முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » தினமும் தலைக்கு குளித்தால் என்னவாகும் தெரியுமா..?

தினமும் தலைக்கு குளித்தால் என்னவாகும் தெரியுமா..?

Natural hair regrowth treatment | தலைமுடியை குறிப்பிட்ட நாட்களுக்கு மேல் வாஷ் செய்யவில்லை என்றால், பொடுகு அல்லது அரிப்பு போன்ற பிரச்சனைகள் அதிகரிக்கும்.

 • 19

  தினமும் தலைக்கு குளித்தால் என்னவாகும் தெரியுமா..?

  side effects of washing hair daily : தினமும் தலையை கழுவுவதால் முடி உதிர்வு ஏற்படுமா? என்ற கேள்வி நாம் அனைவருக்கும் இருக்கும். ஏனென்றால், தற்போதைய காலத்தில் தலைமுடியை பராமரிக்கவும், தலைக்கு எண்ணெய் வைப்பதற்கு நம்மில் பலருக்கும் நேரமில்லை. இன்னும் சிலர், தினமும் தலைக்கு குளிப்போம். ஆனால், வாரத்திற்கு 3 முறையாவது தலையை கழுவ வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர். உடலில் சேரும் அழுக்குகளை நீக்க நாம் தினமும் குளிக்கிறோம். நம்மில் சிலர் அடிக்கடி தலைக்கு குளிப்போம். தினமும் தலைக்கு குளிப்பதால் ஏற்படும் தீமைகள் என்ன என்று இங்கு காணலாம்.

  MORE
  GALLERIES

 • 29

  தினமும் தலைக்கு குளித்தால் என்னவாகும் தெரியுமா..?

  கலையிழந்த கூந்தல் : தினமும் தலைக்கு குளிப்பதால், தலைமுடியில் காணப்படும் இயற்கையான எண்ணெய் பசை குறையும். இதன் காரணமாக கூந்தலின் இயற்கை அழகு பாதிப்பதோடு, கூந்தலின் பளபளப்பும் சீர்குலையும். எனவே, உங்கள் கூந்தல் கலையிழந்து வறட்சியாக காணப்படும்.

  MORE
  GALLERIES

 • 39

  தினமும் தலைக்கு குளித்தால் என்னவாகும் தெரியுமா..?

  வறட்சியான தலைமுடி : ஏற்கனவே வறட்சியான கூந்தல் கொண்டவர்கள் தினமும் தலைக்கு குளிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால், வறண்ட கூந்தல் கொண்டவர்கள் தினமும் தலைக்கு குளிப்பதனால், தலைமுடி முடிச்சுகள் (சிக்கு) மற்றும் சேதம் அதிகரிக்கிறது.

  MORE
  GALLERIES

 • 49

  தினமும் தலைக்கு குளித்தால் என்னவாகும் தெரியுமா..?

  உச்சந்தலை அரிப்பு : தினமும் தலைக்கு குளிப்பதால் உச்சந்தலையில் உள்ள ஈரப்பதம் குறைவதோடு வறட்சி உண்டாகும் வாய்ப்பு அதிகரிக்கும். இதன் காரணமாக உச்சந்தலையில் அரிப்பு, செதில்கள் உண்டாகும். அதிகமாக அரிப்பதால், சில சமயம் புண்கள் கூட ஏற்படலாம்.

  MORE
  GALLERIES

 • 59

  தினமும் தலைக்கு குளித்தால் என்னவாகும் தெரியுமா..?

  பொடுகு பிரச்சனை : தினமும் தலைக்கு குளித்தால் உச்சந்தலையில் வறட்சி ஏற்பட்டு, பொடுகு பிரச்சனை ஏற்படும். அதிகரிக்கும் பொடுகு தொல்லையை கட்டுப்படுத்த, தலைக்கு குளிப்பதை குறைப்பதோடு, எண்ணெய் வைப்பது நல்லது.

  MORE
  GALLERIES

 • 69

  தினமும் தலைக்கு குளித்தால் என்னவாகும் தெரியுமா..?

  அடர்த்தி குறையும் : தினமும் தலைக்கு குளிப்பதினால் தலைமுடி மெலியும் வாய்ப்பு அதிகரிக்கிறது. இந்த தலைமுடி மெலிவு, கூந்தலின் அடர்த்தியை பெருமளவில் பாதிக்கிறது. இதனால், உங்கள் கூந்தல்  மெல்லியதாக மாறும்.

  MORE
  GALLERIES

 • 79

  தினமும் தலைக்கு குளித்தால் என்னவாகும் தெரியுமா..?

  முடி உதிர்வு : தினமும் தலைக்கு குளிப்பது தலைமுடி வேர் கால்களின் பலத்தை குறைக்கிறது. இதன் காரணமாக தலைமுடி உதிர்வு பிரச்சனைகள் அதிகரிக்கிறது. தலைமுடி உதிர்வை கட்டுப்படுத்த, தலைக்கு அத்தியாவசிய எண்ணெய்கள் பயன்படுத்துதல் நல்லது.

  MORE
  GALLERIES

 • 89

  தினமும் தலைக்கு குளித்தால் என்னவாகும் தெரியுமா..?

  தலைமுடி வெடிப்பு : தினமும் தலைமுடியை வாஷ் செய்வதால், தலை முடி வெடிப்பை அதிகரிக்கும். தலைமுடி வெடிப்பு எனப்படுவது, தலைமுடியின் நுனியில் ஏற்படும் பிளவு ஆகும். இந்த பிளவுகள் தலைமுடியின் நீளத்தை குறைப்பதோடு, அடர்த்தியையும் பாதிக்கிறது.

  MORE
  GALLERIES

 • 99

  தினமும் தலைக்கு குளித்தால் என்னவாகும் தெரியுமா..?

  உடல் உஷ்ணம் அதிகரிக்கும் : தினமும் தலைக்கு குளிப்பதால் உச்சந்தலையில் வறட்சி உண்டாவதோடு, உஷ்ணமும் அதிகரிக்கிறது. தலைமுடி ஆரோக்கியத்தை பாதிக்கும் இந்த உஷ்ணத்தை கட்டுப்படுத்த வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல் அவசியம்.

  MORE
  GALLERIES