இந்த கருத்திற்கு வலு சேக்கும் விதமாக சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்று வாட்டர் ஃப்ளூரைடேஷன் (Water Fluoridation) பல் சிதைவைத் தடுப்பதில் நிலையான நுட்பமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளது. பல நாடுகளின் சமூகங்களில் ஃப்ளூரைடேட்டட் செய்யப்பட்ட குடிநீர் கிடைக்கிறது. புதிய ஆய்வின் ஆராய்ச்சி கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், வாட்டர் ஃப்ளூரைடேஷன் சுற்றுச்சூழலில் குறைந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மேலும் சிறந்த மற்றும் ஆரோக்கியமான பல் சுகாதாரத்திற்கு ஏற்ற முறை எனப் பரிந்துரைக்கப்படுகிறது.
ஃப்ளூரைடேட்டட் வாட்டர் (Fluoridated Water)என்பது குடி தண்ணீரில் ஃப்ளூரைட் என்ற கெமிக்கல் கலவையைத் தேவையான அளவு கலந்து அந்த தண்ணீரைப் பொதுமக்களுக்கு வினியோகிக்கும் முறை ஆகும். ஒரு லிட்டர் தண்ணீருக்குத் தோராயமாக 0.7 ppm அல்லது 0.7 மில்லிகிராம் ஃப்ளூரைட் சேர்ப்பது சிறந்தது எனக் கூறப்படுகிறது. இதனிடையே புதிய ஆய்வின் கண்டுபிடிப்புகள், பல் சொத்தை பிரச்சனைகளைக் குறைக்க, ஃப்ளூரைடேட்டட் வாட்டர் நுகர்வு பெரிதும் உதவும் என்று கூறுகிறது.
சமீபத்திய ஆய்வில் 5 வயதுக் குழந்தைக்கு வாட்டர் ஃப்ளூரைடேஷனின் சுற்றுச்சூழல் தாக்கத்தை ஆய்வாளர்கள் சுமார் ஒரு வருடகாலம் கணக்கிட்டனர். ஆய்வாளர்கள் இந்த முடிவை இங்கிலாந்து மற்றும் வெளிநாடுகளில் ஃப்ளூரைட் வார்னிஷ் மற்றும் டூத்பிரெஷ்ஷிங் ப்ரோகிராம்களின் ட்ரெடிஷ்னல் யூசேஜுடன் ஒப்பிட்டனர். தற்போது உலக மக்கள் தொகையில் 35%-க்கும் அதிகமானோர் ஃப்ளூரைடேட்டட் குடிநீரைப் பெறும் சூழலில் , ஆய்வுகள் பல் சொத்தை பிரச்சனைகள் கணிசமாகக் குறைந்துள்ளதை வெளிப்படுத்தி உள்ளன.
இந்த நீரின் மருத்துவ செயல்திறன் மற்றும் செலவு-பயன் பற்றிய புள்ளிவிவரங்கள் கிடைத்தாலும் இதன் சுற்றுச்சூழல் தாக்கத்திற்கு தற்போது பெரியளவில் ஆதாரம் இல்லை. எனவே ஆய்வாளர்கள் பல் துலக்குதல், ஃப்ளூரைடு வார்னிஷ் திட்டங்கள் மற்றும் வாட்டர் ஃப்ளூரைடேஷன் உள்ளிட்டவற்றில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பயணம், எடை மற்றும் அனைத்து பொருட்களின் அளவு உள்ளிட்டவற்றை உன்னிப்பாகக் கணக்கிடுவதன் மூலம் லைஃப் சைக்கிள் அசஸ்மென்டை நடத்தியது.
தங்கள் ஆய்வு பற்றிப் பேசிய டிரினிட்டி கல்லூரியின் பல் பொதுச் சுகாதார இணைப் பேராசிரியர் Brett Duane, ஆய்வு செய்யப்பட்ட அனைத்து வகைகளிலும் மிகக் குறைந்த சுற்றுச்சூழல் தாக்கத்தை வாட்டர் ஃப்ளூரைடேஷன் ஏற்படுத்தியதாகக் குறிப்பிட்டு உள்ளார். காலநிலை பிரச்சனை மோசமாவதால் சுகாதார-பராமரிப்பு அமைப்புகளில் ஏற்படும் சுற்றுச்சூழல் தாக்கத்தைக் குறைக்க நோயைத் தவிர்ப்பதற்கான உத்திகளை இன்னும் கண்டறிய வேண்டும். அதே போல எங்கள் ஆய்வு வாட்டர் ஃப்ளூரைடேஷன் குறைந்த கார்பன் தடயத்தைக் கொண்டுள்ளது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது என்றார்.