ஹைப்போ தைராய்டிசம் அல்லது செயல்படாத தைராய்டு சுரப்பி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மெதுவான வளர்சிதை மாற்றத்தால் பெரும்பாலும் உடல் எடை அதிகரிப்பு பிரச்சனையை எதிர்கொள்வர். தைராய்டு ஹார்மோனின் குறைந்த அளவு, உடலில் செலவழிக்கப்படும் ஒட்டுமொத்த ஆற்றல் குறைவதற்கு வழிவகுக்கிறது. அது இறுதியில் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கிறது.
உடற்பயிற்சி செய்வதன் மூலமும், ஆரோக்கியமான உணவை உட்கொள்வதன் மூலமும், ஆரோக்கியமான வாழ்க்கை முறை பழக்கவழக்கங்களைப் பின்பற்றுவதன் மூலமும் உடல் எடையை குறைக்க பல முயற்சிகளை நீங்கள் செய்திருக்கலாம். ஆனால் மீண்டும் உடல்பருமனை விரைவில் பெறக்கூடும். இவ்வளவு முயற்சிகள் எடுத்து அனைத்தும் வீணாகிவிட்டதே என்ற எண்ணம் உங்களுள் தோன்றலாம். இனி எதுவும் வேலை செய்யப்போவதில்லை என்று விரக்தியடையலாம். ஆனால் இந்த சிக்கலை சமாளிக்க எளிதான வழி, உங்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் குறித்து நன்கு புரிந்துகொள்வதே ஆகும்.
ஹைப்போ தைராய்டு உள்ளவர்கள் எதனால் உடல் பருமனை பெறுகிறார்கள்? ஹைப்போ தைராய்டிசம் என்பது பலவீனமான தைராய்டு சுரப்பியின் காரணமாக தைராய்டு சுரப்பி போதுமான தைராய்டு ஹார்மோனை உற்பத்தி செய்யாது, இது தைராய்டு ஹார்மோன்களின் விநியோகத்தை குறைக்கக்கூடும். தைராய்டு சுரப்பி ஹார்மோன்களை இரத்த ஓட்டத்தில் அனுப்புகிறது. இது வளர்சிதை மாற்றத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
மேலும் ஆரோக்கியமான எடையை பராமரிக்க கலோரிகளை எரிக்க உதவுகிறது. ஆனால் இந்த ஹார்மோனின் குறைவான உற்பத்தி உங்கள் உடலில் உப்பு மற்றும் தண்ணீரைத் தக்க வைக்கிறது. இது வீக்கத்திற்கு வழிவகுக்கும். இந்த சிக்கல்களை மனதில் வைத்து, ஹைப்போ தைராய்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஹார்மோன் குறைபாட்டை சரிசெய்வதற்கான உத்திகளைத் தேர்வு செய்ய வேண்டும்.
1. உண்ணும் உணவில் கவனம் செலுத்த வேண்டும் : அனைத்து வெற்றிகரமான எடை இழப்பு திட்டங்களிலும் ஆரோக்கியமான உணவு ஒரு முக்கிய பகுதியாக இருக்கிறது. ஊட்டச்சத்து நிறைந்த உணவை உட்கொள்வது உங்கள் இரத்த சர்க்கரை அளவையும் கொழுப்பையும் கட்டுப்படுத்த உதவும். எனவே நீங்கள் அதிக உடல்பருமனை பெற்றிருந்தால், உங்கள் உணவு முறையை மாற்ற முயற்சிக்கவும்.
குறைந்த புரதம், பச்சை காய்கறிகள், அதிக அளவு அயோடின் கொண்ட உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம். இந்த உணவு முறையை சில வாரங்களுக்கு பின்பற்றி பிறகு உங்கள் உடல் எடையை பரிசோதனை செய்யுங்கள். மேலும் உங்கள் கலோரிகளைக் குறைப்பதில் கவனம் செலுத்த முயற்சி செய்வது மிக அவசியம். அதேபோல உணவில் உள்ள புரதம், கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட்டின் சதவீதத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
3. உங்கள் வொர்க்அவுட்டை வழக்கமாக்குங்கள் : எடை இழப்புக்கான எளிய சூத்திரம் உடற்பயிற்சியாகும். தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய முயற்சி செய்யுங்கள். உங்கள் வொர்க்அவுட்டில் முன்னேற்றம் காண்பதை நிறுத்தும்போது, உங்கள் வழக்கத்தை மாற்றிக் கொள்ளுங்கள் அல்லது சில புதிய உடல் செயல்பாடுகளை முயற்சிக்கவும். உங்கள் உடற்பயிற்சிகளையும் வாரத்திற்கு நான்கு முதல் ஐந்து முறை ஒரு மணி நேர அமர்வுகளாக அதிகரிக்கலாம் அல்லது அதிக வலிமை கொண்ட பயிற்சிகளை அதில் சேர்க்கலாம். நீங்கள் ஒரே மாதிரியான பயிற்சிகளைச் செய்யும்போது, உடல் எடை குறைப்பில் எந்த வித பலனையும் பார்க்கமுடியாது. அதுவே உடற்செயல்பாடுகளை அடிக்கடி மாற்றுவது சில கூடுதல் கிலோவைக் குறைக்க உதவும்.
4. உங்கள் மன அழுத்தத்தை நிர்வகிக்கவும் : எடை அதிகரிப்பதற்கு மன அழுத்தம் ஒரு முக்கிய பங்களிப்பாகும். பாசிட்டிவாக இருப்பது மற்றும் மன அழுத்தமில்லாமல் இருப்பது எடை இழப்பு செயல்முறைக்கு உதவும். உங்கள் மனதை அமைதிப்படுத்த நீங்கள் தியானம் அல்லது யோகா செய்யலாம். மேலும், உங்கள் தூக்க அட்டவணையை நிர்வகிக்க முயற்சிக்கவும். ஒரு ஒழுங்கற்ற தூக்க முறை மன அழுத்தத்திற்கு பங்களிக்கும் மற்றும் உங்கள் எடை இழப்பு முன்னேற்றத்தை நிறுத்தலாம்.
5. லெவோதைராக்ஸின் சிகிச்சை : நீங்கள் ஹைப்போ தைராய்டிசத்தால் பாதிக்கப்பட்டு எடை அதிகரிப்பால் பாதிக்கப்பட்டிருந்தால் லெவோதைராக்ஸின் சிகிச்சையைத் தொடங்குவது பற்றி உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள். லெவோதைராக்ஸின் மருந்துகளின் உட்கொள்ளலை அதிகரிப்பது அல்லது லெவோதைராக்ஸின் உட்கொள்ளத் தொடங்குவது உடல் எடையை குறைக்க உதவும். குறிப்பாக வயதான காலத்தில் இது உதவும். தேசிய சுகாதார நிறுவனங்கள் நடத்திய ஒரு சிறிய ஆய்வில், லியோதைரோனைன் பரிந்துரைக்கப்பட்ட மக்கள் மற்றவர்களுடன் ஒப்பிடும்போது வாரத்திற்கு சராசரியாக சுமார் 270 கிராம் அதிகமாக எடை இழந்துவிட்டதாக தெரியவந்துள்ளது.