முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » சமீப நாட்களாக மிகவும் மன அழுத்தமாக உணர்கிறீர்களா..? அதிலிருந்து மீண்டு வர இதை ஃபாலோ பண்ணுங்க..!

சமீப நாட்களாக மிகவும் மன அழுத்தமாக உணர்கிறீர்களா..? அதிலிருந்து மீண்டு வர இதை ஃபாலோ பண்ணுங்க..!

சில நேரங்களில் மன அழுத்தம் அதிகமாகும் போதும் கவலைகள் அதிகரிக்கும் போதும் அவற்றை பலர் புரிந்து கொள்ளாமல் போக வாய்ப்புள்ளது. மன அழுத்தத்தில் இருந்து வெளிவர முடியவில்லை எனில் மேலும் சில வழிகளை கடைபிடிக்கலாம்.

 • 18

  சமீப நாட்களாக மிகவும் மன அழுத்தமாக உணர்கிறீர்களா..? அதிலிருந்து மீண்டு வர இதை ஃபாலோ பண்ணுங்க..!

  இன்றைய நவீன யுகத்தில் அனைவரும் தங்களது வாழ்க்கை முறையை மேம்படுத்திக் கொள்ள இயந்திரத்தைப் போல ஓடிக் கொண்டிருக்கின்றனர். அதில் சிலருக்கு தங்களது தனிப்பட்ட வாழ்க்கையை கூட கவனிக்காமல், வேலை வேலை என்று அல்லாடி கொண்டிருக்கின்றனர். சில சமயங்களில் இது வேலை தவிர்த்து வேறு சில தனிப்பட்ட காரணங்களினால் பலருக்கு மன அழுத்தங்கள் உண்டாகக்கூடும். அதிலிருந்து வெளிவருவதற்கு என்னதான் வழி?

  MORE
  GALLERIES

 • 28

  சமீப நாட்களாக மிகவும் மன அழுத்தமாக உணர்கிறீர்களா..? அதிலிருந்து மீண்டு வர இதை ஃபாலோ பண்ணுங்க..!

  காரணத்தை கண்டறிவது :முதலில் நாம் எதனால் மன அழுத்தத்திற்கு உள்ளாகி உள்ளோம் என்பதை கண்டறிய வேண்டும். அந்த காரணத்தை கண்டறிந்தாலே பாதி பிரச்சனை தீர்ந்தது போல் ஆகிவிடும். ஆனால் பலர் செய்யும் முக்கிய தவறே மன அழுத்தத்தை மறப்பதற்கு வேறு பல கெட்ட பழக்கங்களை சேர்த்துக் கொள்கின்றனர். உதாரணத்திற்கு மது குடிப்பது, புகை பழக்கம் போன்ற பல்வேறு தீய பழக்கங்களை உண்டாக்கிக் கொள்கின்றனர். இதன் மூலம் தாங்கள் செய்து செயல்களில் இருந்தும் பொறுப்புகளில் இருந்தும் வெளிவந்து விடலாம் என்று தோற்றத்தை உண்டாக்கிக் கொள்கின்றனர். இதுபோன்று தவறுகளை செய்யாமல் நம்முடைய செயல்களுக்கு நாமே பொறுப்பு என்று பொறுப்பு ஏற்றுக்கொண்டு பிறகு அதில் இருந்து எவ்வாறு வெளிவருவது என்பதை பற்றி யோசிக்க வேண்டும்

  MORE
  GALLERIES

 • 38

  சமீப நாட்களாக மிகவும் மன அழுத்தமாக உணர்கிறீர்களா..? அதிலிருந்து மீண்டு வர இதை ஃபாலோ பண்ணுங்க..!

  உங்களுக்கென ஒரு வட்டத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அது நண்பர்கள் குழுவாகவோ அல்லது உடன் வேலை பார்க்கும் நபர்களாகவும் அல்லது நேர்மறை எண்ணங்கள் கொண்ட நபர்களையும் உங்களது நட்பு வட்டத்தை வைத்துக் கொள்ளலாம். ஒருவேளை உங்களால் மன அழுத்தத்தில் இருந்து வெளிவர முடியவில்லை எனில் மேலும் சில வழிகளை கடைபிடிக்கலாம்.

  MORE
  GALLERIES

 • 48

  சமீப நாட்களாக மிகவும் மன அழுத்தமாக உணர்கிறீர்களா..? அதிலிருந்து மீண்டு வர இதை ஃபாலோ பண்ணுங்க..!

  உணர்வுகளை எழுதுவது :உங்களது எண்ணங்கள் மற்றும் உணர்வுகளை எழுதுவது மன அழுத்தத்தை கண்டிப்பாக குறைக்கும். மேலும் சில நேரங்களில் உங்களுக்கே தெரியாமல் உங்களால் மனதில் புதைந்துள்ள உணர்வுகளும் வெளிக்கொண்டுவரும். இதில் உங்கள் கையெழுத்தோ அல்லது உங்களது எழுத்து நடையும் விஷயமே கிடையாது. எழுதுவதன் மூலம் உணர்வுகளை வெளித்தள்ளி உங்களை நிம்மதியாக வைத்துக் கொள்ள வேண்டும் அதுதான் இலக்கு.

  MORE
  GALLERIES

 • 58

  சமீப நாட்களாக மிகவும் மன அழுத்தமாக உணர்கிறீர்களா..? அதிலிருந்து மீண்டு வர இதை ஃபாலோ பண்ணுங்க..!

  தனிப்பட்ட நேரம் ஒதுக்க வேண்டும் : உங்களுக்கென நேரம் ஒதுக்கி உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் செயல்களை செய்ய வேண்டும். சிலர் ஓடியாடி கடினமாக உழைப்பதனால் தான் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதை மறந்து விடுகிறார்கள். எனவே முடிந்த அளவு உங்களது குடும்பத்தினருடனும் அல்லது நீங்கள் நேசிக்கும் வேறு பல விஷயங்களையும் செய்வதற்கு நேரம் ஒதுக்கி அவற்றில் ஈடுபட வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 68

  சமீப நாட்களாக மிகவும் மன அழுத்தமாக உணர்கிறீர்களா..? அதிலிருந்து மீண்டு வர இதை ஃபாலோ பண்ணுங்க..!

  மற்றவர்களுடன் நேரம் செலவிடுதல் : சில நேரங்களில் மன அழுத்தம் அதிகமாகும் போதும் கவலைகள் அதிகரிக்கும் போதும் அவற்றை பலர் புரிந்து கொள்ளாமல் போக வாய்ப்புள்ளது. அது போன்ற நேரங்களில் உங்களை மிகவும் நன்றாக புரிந்து வைத்துள்ள நண்பர்களுடனும் அல்லது குடும்பத்தாரிடனும் நேரம் செலவிட முயற்சி செய்யலாம். இதைத் தவிர நண்பர்களோடு இங்கேயும் ஊர் சுற்றி வருவது ஒன்று செல்களின் மூலம் மன அழுத்தத்தை குறைக்கலாம்.

  MORE
  GALLERIES

 • 78

  சமீப நாட்களாக மிகவும் மன அழுத்தமாக உணர்கிறீர்களா..? அதிலிருந்து மீண்டு வர இதை ஃபாலோ பண்ணுங்க..!

  தியானம் : தியானம் செய்வது மன அழுத்தத்தை குறைப்பதற்கு நீண்ட காலமாக பயன்படுத்தி வரும் ஒரு முறையாகும். நீங்கள் சரியான முறையில் தியானம் செய்தீர்கள் என்றால் உங்களது மன அழுத்தம் மட்டுமல்லாமல் உடலின் ஒட்டு மொத்த ஆரோக்கியமும் மேம்படும். இதைத் தவிர மிக அமைதியான ஒரு மன நிலையில் எந்த ஒரு பிரச்சனை வந்தாலும் அணுகக்கூடிய ஒரு நபராக மாறிவிடுவீர்கள்.

  MORE
  GALLERIES

 • 88

  சமீப நாட்களாக மிகவும் மன அழுத்தமாக உணர்கிறீர்களா..? அதிலிருந்து மீண்டு வர இதை ஃபாலோ பண்ணுங்க..!

  மருத்துவ சிகிச்சை : மேலே கூறிய எதுவும் சரிவரவில்லை என்றால் நீங்கள் ஒரு மருத்துவரை அணுகுவது நல்லது. மனநல மருத்துவரிடம் உங்களது அனைத்து குறைகளையும் சொல்லி உங்களை முழுவதுமாக மன அழுத்தத்தில் இருந்து வெளிக்கொண்டுவர முயற்சி செய்ய வேண்டும்.

  MORE
  GALLERIES