இனவிருத்திக்காக மட்டுமல்லாமல், எந்த ஒரு ஆணும், பெண்ணும் உடல் ரீதியாக மற்றும் மன ரீதியாக இன்புற்றிருக்க அடிப்படையாக இருப்பது பாலியல் உறவாகும். பருவ வயதிலேயே நமக்கு பாலியல் வேட்கை தொடங்கி விடுகிறது. ஆனால், அதில் இருக்கும் சிக்கல்கள் குறித்து நாமும் யாரிடமும் கேட்பதில்லை அல்லது தாமாக முன்வந்து நமக்கு யாரும் சொல்லித் தருவதில்லை.
நீங்கள் தயாரா? ஜஸ்ட் ஓகே என்று நொடிப் பொழுதில் தயாராகும் விஷயமல்ல இது. பாலியல் உறவுக்கு நம் உடலும், உள்ளமும் தயார் நிலையில் இருக்க வேண்டும். இரண்டில் எது ஒன்றுக்கு விருப்பமில்லை என்றால் உறவு என்பது சிக்கலாகிவிடும். உங்கள் மனமும், உள்ளமும் விரும்புகிறது என்றால் மட்டும் இதை முன்னெடுத்து செல்லவும். இல்லை என்றால் கட்டாயமாக மறுத்து விடவும்.
பொசிஷன் : ஒவ்வொரு நபருக்கு ஒவ்வொரு செக்ஸ் பொசிஷன் சௌகரியமானதாக அமையும். உங்களுக்கு எது பிடித்திருக்கிறது என்பதை தெரிந்து கொண்டு, அதன் அடிப்படையில் முயற்சி செய்யவும். இது மனதில் நம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும். உடல் இலகுவாக உணரும். குறிப்பாக சில பொசிஷன்களில் வலி அதிகமாக இருக்கும். அவற்றை தவிர்க்கவும்.
அமைதியான சூழல் : எந்தவித தொந்தரவு, இரைச்சல் இல்லாத அமைதியான இடத்தில் முதல் அனுபவத்தை முயற்சி செய்யவும். கார், சின்ன அறைகள் போன்ற இடங்களில் இதை நீங்கள் முயற்சி செய்தால் சௌகரியம் போதுமான அளவில் இருக்காது. அதுவே கூட அதிக வலி ஏற்படக் காரணமாகும். குறிப்பாக, முதல்முறை அதிக நேரமெடுத்து ரிலாக்ஸாக முயற்சிக்கலாம்.