முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » தர்பூசணி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன..?

தர்பூசணி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன..?

மக்கள் அனைவரும் சுட்டெரிக்கப் போகும் வெயில் காலத்திற்கு தயாராகி வருகிறார்கள். வழக்கம் போலவே வெயில் காலத்தில் கிடைக்கும் பழ வகைகளுக்கான எதிர்பார்ப்பும் இப்போதே அதிகரிக்க துவங்கி விட்டது.

  • 110

    தர்பூசணி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன..?

    மக்கள் அனைவரும் சுட்டெரிக்கப் போகும் வெயில் காலத்திற்கு தயாராகி வருகிறார்கள். வழக்கம் போலவே வெயில் காலத்தில் கிடைக்கும் பழ வகைகளுக்கான எதிர்பார்ப்பும் இப்போதே அதிகரிக்க துவங்கி விட்டது.

    MORE
    GALLERIES

  • 210

    தர்பூசணி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன..?

    அந்த வகையில் வெயில் காலத்தில் மட்டுமே கிடைக்கும் தர்பூசணி பழத்தை பற்றி நாம் இப்பொழுது பார்க்கப் போகின்றோம். அதிக அளவு நீர்ச்சத்துடனும், மிகுந்த சுவையுடனும் இருக்கும் தர்பூசணி நம் உடலை போதுமான அளவு நீர் சத்துடன் வைத்திருக்க உதவுகிறது. மேலும் உடலுக்கு குளிர்ச்சியும் அளிப்பதால் எங்கேனும் வெளியிடங்களுக்கு செல்லும்போது முடிந்த அளவு தர்ப்பூசணி பழத்தை சாப்பிடுவது நல்லது.

    MORE
    GALLERIES

  • 310

    தர்பூசணி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன..?

    அதே சமயத்தில் தர்பூசணியை நாம் அளவுக்கதிகமாக சாப்பிட கூடாது. தர்பூசணியை காலை உணவின் போது அல்லது காலை உணவிற்கும் மதிய உணவிற்கும் இடைப்பட்ட வேளையிலும் சாப்பிடலாம். இதைத் தவிர மாலை நேரங்களிலும் தர்பூசணி பழத்தை நாம் சாப்பிடலாம். ஆனால் இரவு நேரங்களில் தர்பூசணி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் ஏனெனில் சில நேரங்களில் வயிற்று சம்பந்தப்பட்ட கோளாறுகள் உண்டாகலாம். தர்பூசணி பழம் உண்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி இப்போது பார்ப்போம்.

    MORE
    GALLERIES

  • 410

    தர்பூசணி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன..?

    நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது: தர்பூசணியில் வைட்டமின் சி அதிக அளவு நிறைந்துள்ளது. நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்திக்கு மிகவும் முக்கியமான இந்த ஊட்டச்சத்தை அதிகம் கொண்டுள்ளதால் தர்பூசணி உட்கொள்வதன் மூலம் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ள முடியும். இதைத் தவிர நம் முடி மற்றும் சருமத்திற்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய வைட்டமின் பி மற்றும் பீட்டா கரோட்டின் ஆகியவையும் இதில் அதிகம் நிறைந்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 510

    தர்பூசணி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன..?

    நீரிழிவு நோய் உள்ளவர்களும் உட்கொள்ளலாம்: தர்பூசணியில் விளக்கும் பல்வேறு நபர்களும் அதில் அதிக சர்க்கரை நிறைந்துள்ளதாக நம்புகின்றனர். ஏனெனில் அதிக இனிப்பு சுவையுடன் இருப்பதால் அதில் அதிக சர்க்கரை நிறைந்துள்ளது என்பது அவர்களின் நம்பிக்கை ஆனால் உண்மையிலேயே ஆய்வுகளின் அடிப்படையில் பார்க்கையில் ஒரு முழு தர்பூசணியில் 6.2 கிராமிலிருந்து அதிகபட்சம் 100 கிராம் வரையிலான சர்க்கரையே நிறைந்துள்ளதாக அறிக்கையில் தெரியவந்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 610

    தர்பூசணி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன..?

    உடல் எடையை குறைக்க உதவுகிறது: தர்பூசணியில் அதிக அளவு நீர் சத்தும் நார்ச்சத்தும் நிறைந்துள்ளது. இதன் காரணமாக உணவு உண்டபின் மிக விரைவில் மீண்டும் பசி எடுப்பதை இது தடுக்கிறது. நீங்கள் சிறிதளவு தர்ப்பூசணியை நொறுக்கு தீனியாக எடுத்துக் கொண்டாலும், அது நீண்ட நேரத்திற்கு உங்களை பசி இல்லாமல் வைத்திருக்க உதவும்.

    MORE
    GALLERIES

  • 710

    தர்பூசணி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன..?

    இதைத் தவிர தர்பூசணியில் கலோரிகள் மிக குறைவாக இருப்பதால், உடல் எடை கூடுவதைப் பற்றி நாம் கவலை கொள்ள தேவையில்லை. அதற்கு பதிலாக தர்பூசணி உட்கொள்வதால் கிடைக்கும் கலோரிகளை விட நமது உடல் அந்த தர்பூசணியை செரிமானம் செய்வதற்கு எடுத்துக் கொள்ளும் கல்லூரிகள் அதிகமாக இருப்பதால் இவை உடல் எடையை குறைக்க உதவுகிறது.

    MORE
    GALLERIES

  • 810

    தர்பூசணி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன..?

    இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது: தர்பூசணியில் உள்ள லைகோபின் என்பது நமது இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இது ரத்த அழுத்தத்தை சரியான அளவில் வைத்து நமது உடலில் உள்ள கொலச்ற்றாளின் அளவை குறைக்க உதவுகிறது. மேலும் தர்பூசணியில் உள்ள அமினோ அமிலம் நைட்ரிக் ஆக்சைடை உற்பத்தி செய்து ரத்த அழுத்தம் அதிகரிப்பதை தடுக்கிறது.

    MORE
    GALLERIES

  • 910

    தர்பூசணி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன..?

    கண்பார்வையை மேம்படுத்த உதவுகிறது: தர்பூசணியில் உள்ள லைகோபினில் ஆன்ட்டி ஆக்சிடென்ட் தன்மை அதிகம் நிறைந்துள்ளது மேலும் அழற்சி தன்மைக்கு எதிராகவும் செயல்படுகிறது. இதன் காரணமாக தர்பூசணியை போதுமான அளவு உட்கொள்ளும் போது, வயதானவர்களுக்கு உண்டாகும் பார்வை குறைபாடுகள் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.

    MORE
    GALLERIES

  • 1010

    தர்பூசணி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன..?

    ஈறுகளுக்கு பாதுகாப்பு அளிக்கிறது: தர்பூசணியில் அதிகம் நிறைந்துள்ள வைட்டமின் சி நமது ஈறுகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும் ஈறுகளில் உண்டாகும் பாக்டீரியா தொற்றுக்களில் இருந்தும் பாதுகாப்பு அளிக்கிறது. தர்பூசணி உட்கொள்வதால் பற்கள் பளிச்சென்று இருக்க உதவுவதோடு மட்டுமல்லாமல் உதடுகள் வறண்டு போவதையும் தடுக்க உதவுகிறது.

    MORE
    GALLERIES