பளீச் சருமம், பட்டுபோன்ற தலைமுடி மட்டுமல்ல ஸ்லிம்மான உடலமைப்பிலும் கொரிய மக்கள் கவனம் ஈர்க்க கூடியவர்களாக இருக்கிறார்கள். அதெப்படி கொரியர்கள் மட்டும் தங்களது உடல் எடையை சரியாக பராமரிக்கிறார்கள் என்று என்றாவது யோசித்திருக்கிறீர்களா?. இந்தியர்களைப் போலவே கொரியர்களும் பாரம்பரிய உணவுகளை விரும்பி உண்ணக்கூடியவர்கள். கொரியர்கள் தங்கள் உணவு மற்றும் அவர்கள் உண்ணும் உணவில் உள்ள சத்துக்களில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். ஆச்சரியம் என்னவென்றால், உடல் எடையை குறைக்க அல்லது ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான திட்டமிட்ட உணவாக இல்லாமல், அவர்களது அன்றாட உணவின் அங்கமாகவே மாறியுள்ளது.
1. உணவில் நிறைய காய்கறிகளை சேருங்கள்: காய்கறிகளில் என்ன ஊட்டச்சத்துக்கள் உள்ளன, அதனை தினந்தோறும் உணவில் எடுத்துக்கொள்வதால் நமக்கு என்ன மாதிரியான நன்மைகள் கிடைக்கும் போன்றவற்றை நாம் அனைவரும் நன்கு அறிவோம். எனவே தான் கொரியர்களும் தங்களது உணவில், முள்ளங்கி, பொக்சோய், மூங்கில், கிழக்கு வகைகள் போன்ற பலவகையான காய்கறிகளை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்கின்றனர். இதனால் காய்கறிகளில் இருந்து தேவையான ஊட்டச்சத்துக்களை பெறுவதோடு, எடையை மேலாண்மையையும் சீராக பராமரிக்கின்றனர். ஏனெனில் கூடுதலாக, நீங்கள் எவ்வளவு காய்கறிகளை சாப்பிடுகிறீர்களோ, அவ்வளவு ஆரோக்கியமானதாகவும், எடை குறைவாகவும் உணருவீர்கள்.
2. புளிக்கவைப்பட்ட உணவுகளின் பலன்கள்: புளிக்கவைக்கப்பட்ட உணவுகள் கொரியர்களிடையே பிரபலமாக உள்ளன, மேலும் இது இப்போது பல கலாச்சாரங்களில் பிரபலமாகிவிட்டது. உதாரணமாக, கிம்ச்சி கொரியாவில் மிகவும் பிரபலமான புளித்த உணவுகளில் ஒன்றாகும். பொதுவாக முட்டைக்கோஸ், முள்ளங்கி மற்றும் பச்சை வெங்காயம் மற்றும் உப்பு, சர்க்கரை, வெங்காயம், இஞ்சி, பூண்டு மற்றும் மிளகாய் போன்ற பல்வேறு சுவையூட்டல்களுடன் தயாரிக்கப்படுகிறது. இதை எதனுடனும் சேர்த்து உண்ணலாம் மற்றும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் புரோபயாடிக்கின் நன்மைகள் இருப்பதாக கூறப்படுகிறது.
3. கடல் உணவுகள்: கடல் உணவுகள் புரதத்தின் ஆரோக்கியமான ஆதாரங்கள். இது குறைந்த அளவு ஆரோக்கியமற்ற கொழுப்புகளைக் கொண்டுள்ளது மற்றும் சால்மன், டுனா மற்றும் மத்தி போன்ற சில மீன்களில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. கொரியா நீரால் சூழப்பட்டிருப்பதால், அனைத்து வகையான கடல் உணவுகளும் அவர்களுக்கு கிடைக்கின்றன. கடற்பாசியை கூட வழக்கமான உணவில் ஆரம்பித்து, சூப் வகைகள் வரை பலவற்றிலும் கொரியர்கள் பயன்படுத்துகின்றனர்.
4. பதப்படுத்தப்பட்ட மற்றும் இனிப்புகளின் அளவை குறையுங்கள்: கொரிய வாழ்க்கை முறை மற்றும் உணவின் சிறந்த அம்சங்களில் ஒன்று, அவர்கள் பதப்படுத்தப்பட்ட, துரித உணவுகளை குறைவாக எடுத்துக்கொள்வதும், சர்க்கரையால் செய்யப்பட்ட இனிப்பு மற்றும் பானங்களை தவிர்ப்பதுமே ஆகும். பல்வேறு நாடுகளில் பதப்படுத்தப்பட்ட உணவுகள் உடல் எடையை அதிகரிக்க முக்கிய காரணமாக உள்ள நிலையில், கொரியர்கள் துரித உணவுகளை தவிர்த்து வீட்டிலேயே தயாரிக்கப்படக்கூடிய உணவுகளையே சாப்பிடுகின்றனர்.