ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைப்பதற்கு தினமும் உடற்பயிற்சி செய்வது மற்றும் உணவு கட்டுப்பாடு ஆகிய இரண்டுமே அவசியம். நடைபயிற்சி, ரன்னிங், ஜாகிங், நீச்சல், ஜிம்மில் உடற்பயிற்சி செய்வது அல்லது ஏரோபிக்ஸ் ஏரோபிக்ஸ் செய்வது, சைக்கில் ஓட்டுவது என்று பல வகையான உடற்பயிற்சி முறைகள் இருக்கின்றன. அதேபோல டயட் கட்டுப்பாடு உணவுகளில் குறைவான கலோரி கொண்ட டயட், மாவுச்சத்து குறைவான அதிக புரோட்டீன் கொண்ட டயட், என்று பல டயட் முறைகள் உள்ளன.
ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைப்பதற்கு தினமும் உடற்பயிற்சி செய்வது மற்றும் உணவு கட்டுப்பாடு ஆகிய இரண்டுமே அவசியம். நடைபயிற்சி, ரன்னிங், ஜாகிங், நீச்சல், ஜிம்மில் உடற்பயிற்சி செய்வது அல்லது ஏரோபிக்ஸ் ஏரோபிக்ஸ் செய்வது, சைக்கில் ஓட்டுவது என்று பல வகையான உடற்பயிற்சி முறைகள் இருக்கின்றன. அதேபோல டயட் கட்டுப்பாடு உணவுகளில் குறைவான கலோரி கொண்ட டயட், மாவுச்சத்து குறைவான அதிக புரோட்டீன் கொண்ட டயட், என்று பல டயட் முறைகள் உள்ளன.
எவ்வளவு தீவிரமான டயட் கட்டுப்பாடு இருந்தாலும் அல்லது உடற்பயிற்சி செய்தாலும் பலராலும் சரியாக அல்லது ஆரோக்கியமான முறையில் எடை குறைக்க முடிவதில்லை. ஒரு சிலருக்கு எடை குறைவதே இல்லை. இதற்கு முக்கிய காரணம் உங்கள் உடலின் வளர்சிதை மாற்றம் அதாவது மெட்டபாலிசம் எந்த வகை என்பதை நீங்கள் தெரிந்து கொண்டால் அதற்கு ஏற்றார்போல உங்களுடைய எடை குறைப்பு முறையை அமைத்து, மிகவும் சுலபமாக எடையை குறைக்கலாம்.
வளர்சிதை மாற்றம் மற்றும் எடை இழப்புக்கும் உள்ள தொடர்பு : மெட்டபாலிக் ஆக்டிவிட்டி அல்லது மெட்டபாலிக் ரேட் என்று கூறப்படும் வளர்ச்சிதை மாற்றத்திற்கும் உடல் எடை இழப்பிற்கும் என்ன சம்பந்தம் என்று உங்களுக்கு கேள்வி எழலாம். அதாவது, உங்கள் உடல் எவ்வளவு சுறுசுறுப்பாக இருக்கிறது என்பதை தீர்மானிக்கும் முறைதான் மெட்டபாலிக் ரேட் ஆகும். நீங்கள் சோம்பேறியாக இருந்தால் உங்கள் மெட்டபாலிசம் குறைவாக இருக்கும். நீங்கள் சுறுசுறுப்பாக செயல்படும் போது உங்கள் மெட்டபாலிக் ரேட் அதிகமாக இருக்கும். அதாவது நீங்கள் உடலுக்கு உழைப்பு கொடுக்கும் எந்த வேலையை செய்தாலும், உங்கள் மெட்டபாலிசம் அதிகரிக்கும். மெட்டபாலிசம் அதிகரிக்க வேண்டும் என்றால் உடலில் உள்ள கலோரிகள் எரியத் தொடங்குகிறது. இதன் மூலம் உடல் எடை குறையும்.
எண்டோமார்ஃப் : இந்த வகையான வளர்சிதை மாற்றம் உள்ள உடலில், அதிக கொழுப்பு மற்றும் குறைவான மஸ்சில் மாஸ் இருக்கும். இவர்களின் உடலில் வளர்சிதை மாற்றம் மிகவும் மெதுவாக இருக்கும். அதாவது, ஸ்லோ மெட்டபாலிக் ரேட். இவர்களின் உடலில் உள்ள கலோரிகள் எரிக்கப்படாமல் இருப்பதால், அவை கொழுப்பாக மாறி எடை கூடும். இந்த வகையான வளர்சிதை மாற்றம் கொண்டவர்கள் மாவு சத்து நிறைந்த உணவுகளான, வெள்ளை அரிசி, வெள்ளை பிரட், பாஸ்டா, கேக் மற்றும் பிஸ்கட்டுகள் போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும். வழக்கத்தைவிட கொஞ்சம் கலோரிகள் குறைவாக உண்பதன் மூலம் எடை குறைக்க முடியும். அது மட்டுமின்றி உடற்பயிற்சியைப் பொறுத்த வரை கார்டியோ மற்றும் ஸ்ட்ரெங்த் டிரைனிங் பயிற்சிகள் உங்களுக்கு எடை குறைக்க உதவும்.
எக்டோமார்ஃப் : இந்த வகையான மெட்டபாலிக் ரேட் கொண்டவர்களுக்கு உடல் இயற்கையாகவே மெலிந்து இருக்கும் மற்றும் இவர்களுக்கு வளர்சிதை மாற்றத்தின் விகிதம் மிகவும் அதிகமாக இருக்கும். சிறிய எலும்பு அமைப்பு, சிறிய தோள்பட்டை, மற்றும் லீன் மஸ்ஸில் ஆகியவை இவர்கள் உடல் அமைப்பில் பொதுவாக காணப்படும். இவர்களால் அவ்வளவு சீக்கிரமாக உடல் எடையை அதிகரிக்க முடியாது. எனவே இவங்களுக்கு எடை குறைக்க வேண்டும் என்பது ஒரு பிரச்னையாகவே இருக்காது.
மீசோமார்ஃப் : நல்ல கட்டுமஸ்தான உடலமைப்பைக் கொண்டவர்கள் இந்த மெட்டபாலிக் ரேட் வகையை சார்ந்தவர்கள். இவர்களுக்கு வளர்சிதை நடுத்தரமாக இருக்கும். கை, கால்கள், வயிறு, மார்பு ஆகிய தொடை பகுதிகளில் தசைகள் அதிகமாக இருக்கும். இவர்கள் அதிகப்படியான புரதம் மற்றும் பழங்கள் காய்கறிகள் ஆகிய உணவுகளை சேர்த்து, கொழுப்பு மற்றும் மாவுச்சத்து உணவுகளைக் கொஞ்சம் குறைத்தாலே உடல் எடையை குறைத்துவிட முடியும். அதுமட்டுமின்றி இவர்கள் மிதமான கார்டியோ உடற்பயிற்சிகளை செய்யலாம். தீவிரமாக உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை.