முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » லாக்டவுனில் ஜிம் மூடியுள்ளதா..? கலோரிகளை குறைக்கும் ஜிம்முக்கு நிகரான இந்த வீட்டு வேலைகளை செய்யுங்கள்..!

லாக்டவுனில் ஜிம் மூடியுள்ளதா..? கலோரிகளை குறைக்கும் ஜிம்முக்கு நிகரான இந்த வீட்டு வேலைகளை செய்யுங்கள்..!

ஓவர் வெயிட் காரணமாக உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு ஜிம் மூடப்பட்டது என்பது கொஞ்சம் ஏமாற்றமாக இருக்கலாம். கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் நீங்கள் வீட்டில் இருப்பதை தவிர வேறு வழியில்லை.

 • 18

  லாக்டவுனில் ஜிம் மூடியுள்ளதா..? கலோரிகளை குறைக்கும் ஜிம்முக்கு நிகரான இந்த வீட்டு வேலைகளை செய்யுங்கள்..!

  கொரோனா ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் ஜிம் மூடப்பட்டிருக்கிறது. நாள்தோறும் ஜிம்முக்கு சென்று வொர்க் அவுட் செய்பவர்கள்கூட வீட்டிலேயே உடற்பயிற்சி செய்து வருகின்றனர். ஓவர் வெயிட் காரணமாக உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு ஜிம் மூடப்பட்டது என்பது கொஞ்சம் ஏமாற்றமாக இருக்கலாம். கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் நீங்கள் வீட்டில் இருப்பதை தவிர வேறு வழியில்லை. ஆனால், உங்கள் உடல் எடையை குறைக்கும் முயற்சியை கைவிட வேண்டியதில்லை.

  MORE
  GALLERIES

 • 28

  லாக்டவுனில் ஜிம் மூடியுள்ளதா..? கலோரிகளை குறைக்கும் ஜிம்முக்கு நிகரான இந்த வீட்டு வேலைகளை செய்யுங்கள்..!

  வீட்டில் இருந்துவாறு உங்களின் உடல் எடையை குறைக்க முடியும். அன்றாடம் வீட்டில் சேய்ய வேண்டியிருக்கும் ஒரு சில வேலைகளை நீங்கள் செய்தால், உடற்பயிற்சிக்கு இணையான பலன் அதில் கிடைக்கும்.

  MORE
  GALLERIES

 • 38

  லாக்டவுனில் ஜிம் மூடியுள்ளதா..? கலோரிகளை குறைக்கும் ஜிம்முக்கு நிகரான இந்த வீட்டு வேலைகளை செய்யுங்கள்..!

  வீட்டை சுத்தம் செய்தல் : நாள்தோறும் வீட்டு வேலைகளை செய்வது என்பது உங்களுடைய பணத்தை மிச்சப்படுத்துவது மட்டுமல்லாது, உடலில் இருக்கும் தேவையற்ற கலோரிகளை போக்கவும் உதவுகிறது. வீட்டின் தரைதளத்தை சுத்தம் செய்வது சரியான உடற்பயிற்சியாகும். கை, கால் மற்றும் முதுகுபகுதி என அனைத்து உறுப்புகளுக்கும் நல்ல பயிற்சியாக அமையும். முதுகு மற்றும் தோல்பட்டையை பலமாக்குவதுடன், அடிவயிற்றுக்கு நெகிழ்வு தன்மையையும் கொடுக்கிறது.

  MORE
  GALLERIES

 • 48

  லாக்டவுனில் ஜிம் மூடியுள்ளதா..? கலோரிகளை குறைக்கும் ஜிம்முக்கு நிகரான இந்த வீட்டு வேலைகளை செய்யுங்கள்..!

  தரைத்தளத்தை துடைப்பதற்கு இருக்கும் பிரத்யேகமான மாப்பிங் குச்சிகளை பயன்படுத்தாமல், சிறிய துணி ஒன்றை எடுத்து உங்கள் கைகளால் துடைக்கும்போது முழங்காலுக்கு மிகச்சிறந்த பயிற்சியாக அமையும். நாள்தோறும் 10 முதல் 15 நிமிடங்கள் வீடு துடைப்பதை செய்தால், ஜூம்பா மற்றும் ஏரோபாடிக்ஸ் பயிற்சிக்கு இணையான பலனை நீங்கள் பெறுவீர்கள்.

  MORE
  GALLERIES

 • 58

  லாக்டவுனில் ஜிம் மூடியுள்ளதா..? கலோரிகளை குறைக்கும் ஜிம்முக்கு நிகரான இந்த வீட்டு வேலைகளை செய்யுங்கள்..!

  தூசு நீக்குதல் : தூசு படிந்த இடங்களில் இருப்பதையும், சுவாசிப்பதையும் யாரும் விரும்பமாட்டார்கள். ஆனால் வீட்டில் தூசு நிறைந்திருப்பது என்பது இயல்பான ஒன்று. நாள்தோறும் அதனை சுத்தம் செய்ய வேண்டும். கண், மூக்கு, வாய் பகுதியில் தூசுகள் படிந்தால் அதனை உடனடியாக சுத்தம் செய்ய முயற்சிப்போம். அதேபோல், வீட்டில் படியும் தூசுகளையும் நாள்தோறும் சுத்தம் செய்யுங்கள். உங்கள் மீது படிந்திருக்கும் தூசுகளையும் சுத்தம் செய்ய ஒரு சில மணி நேரங்களுக்கு ஒருமுறை இருக்கும் இடத்தில் இருந்து எழுந்து முன்பின் நகர்ந்து, அதனை அகற்றுங்கள். உடல் சுத்தமாக இருக்கும்போது ஆக்டிவாகவும், பிட்னஸாகவும் இருப்பீர்கள்.

  MORE
  GALLERIES

 • 68

  லாக்டவுனில் ஜிம் மூடியுள்ளதா..? கலோரிகளை குறைக்கும் ஜிம்முக்கு நிகரான இந்த வீட்டு வேலைகளை செய்யுங்கள்..!

  துணி துவைத்தல் : வீட்டில் இருக்கும் வேலைகளில் மிகவும் கடினமான வேலையாக உணர வைப்பது துணி துவைப்பது. குடும்ப உறுப்பினர்களின் அனைத்து துணிகளையும் வெளுத்து வாங்குவது என்பது சாதாரணமான விஷயமல்ல. இதனை நீங்கள் செய்யும் போது கை, கால்கள் இருக்கும் தசைகளுக்கு நெகிழ்வுதன்மை உண்டாகும். தண்ணீரில் நனைத்து, துவைத்து, பின்னர் பிழிந்து எடுக்கும் துணிகளை சூரிய வெளிச்சத்தில் காயவைக்கும் வரை ஒரு சுழற்சியான உடற்பயிற்சியை செய்வீர்கள். இந்த பயிற்சியை செய்த பிறகு நிச்சயமாக ரிலாக்ஸாக உணர்வீர்கள்.

  MORE
  GALLERIES

 • 78

  லாக்டவுனில் ஜிம் மூடியுள்ளதா..? கலோரிகளை குறைக்கும் ஜிம்முக்கு நிகரான இந்த வீட்டு வேலைகளை செய்யுங்கள்..!

  சமைத்தல், பொருட்களை கழுவுதல்  : நாள்தோறும் காலை, மாலை இரு வேளைகளும் சமைக்க வேண்டியிருக்கும். உங்களுக்கு சமைக்க தெரியவில்லை என்றாலும், சமைப்பவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுங்கள். நீங்களே சமைக்கும்போது ஆரோக்கியமான உணவை சமைத்து சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு ஏற்படும்.

  MORE
  GALLERIES

 • 88

  லாக்டவுனில் ஜிம் மூடியுள்ளதா..? கலோரிகளை குறைக்கும் ஜிம்முக்கு நிகரான இந்த வீட்டு வேலைகளை செய்யுங்கள்..!

  காய்கறிகளை வெட்டுதல், உரித்தல் மற்றும் சமையல் செய்தபிறகு பொருட்களை சுத்தமாக கழுவிவைத்தல் வரை கை மற்றும் தோள்பட்டைகளுக்கு வேலை இருக்கும். குனிந்து எழும் வேலைகளும் இருப்பதால், அடிவயிற்றுக்கு போதுமான பயிற்சியும் கிடைக்கும். உடல் எடை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள், ஜிம்முக்கு சென்று கிடைக்கும் பலனை விட தினமும் இரடிப்பு பலனை வீட்டில் இருக்கும் வேலைகளை செய்தால் கிடைத்துவிடும்

  MORE
  GALLERIES