உடலும் , மனதும் ஒருங்கினைக்க வைக்கும் மேஜிக் யோகாவில் உள்ளது. இதை அனுபவித்த பலரும் ஒப்புக்கொள்வார்கள். அதோடு ஆரோக்கியமான வாழ்க்கை முறை தேர்வு செய்யும் பலர் யோகாவையும் தங்களுடைய அன்றாட வாழ்க்கையில் ஒன்றாக பழக்கப்படுத்திக்கொள்கின்றனர். குறிப்பாக உடல் எடையை குறைக்க முயலும் பலரும் யோகாவை தேர்வு செய்கின்றனர். உண்மையில் யோகா உடல் எடையை குறைக்க உதவுமா..? அதனால் இன்னும் என்னென்ன நன்மைகளைப் பெறலாம்..? தெரிந்துகொள்ளுங்கள்.
உடல் எடை குறையும் : மனம் ஒரு நிலையில் இணையும்போது நம் உடல் மீதும் கவனம் செலுத்த தொடங்குவீர்கள். இதனால் ஒழுங்குமுறைக்கு மாறும்போது உணவு மற்றும் உண்ணும் அளவும் மாறிவிடும். அதோடு அமைதியான மனநிலையில் பாசிட்டிவ் ஹார்மோன்களும் நமக்குக் கை கொடுக்கும். இதனால் உடல் எடையை எளிதிலும், விரைவிலும் குறைத்துவிடலாம் என 2016 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் கூறப்பட்டுள்ளது. எனவே முறையான உணவுப் பழக்கம் , ஆரோக்கியமான வாழ்க்கை முறை , யோகா என இருப்போருக்கு உடல் எடை தானாக குறையும்.