாரம் ஒன்று அல்லது இரண்டு முறையேனும் உடலுறவு கொள்வதால் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கூடும் என்பது தெரியுமா? ஆம் , ஒரு ஆய்வில் அவ்வாறு உடலுறவு கொள்ளும் ஆண்களின் உமிழ்நீரை ஆய்வு செய்ததில் அவர்களுக்கு தொற்றை குறைக்கும் ஆன்டிபாடி இம்யூனோகுளோபூலின் அளவு அதிகமாக இருப்பதை கண்டறிந்துள்ளனர். எனவே அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இயற்கையாகவே இருக்கும். ஆனால் விந்தணுக்களை வெளியேற்றாமல் வைத்திருந்தால் எதிர்மறையான பக்கவிளைவுகளே உண்டாகும்.
வேலையை பாதிக்கலாம் : நீங்கள் விந்தணுக்களை முறையாக வெளியேற்றாமல் இருந்தால் உங்கள் சிந்தனைகள் பாலியல் குறித்தே இருக்கும். இதனால் வேலைகளில் கவனம் செலுத்த முடியாது. எனவே அமைதியான , நிம்மதியான மனநிலைக்கு விந்தணுக்களை அவ்வபோது வெளியேற்றி சீராக கவனிப்பது அவசியம். தேக்கி வைப்பதால் இதுபோன்ற பின்விளைவுகளையே சந்திக்க நேரிடும்.