"பருமனான பெண்கள் பெரும்பாலும் கர்ப்பம் தரிப்பதில் சிரமம் இருப்பதாக பல ஆய்வுகள் வெளியாகியுள்ளன," என்று வர்ஜீனியா பல்கலைக்கழக மருத்துவப் பள்ளியின் இனப்பெருக்கத்திற்கான ஆராய்ச்சி மையத்தின் ஆராய்ச்சியாளர் டேனியல் ஜே. ஹைசென்லெடர் கூறியுள்ளார். "இந்த காரணத்திற்காக, பல மருத்துவர்கள் கருத்தரிப்பதற்கு முன்பு எடை குறைக்க ஆலோசனை கூறுகிறார்கள். இருப்பினும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஒப்பிடும் சில ஆய்வுகள் உள்ளன - அதாவது, இந்த ஆய்வில் உடற்பயிற்சி மற்றும் எடை இழப்பு பழக்கங்களை ஒப்பிடுகிறது.
நாடு முழுவதும் உள்ள ஒன்பது கல்வி மருத்துவ மையங்களில் நடத்தப்பட்ட FIT-PLESE ஆய்வு, பங்கேற்பாளர்களை இரண்டு குழுக்களாகப் பிரித்தது. பாதிப் பெண்கள் டயட் உணவு, மருந்துகள் மற்றும் அதிக உடற்பயிற்சி என தீவிர உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொண்டனர். மற்ற பாதி பெண்கள் எடைக் குறைப்பில் ஈடுபடாமல் வெறும் உடல் உழைப்பை மட்டும் செய்தனர். இந்த பயிற்சிகள் முடித்த பிறகு, இரு குழுக்களுக்கும் மூன்று சுற்றுகளுக்கு நிலையான கருவுறாமை சிகிச்சை வழங்கப்பட்டது.
இறுதியில், ஆரோக்கியமான பிறப்புகளின் அதிர்வெண் அடிப்படையில் இரு குழுக்களிடையே குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் எதுவும் இல்லை. மொத்தத்தில், 16 வார தீவிர எடை இழப்பு திட்டத்தை முடித்த 188 பெண்களில் 23 பேர் குழந்தையை ஆரோக்கியமான முறையில் பெற்றெடுத்தனர். உடற்பயிற்சி மட்டுமே செய்த 191 பேரில், 29 பேர் ஆரோக்கியமான முறையில் குழந்தையை பெற்றெடுத்தனர்.
எவ்வாறாயினும், தீவிர உணவுக் கட்டுப்பாடு பயிற்சியை மேற்கொண்ட பெண்களுக்கு ஆரோக்கிய நன்மைகள் கிடைத்தன. அதாவது அந்த பெண்களுக்கு பவுண்டுகள் குறைவதைத் தவிர, மெட்டபாலிக் சிண்ட்ரோம், நீரிழிவு, பக்கவாதம் மற்றும் இதய நோய் போன்ற கடுமையான உடல்நலப் பிரச்சினைகளுக்கான ஆபத்துக் காரணிகள் எதுவும் இல்லை என்பதை அறிந்தனர்.
அவர்களின் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், ஹைசென்லெடரும் அவரது ஒத்துழைப்பாளர்களும் கொடுத்த ஆய்வின் முடிவில் உடல் எடையை குறைக்க தீவிர முயற்சிகளில் ஈடுபட்ட பெண்களையும், எந்த தீவிரமும் காட்டாமல் உடற்பயிற்சிகளை மட்டுமே மேற்கொண்ட பெண்களையும் ஒப்பிடும்போது அவர்களின் குழந்தைப் பிறப்பிலும், கருவுறுதலிலும் எந்த வித பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்று கூறியுள்ளனர். அதாவது எடைக் குறைப்பு கருவுறுதலுக்கு பெரிதாக உதவாது என்று முடித்துள்ளனர். எடைக் குறைப்பால் மற்ற உடல் நல பாதிப்புகளிலிருந்து தீர்வு அளிக்கலாம். ஆனால் கருவுறுதலுக்கும் இதுதான் வழி என்பது உண்மையல்ல என்பது எங்கள் ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர்.
"எங்கள் ஆய்வில் எடை இழப்பு வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்தை மேம்படுத்தியது. ஆனால் கருவுறுதலை மேம்படுத்தவில்லை" என்று ஹைசென்லெடர் கூறினார். "இன்றைய மக்களிடையே கருவுறாமை ஒரு முக்கியமான சுகாதாரப் பிரச்சினையாகவே உள்ளது, மேலும் எதிர்காலத்தில் இந்த சிக்கலைத் தீர்க்க கூடுதல் ஆய்வுகள் தேவைப்படும்." என்றுஅ அவர் தன் உரையை முடித்துள்ளார்.