முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » உடல் எடை குறைந்து ஸ்லிம்மாக மாறணுமா? அப்போ நீங்க கண்டிப்பா இந்த பழக்கவழக்கங்களை கடைப்பிடிக்கணும்!!

உடல் எடை குறைந்து ஸ்லிம்மாக மாறணுமா? அப்போ நீங்க கண்டிப்பா இந்த பழக்கவழக்கங்களை கடைப்பிடிக்கணும்!!

உடல் எடை குறைப்பது குறித்து பல குறிப்புகளும் சமூக வலைத்தளங்களில் தினம் தினம் பகிரப்படுகின்றன. ஆனால், இது போன்ற அதிகப்படியான தகவல்கள், நம்மை சற்று திக்கு முக்காட வைத்து விடலாம்.

  • 18

    உடல் எடை குறைந்து ஸ்லிம்மாக மாறணுமா? அப்போ நீங்க கண்டிப்பா இந்த பழக்கவழக்கங்களை கடைப்பிடிக்கணும்!!

    உடல் பருமன் என்பது தற்போது அதிகரித்து வரும் ஒரு பெரும் கவலையாகும். இது மற்ற உடல்நலப் பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கிறது. அதனால் நொறுக்குத் தீனிகளை தவிர்ப்பதோடு, உங்கள் உடல் பருமனைக் குறைக்க இந்த பழக்க வழக்கங்களை முயற்சி செய்து பார்க்கவும்.

    MORE
    GALLERIES

  • 28

    உடல் எடை குறைந்து ஸ்லிம்மாக மாறணுமா? அப்போ நீங்க கண்டிப்பா இந்த பழக்கவழக்கங்களை கடைப்பிடிக்கணும்!!

    நாம் நம் உடலை கட்டுக் கோப்பாக வைத்துக் கொள்ள என்னவெல்லாம் செய்யலாம் என்பது குறித்து இணையத்தில் பல தகவல்கள் உள்ளன. இது குறித்து பல குறிப்புகளும் சமூக வலைத்தளங்களில் தினம் தினம் பகிரப்படுகின்றன. ஆனால், இது போன்ற அதிகப்படியான தகவல்கள், நம்மை சற்று திக்கு முக்காட வைத்து விடலாம். அதனால் தான், இந்தப் பதிவின் மூலம் உங்களுக்கு ஏற்ற தகவல்களை மட்டும் தொகுத்து வழங்கி உள்ளோம்.

    MORE
    GALLERIES

  • 38

    உடல் எடை குறைந்து ஸ்லிம்மாக மாறணுமா? அப்போ நீங்க கண்டிப்பா இந்த பழக்கவழக்கங்களை கடைப்பிடிக்கணும்!!

    உடல் பருமன் பிரச்சனை இருந்தால், நீங்கள் நொறுக்குத் தீனிகளை தவிர்ப்பதோடு, உங்கள் உடல் பருமனைக் குறைக்க பின்வரும் பழக்க வழக்கங்களை காலையில் கடைப்பிடிக்க வேண்டும்.

    MORE
    GALLERIES

  • 48

    உடல் எடை குறைந்து ஸ்லிம்மாக மாறணுமா? அப்போ நீங்க கண்டிப்பா இந்த பழக்கவழக்கங்களை கடைப்பிடிக்கணும்!!

    தினமும் காலையில் வெது வெதுப்பான நீரைப் பருகவும் : உடல் பருமனுக்கு முக்கிய காரணமாக அமைவது மெதுவான வளர்சிதை மாற்றமே ஆகும். வளர்சிதை மாற்றத்தை கட்டுக்குள் வைத்திருக்க, காலையில் எழுந்தவுடன் குறைந்தது 1-2 கிளாஸ் வெதுவெதுப்பான நீரைப் பருக வேண்டும். ஆயுர்வேதத்தின் படி, எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்த தண்ணீரைக் குடிப்பது வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துகிறது, அதோடு இது எடையையும் குறைக்க உதவுகிறது.

    MORE
    GALLERIES

  • 58

    உடல் எடை குறைந்து ஸ்லிம்மாக மாறணுமா? அப்போ நீங்க கண்டிப்பா இந்த பழக்கவழக்கங்களை கடைப்பிடிக்கணும்!!

    உடற்பயிற்சி செய்வதை ஒருபோதும் நிறுத்தி வீடாதீர்கள் : உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள ஒரு நாளைக்கு குறைந்தது 25 முதல் 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்வது மிகவும் அவசியம். இது சுறுசுறுப்பாக செயல்பட உதவுவதோடு நாளின் தொடக்கத்திலேயே நமக்கு தேவையான ஆற்றலைக் கொடுக்கிறது. பெரும்பாலான மக்கள் இப்போதெல்லாம் ஜிம்மிற்குச் சென்று உடற்பயிற்சி செய்கிறார்கள். அவ்வாறு இம்மிற்குச் சென்று உடற்பயிற்சி செய்ய உங்களுக்கு போதிய நேரமில்லை என்றால், நீங்கள் வீட்டிலேயே தினமும் காலையில் லேசான உடற்பயிற்சிகளைச் செய்யலாம். ஆனால், ஒரு போதும் அதனை நிறுத்தி வீடக் கூடாது.

    MORE
    GALLERIES

  • 68

    உடல் எடை குறைந்து ஸ்லிம்மாக மாறணுமா? அப்போ நீங்க கண்டிப்பா இந்த பழக்கவழக்கங்களை கடைப்பிடிக்கணும்!!

    சூரிய ஒளி படும்படி பார்த்துக் கொள்ளுங்கள் : வைட்டமின் டி நம் உடலுக்கு நன்மை பயக்கும் ஒரு வைட்டமின் ஆகும். காலையில் சூரியன் உதிக்கும் போது நாம் சூரிய ஒளி படும்படி பார்த்துக் கொண்டால், நமக்கு வைட்டமின் டி எளிதில் கிடைக்கும். அதற்கு நாம் காலையில் திறந்த வெளியில் அல்லது மொட்டை மடியில் சூரிய ஒளி படும் படி உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி செய்யலாம். இது நம் உடலுக்கும் மனதுக்கும் நேர்மறை ஆற்றலை அளிக்கிறது. கூடுதலாக, வைட்டமின் டி எடையைக் குறைக்க உதவுகிறது.

    MORE
    GALLERIES

  • 78

    உடல் எடை குறைந்து ஸ்லிம்மாக மாறணுமா? அப்போ நீங்க கண்டிப்பா இந்த பழக்கவழக்கங்களை கடைப்பிடிக்கணும்!!

    காலை உணவை ஒருபோதும் தவிர்க்காதீர்கள் : உடல் எடையைக் குறைக்க உதவும் என்று எண்ணி பலர் தங்கள் காலை உணவைத் தவிர்த்து விடுவார்கள். ஆனால், இதுவே அவர்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கலாம். எந்தவொரு முறையற்ற உணவு முறையும் நம் உடலை பலவீனப்படுத்திவிடும். சில சமயங்களில், நீங்கள் நீண்ட நேரத்திற்கு பசியுடன் இருந்தால், அது எடை இழப்புக்கு பதிலாக எடை அதிகரிப்பதற்கு வழிவகுக்கும். ஏனெனில், நீங்கள் நீண்ட நேரம் பட்டினியாக இருந்ததால், கண்டிப்பாக அந்தப் பசியைத் தீர்க்க அதிகமாக சாப்பிடுவீர்கள். மேலும், இவ்வாறு காலை உணவைத் தவிர்ப்பது, உங்கள் உடலில் உள்ள முக்கிய ஊட்டச்சத்துக்களை இழக்கச் செய்திடும்.

    MORE
    GALLERIES

  • 88

    உடல் எடை குறைந்து ஸ்லிம்மாக மாறணுமா? அப்போ நீங்க கண்டிப்பா இந்த பழக்கவழக்கங்களை கடைப்பிடிக்கணும்!!

    திட்டமிட்டு உண்ணுங்கள் : ஒவ்வொரு நாள் காலையிலும், அந்த நாளில் நீங்கள் என்னென்ன சாப்பிட உள்ளீர்கள் என்பதை பட்டியலிடுங்கள். குறைந்த கலோரி நிறைந்த உணவுகளை தேர்ந்தெடுப்பதன் மூலம் நீங்கள் கவனமாக இருக்கலாம். ஒரு நாளுக்கு என்னவெல்லாம் சாப்பிட வேண்டும் என்று முன்னரே முடிவு செய்திருந்தால், நீங்கள் கலோரி-அதிகமான உணவுகளை கண்டிப்பாக தவிர்த்து விடுவீர்கள். முன்கூட்டியே திட்டமிடுவதன் மூலம், நீங்கள் எதை உட்கொள்கிறீர்கள் என்பதில் கவனமாகவும் இருப்பீர்கள். இது உங்கள் ஆரோக்கியத்திற்கு பக்க பலமாக அமையும்.

    MORE
    GALLERIES