ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » உடல் எடையைக் குறைக்கணுமா..? இந்த 5 சூப் வகைகளை ட்ரை பண்ணுங்க...

உடல் எடையைக் குறைக்கணுமா..? இந்த 5 சூப் வகைகளை ட்ரை பண்ணுங்க...

அதிகப்படியான பால் மற்றும் விலங்கு கொழுப்புகள் சேர்க்கப்படாத சூப் வகைகள் உடல் எடையைக் குறைக்க சரியான சாய்ஸ் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றன. எனவே உடல் எடையைக் குறைக்க உதவும் சில சூப் வகைகள் குறித்து பார்க்கலாம்...

 • 16

  உடல் எடையைக் குறைக்கணுமா..? இந்த 5 சூப் வகைகளை ட்ரை பண்ணுங்க...

  உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றால், ஊட்டச்சத்து மிக்க உணவு வகைகள் மிகவும் அவசியமாகும். குறிப்பாக உடல் எடையைக் குறைக்க விரும்புவோருக்கும், எடையைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள விரும்புவோருக்கும் எண்ணெய் மற்றும் கொழுப்பு இல்லாத சூப் வகைகள் சரியான சரிவிகித உணவாக கருதப்படுகிறது. காய்கறிகள், இறைச்சிகள், பருப்புவகைகள் என எதை வேண்டுமானாலும் கொண்டு எளிதான முறையில் தயாரிக்கக்கூடிய சூப் வகைகள் செரிமானத்திற்கு ஏற்றதாக இருப்பதால் குடல் ஆரோக்கியத்திற்கும் நல்லதாகும்.

  MORE
  GALLERIES

 • 26

  உடல் எடையைக் குறைக்கணுமா..? இந்த 5 சூப் வகைகளை ட்ரை பண்ணுங்க...

  1. காய்கறி சூப் : சுவையான, சத்தான காய்கறி சூப்பைப் பொறுத்தவரை நீங்கள் வீட்டில் இருக்கக்கூடிய அல்லது உங்களுக்கு மிகவும் பிடித்தமான எந்த காய்கறிகளை வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளலாம். முதலில் காய்கறிகள் அனைத்தையும் வேகவைத்து, அதனை மிக்ஸியில் போட்டு பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு கடாயில் வெண்ணெய் சேர்த்து, அத்துடன் பேஸ்ட் ஆக்கப்பட்ட கலவையை போதுமான அளவு தண்ணீர் சேர்த்து ஊற்றவும். அத்துடன் உப்பு மற்றும் மிளகு தூள் கலந்து கொதிக்க வைத்து பரிமாறலாம்.

  MORE
  GALLERIES

 • 36

  உடல் எடையைக் குறைக்கணுமா..? இந்த 5 சூப் வகைகளை ட்ரை பண்ணுங்க...

  2. சிக்கன் சூப் : சிக்கன் சூப் செய்வதும் காய்கறி சூப்பைப் போல மிகவும் எளிமையானது. குறைந்த கொழுப்பு கொண்ட கோழியின் துண்டுகளை நன்றாக வேகவைத்து. அதன் தண்ணீரை மட்டும் எடுத்துக்கொள்ளவும். அத்துடன் ஒரு சிட்டிகை உப்பு, மிளகு, சில பூண்டு சேர்த்து சூடாக பரிமாறலாம். இத்துடன் கேரட், சோளம், பீன்ஸ், முட்டைகோஸ் போன்றவற்றையும் பொடியாக நறுக்கிச் சேர்த்துக்கொண்டால் சுவையும், ஆரோக்கியமும் டபுளாக கிடைக்கும்.

  MORE
  GALLERIES

 • 46

  உடல் எடையைக் குறைக்கணுமா..? இந்த 5 சூப் வகைகளை ட்ரை பண்ணுங்க...

  3. கேரட் சூப் : சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கேரட் பிடிக்காவதர்கள் இருக்க முடியாது. கண்ணைக் கவரும் ஆரஞ்சு வண்ணத்தில், நல்ல கிரீமியான கேரட் சூப் செய்ய, ஒரு கடாயில் வெண்ணெய் சேர்த்து அது உருகியதும். வெங்காயம், பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும். அத்துடன் வெட்டி வைத்த கேரட் துண்டுகளையும் சேர்த்து நன்றாக தண்ணீர் விட்டு வேக வைக்க வேண்டும். இந்த கலவை நன்றாக ஆறிய பின்னர், மிக்ஸியில் நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.இதனை மீண்டும் ஒரு பாத்திரத்திற்கு மாற்றி, உப்பு, மிளகு தூள் சேர்த்து கொதிக்க வைத்து, சில துளிகள் எலுமிச்சை சாறு கலந்து பரிமாறவும்.

  MORE
  GALLERIES

 • 56

  உடல் எடையைக் குறைக்கணுமா..? இந்த 5 சூப் வகைகளை ட்ரை பண்ணுங்க...

  4. பூசணிக்காய் சூப் : நன்றாக ழுத்த பூசணிக்காயின் மேற்புறத்தோலை நீக்கிவிட்டு, பெரிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். அதனை வெண்ணெய் சேர்க்கப்பட்ட ஒரு கடாயில் சேர்த்து, அத்துடன் இஞ்சி, பூண்டு விழுது சேர்க்கவும். அவை நன்றாக வதங்கியதும். சிக்கன் ஸ்டாக் அல்லது தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். பூசணிக்காய் நன்றாக வெந்து மென்மையான கூழாக மாறும் வரை வேகவைக்க வேண்டும். இப்போது இந்த சூடான கலவையில் உப்பு மற்றும் மிளகு சேர்த்து சுவைக்கலாம்.

  MORE
  GALLERIES

 • 66

  உடல் எடையைக் குறைக்கணுமா..? இந்த 5 சூப் வகைகளை ட்ரை பண்ணுங்க...

  5. பாலக்கீரை சூப் : ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு பாலக் சூப் அவசியமான ஒன்றாகும். ஒரு கடாயில் வெண்ணெய் சேர்த்து நறுக்கிய வெங்காயம் மற்றும் சில பூண்டு பற்களைச் சேர்க்கவும். அவை பொன்னிறமாக வதங்கியதும், அத்துடன் தேவையான அளவு பாலக்கீரை சேர்த்து வதக்க வேண்டும். இதனை மிக்ஸியில் போட்டு மென்மையான பேஸ்ட்டாக அரைத்துக்கொள்ளவும். இத்துடன் சிறிதளவு கடலை மாவு கலந்து, அதன் பச்சவாசனை போகும் வரை கொதிக்க வேண்டும். கடைசியாக உப்பு மற்றும் மிளகு தூள் தூவி பரிமாறலாம்.

  MORE
  GALLERIES