ஆண்களோ, பெண்களோ தங்களின் குண்டான உடம்பை குறைக்க எல்லோரிடமும் அடிக்கடி டிப்ஸ் கேட்பார்கள். ஆனால் அதனை பின்பற்றுவது அவர்களுக்கு கொஞ்சம் கடினமாக தோன்றும். ஏனென்றால், அவர்களுக்கு ஐடியா கொடுக்கும் பலரும் முதலில் சொல்வது, உடம்பை குறைப்பது சாதாரண விஷயம் அல்ல, நீண்ட நாள் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என கூறுவார்கள்.
இதற்காகவே சிலர் உடம்பை குறைக்கும் எண்ணம் இருந்தாலும், அதற்கான வழிமுறைகளை மேற்கொள்ள மாட்டார்கள். இன்னும் சிலரோ கடினமான உடற்பயிற்சியை மேற்கொள்வார்கள், ஆனால் உணவில் கட்டுப்பாடு இல்லாமல் இருப்பார்கள். அதனால், அவர்களின் உடம்பை குறைக்கும் முயற்சி தோல்வி அடையும். இதனை தவிர்க்க சாப்பிடும் உணவில் food combination என்ற புதிய முயற்சியை டிரை பண்ணுங்க. இதனால், உங்களின் உணவு ஆசைக்கு தீனிபோட்ட மாதிரியும் இருக்கும், உடல் எடையும் குறையும்.
பசலைக்கீரை ஆம்லெட் : முட்டை என்பது உடல் எடையை கூட்டுவதற்கும், குறைப்பதற்கும் பயன்படும் ஒரு மிகச்சிறந்த உணவு. நம் உடம்புக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் முட்டையில் இருக்கின்றன. குறிப்பாக, அதில் இருக்கும் புரதச்சத்து நம் உடம்பை வலிமையாக்க பயன்படுகிறது. அதேநேரத்தில், ஒருவர் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் மட்டும் இருக்கிறார் என்றால், ஆம்லெட்டுடன் இரும்புசத்து மிக்க பசலைக்கீரையை சேர்ந்து சாப்பிடலாம். இதனால் அவரின் உடல் எடை விரைவாக குறையும் என ஆய்வில் தெரியவந்துள்ளது .
பழங்களுடன் ஓட்ஸ் : உடல் எடையை குறைப்பதற்கு அதிகம் பரிந்துரைக்கப்படும் உணவுகளுள் ஓட்ஸூம் ஒன்று. இதில், வைட்டமின் பி, கால்சியம், மக்னீசியம் உள்ளிட்ட ஊட்டச்சத்துகள் அடங்கியிருப்பதால், காலை நேரத்தில் உணவாக எடுத்துக்கொள்ளலாம். இதில் கலோரிகள் மிகவும் குறைவு. உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகளை குறைப்பதால் இதனை சிறந்த உணவாக எடுத்துக்கொள்ளலாம். சிலர் இதனை எப்படி சாப்பிடுவது என்று தெரியாமல் உள்ளனர். அவர்கள், ஓட்ஸ் கஞ்சி வைத்து அதனுடன் மாதுளை உள்ளிட்ட பழங்களையோ அல்லது காய்கறிகளை சேர்த்து சாப்பிடலாம். அதில், புதினா இலைகளையும் சேர்த்துக்கொள்ளலாம்.
பழக்கலவையுடன் ஆலிவ் ஆயில் : உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள் கண்டிப்பாக நொறுக்குத் தீனிகள் எடுத்துக்கொள்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அந்த நேரத்தில் பலக்கலவைகளை எடுத்துக்கொள்ளலாம். அவற்றுடன் ஆலிவ் ஆயில் மற்றும் கீரைகளின் இலைகளையும் அதனுடன் சேர்த்து எடுத்துக்கொள்ளலாம். ஆலிவ் ஆயில் உடம்பில் உள்ள அதிகப்படியான கொழுப்புகளை கரைப்பதுடன், பசியையும் கட்டுப்படுத்தும. கீரை இலைகள் உணவு எடுத்துக்கொண்ட திருப்தியை நமக்கு கொடுக்கும்.
பீனட் பட்டருடன் ஆப்பிள் : விரைவாக உடல் எடையை குறைக்க வேண்டும் என நினைப்பவர்கள் பீனட் பட்டருடன் ஆப்பிளை சேர்த்து சாப்பிட வேண்டும். பீனட் பட்டரில் உடம்புக்கு தேவையான monounsaturated மற்றும் polyunsaturated கொழுப்புகள் இருப்பதால், உங்கள் வயிறு எப்போதும் நிறைந்திருப்பதை போன்ற உணர்வை தரும். இதனால், அதிகம் சாப்பிடமாட்டீர்கள். மேலும், உங்கள் உடம்புக்கு தேவையான இன்சுலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கவும் இந்த உணவு பயன்படுகிறது. ஆப்பிளில் அதிகப்படியான நார்ச்சத்து இருப்பதால், உங்களின் பசியை திருப்தியடையச் செய்துவிடும்.
கிரீன் டீ - லெமன் : கிரீன் டீ - லெமனை எடுத்துக்கொள்பவர்கள், தங்களின் உடல் எடை சீக்கிரம் குறைவதை உணரலாம். இதில், குறைவான கலோரி மற்றும் தேவையான ஆன்டிஆக்சிடன்ஸ் இருப்பதால் கொழுப்புகளை வேகமாக கரைத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது. ஒருநாளில் 2 அல்லது 3 முறை லெமன் கிரீன் டீயை எடுத்துக்கொள்பவர்களின் உடல் எடை வேகமாக குறைவதுடன், மெட்டபாலிசத்தை அதிகரிப்பதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. லெமனில் இருக்கும் விட்டமின் சி, கிரீன் டீயில் இருக்கும் சத்துகளை ரத்தத்தில் கொண்டு சேர்க்கிறது.