அடிப்படையில், எடை குறைக்க முயற்சிக்கும் 40 வயதிற்குட்பட்ட பெண்களுக்கு குளிர்காலம் என்பது கடினமான காலமாக இருக்கும். சூரிய ஒளியின் பற்றாக்குறை செரோடோனின் அளவைக் குறைக்கலாம். இது மனநிலையை ஒழுங்குபடுத்துவதோடு தொடர்புடைய ஹார்மோன் ஆகும். மற்றும் தூக்கத்தை ஊக்குவிக்கும் மெலடோனின் அளவையும் அதிகரிக்கிறது. இது போன்ற பாதிப்புகளில் இருந்து உங்களை காப்பாற்ற, உடல் எடையை குறைக்க கீழ்காணும் பயிற்சிகளை தொடர்ச்சியாக செய்து வாருங்கள்.
1. ஸ்குவாட்ஸ் : 40 வயதை எட்டுவது என்பது ஒரு சிறந்த மைல்கல். உங்கள் எடை குறைப்பு பயணத்தைத் தொடங்க எடை குறைப்புக்கான சிறந்த பயிற்சிகளில் ஒன்று ஸ்குவாட்ஸ் ஆகும். இது அனைத்து முக்கிய தசைகளையும் செயல்படுத்த உதவுகிறது. ஸ்குவாட்ஸ் பயிற்சியை முடிக்க, நீங்கள் உங்கள் மூச்சைக் கட்டுப்படுத்த வேண்டும், ஒவ்வொரு முறை திரும்பத் திரும்பத் தொடங்குவதற்கு முன்பும் ஆழ்ந்த முறையில் மூச்சை எடுத்து, பின்னர் மூச்சை வெளியேற்ற வேண்டும். இது நல்ல பலன்களை தரும்.
2. 30 - 40 நிமிடங்கள் விறுவிறு நடை : தினமும் 30-40 நிமிடங்கள் விறுவிறுப்பாக நடப்பது, ஆரோக்கியமாக இருப்பதற்கான சிறந்த வழியாகும். இது உங்கள் இதய ஆரோக்கியத்திற்கும், தசை வலிமைக்கும் பெரிதும் உதவும். கூடுதலாக, இது மன அழுத்தத்தை குறைக்கவும், உங்கள் மனநிலையை மேம்படுத்தவும் வழி செய்கிறது. தினமும் 30-40 நிமிடங்கள் விறுவிறுப்பாக நடப்பது 150 கலோரிகளை எரித்து, உங்கள் உடல் எடையை குறைக்க உதவுகிறது. மேலும், காலையில் நடைப்பயிற்சி செய்ய முடியாதவர்கள் மாலை நேரத்தில் நடைபயிற்சி செய்யலாம்.
3. ரன்னிங் : உடல் எடையை குறைப்பது என்பது ஒரு சவாலான செயலாகும். அதற்கு அதிக அர்ப்பணிப்பு தேவைப்படுகிறது. நீங்கள் உட்கொள்வதை விட அதிக கலோரிகளை எரிப்பது என்பது உங்கள் சிறந்த பலனை அடைய வழி செய்யும். ஓடுதல் என்பது நீங்கள் விரும்பிய எடை குறைப்பு இலக்கை அடைய உதவும். தொடர்ந்து 30 நிமிடங்கள் ஓடினால் 671 கலோரிகள் வரை குறைக்கப்படும். கூடுதலாக, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பராமரிக்க தேவையான வலிமை மற்றும் சகிப்புத்தன்மையை உருவாக்க ஓட்டம் பெரிதும் உதவும்.
4. ஜம்பிங் ஜாக்ஸ் : ஜம்பிங் ஜாக் என்பது ஒரு வழக்கமான கார்டியோ பயிற்சியாகும். இது ஒரு சிறந்த மற்றும் எளிதான உடற்பயிற்சி ஆகும். உங்கள் கீழ் உடலின் முக்கிய தசைகளை குறைக்க உதவுகிறது. ஜம்பிங் ஜாக் கலோரிகளை எரிப்பதை அதிகரிக்கலாம் மற்றும் பொது ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். எனவே, ஒவ்வொரு நாளும் 10 நிமிடங்கள் இந்தப் பயிற்சியைச் செய்ய வேண்டும். ஏனெனில் 10 நிமிட ஜம்பிங் ஜாக்ஸ் உங்களுக்கு 80-100 கலோரிகளை எரிக்க உதவும்.
5. ஏரோபிக்ஸ் : ஜூம்பா அல்லது நடனம் போன்ற ஏரோபிக் பயிற்சிகள் பெண்களின் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. கார்டியோவாஸ்குலர் உடற்பயிற்சிகள் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. மேலும் "நல்ல" உயர் அடர்த்தி கொழுப்புப்புரதம் (HDL) கொழுப்பை உயர்த்தி, இரத்தத்தில் உள்ள "கெட்ட" குறைந்த அடர்த்தி கொழுப்புப்புரதம் (LDL) கொழுப்பின் அளவைக் குறைத்து, உங்கள் தமனிகளைத் தெளிவாக வைத்திருக்க உதவுகிறது. இந்த வழக்கமான உடல் செயல்பாடு இன்சுலின் அளவைக் கட்டுப்படுத்தவும், இரத்த சர்க்கரையை குறைக்கவும் உதவுகிறது. மேலும், இது உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கவும் வழி செய்கிறது. வாரத்திற்கு 2 முதல் 3 முறை, 30 முதல் 40 நிமிடங்கள் வரை ஏரோபிக் உடற்பயிற்சி செய்து வந்தால் ஒட்டுமொத்த உடலும் ஆரோக்கியம் பெறும்.