நமது உடலின் தினசரி செயல்பாட்டைச் செய்ய பெரிய அளவில் தேவைப்படும் மூன்று முக்கிய நுண்ணூட்டச்சத்துக்களில் கார்போஹைட்ரேட் முதன்மையானது. ஆனால் உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் அதிக அளவிலான கார்போஹைட்ரேட் உணவை எடுத்துக்கொள்வது நல்ல பலனை கொடுக்காது. ஆனால் கார்போஹைட்ரேட்டுகளில் அதிக அளவிலான நார்சத்து மற்றும் உடலுக்கு தேவையான பல்வேறு சத்துக்கள் அடங்கியுள்ளதால், குறைந்த அளவிலான கார்போஹைட்ரேட் உணவுகளை எடுத்துக்கொண்டு, உடல் எடையை குறைக்க முயற்சிக்கலாம்.
குறைந்த கார்ப்ஸ் கொண்ட காய்கறிகள்: குறைந்த கார்ப்ஸ் கொண்ட உணவு பழக்கத்திற்கு மாற விரும்புகிறீர்கள் என்றால், குறைந்த கார்ப்போஹைட்டுகளைக் கொண்ட காய்கறிகளை அதிக அளவில் சேர்த்துக்கொள்வது நல்லது. காய்கறிகளில் நார்ச்சத்து மற்றும் குறைந்த கலோரிகள் உள்ளன. உணவில் பச்சைக் காய்கறிகளை அதிகமாக சேர்த்துக் கொண்டால், பசி எடுக்கும் தன்மை நீண்ட நேரத்திற்கு கட்டுப்படுத்தப்படுவதோடு, உடல் எடை குறைவதையும் கண்கூடாக காணலாம்.
அதிக தண்ணீர் குடிப்பது அவசியம்: உடலில் நீர்சத்து குறைவது சீக்கிரமாக பசியை உண்டாக்கும். எனவே நீங்கள் கார்ப் உணவைப் பின்பற்றும்போது, நாள் முழுவதும் நிறைய தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம். குறிப்பாக உணவுக்கு 30 நிமிடங்களுக்கு முன்பு தண்ணீர் அருந்துவதை வழக்கமாக வைத்துக்கொள்ளுங்கள், இது குறைவான கலோரிகளை உட்கொள்ள உதவதோடு, அடுத்த வேளை உணவை உட்கொள்ளும் வரையில் வயிற்றையும் நிறைவாக வைத்திருக்க உதவும்.
ஆரோக்கியமான கொழுப்பு நன்மை தரும்: ஆரோக்கியமான கொழுப்பு ஒரு சீரான உணவின் ஒரு முக்கிய அங்கமாகும். டயட் இருக்கிறேன் என்ற பெயரில் உங்களுடைய உணவில் இருந்து முற்றிலும் கொழுப்பான உணவு பொருட்களை நீக்குவது பசியை அதிகரிக்க வழிவகுக்கும். ஒருவேளை நீங்கள் லோ கார்ப்ஸ் டயட் எடுத்து வருகிறீர்கள் என்றால், உங்களுடைய உணவில் இருந்து நீங்கள் குறைக்க வேண்டியது கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளையோ தவிர, கொழுப்பு நிறைந்த உணவுகளை அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஊட்டச்சத்து குறைப்பாட்டிற்கு வழிவகுக்கும் என்பதால், உடலில் நல்ல கொழுப்பிற்கான ஆதாரங்களை சேர்த்துக்கொள்வது முக்கியமானது.
கார்பை முற்றிலும் தவிர்ப்பது ஆபத்து: குறைந்த கார்ப்ஸ் டயட்டில் கார்போஹைட்ரேட் உணவின் அளவை ஒருகுறிப்பிட்ட அளவிற்கு மட்டுமே குறைக்க முடியும். ஏனென்றால் கார்போஹைட்ரேட்டில் உடலுக்கு தேவையான பல நுண்ணூட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், அதனை முற்றிலுமாக நீக்க முடியாது. உடலின் இயங்கு சக்திக்கும், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை தவிர்ப்பதற்கும் சில கலோரிகளாவது கார்போஹைட் உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம்.