நாம் எடுத்து கொள்ளும் உணவுகள் நேரடியாக பல நோய்களுடன் தொடர்புடையவையாக இருக்கின்றன. ஆரோக்கிய உணவுகள் அடங்கிய டயட்டை பின்பற்றாமல் இருப்பது ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்க காரணமாகிறது. ஆனால் பலரும் கொலஸ்ட்ரால் விஷயத்தில் அலட்சியமாக இருக்கிறார்கள். ஆனால் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவதை புறக்கணிப்பது உயிருக்கு ஆபத்தானது.
கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பு, தொடக்கத்தில், நீண்ட நேரம் நீடித்தால் பெரிய பிரச்சனை இல்லை என்றாலும், மாரடைப்பு போன்ற நிலைகளையும் ஏற்படுத்தும். கொலஸ்ட்ரால் அளவு பெரிய விகிதத்தில் அதிகரிப்பது ஹார்ட் அட்டாக் போன்ற தீவிர நிலைகளுக்கு வழிவகுக்கும். LDL மற்றும் HDL என முக்கியமாக 2 வகை கொலஸ்ட்ரால்கள் இருக்கின்றன.
இதில் LDL கெட்ட கொலஸ்ட்ரால் ஆகும், அதே நேரம் HDL உடலின் செயல்பாட்டிற்கு அவசியமான நல்ல கொலஸ்ட்ரால் ஆகும். LDL கொலஸ்ட்ரால் அதிகரித்தால் துவக்கத்திலிருந்தே இதற்கு கவனம் செலுத்த வேண்டும். இல்லை என்றால் பிரச்சனை தீவிரமாகி இதயத்தில் ஸ்டென்ட் வைக்க வேண்டிய நிலை ஏற்படும். நீங்கள் உங்கள் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க திட்டமிட்டால் கீழ்காணும் உணவுகளில் இருந்து விலகி இருப்பது நன்மை பயக்கும்.
வெண்ணெய்: வெண்ணெய் நம் நரம்புகளில் கொலஸ்ட்ரால் லெவலை அதிகரிக்கிறது. ஒரு சிலர் தங்கள் டயட்டில் தினமும் வெண்ணெய் சேர்த்து கொள்வார்கள். ஆனால் தினமும் வெண்ணெய் சாப்பிடுவது கொலஸ்ட்ரால் லெவலை வேகமாக அதிகரிக்க செய்கிறது. வெண்ணெய் நரம்புகளை அடைந்த பிறகு உறைந்து விடுவதால், இது கெட்ட கொலஸ்ட்ராலை அதிகரிக்க செய்கிறது. வெண்ணெய் தொடர்ந்து சாப்பிட்டால் கரோனரி தமனிகளில் அடைப்பு ஏற்படலாம்.
ஐஸ்கிரீம்: நமக்கு பிடித்த ஐஸ்கிரீம்கள் கெட்ட கொலஸ்ட்ராலை அதிகரிக்க செய்கின்றன. என்ன தான் உங்களுக்கு ஐஸ்கிரீம் பிடிக்கும் என்றாலும் அதில் கெட்ட கொலஸ்ட்ரால் இருப்பதால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். அறிக்கை ஒன்றின்படி 100 கிராம் வெண்ணிலா ஐஸ்கிரீமில் சுமார் 41 மில்லிகிராம் கொலஸ்ட்ரால் உள்ளது, இது இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானது. அடிக்கடி ஐஸ்கிரீம் சாப்பிடாமல் எப்போதாவது சாப்பிடலாம்.
பிஸ்கட்ஸ்: பொதுவாக நாம் டீ அல்லது காஃபி சாப்பிடும் போது அதில் நனைத்து பிஸ்கட்களை சாப்பிடுகிறோம். தினமும் ஒன்றிரண்டு பிஸ்கட்களை சாப்பிடுவது அளவானது. ஆனால் சிலர் ஒரு பிஸ்கட் பாக்கெட்டை பிரித்து முழுவதையும் காலி செய்யாமல் கவரை கீழே வைக்க மாட்டார்கள். ஆஸ்திரேலிய ஆய்வின்படி பிஸ்கட்கள் அதிக அளவு நிறைவுற்ற கொழுப்புகளை கொண்டிருக்கும் ப்ராசஸ்டு ஃபுட் ஆகும். எனவே இவற்றை அதிகமாக சாப்பிடுவதை ஒருவர் தவிர்க்க வேண்டும்.
ஃப்ரைட் சிக்கன்: பொதுவாக அதிகம் வறுக்கப்படும் உணவுகளில் அதிக அளவு கெட்ட கொலஸ்ட்ரால் உள்ளது. சமோசா, பக்கோடா அல்லது ஃப்ரைட் சிக்கன் போன்ற நன்கு வறுக்கப்பட்ட உணவுகள் உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை வேகமாக அதிகரிக்க செய்கின்றன. இவற்றை அடிக்கடி சாப்பிடுவதால் கெட்ட கொலஸ்ட்ரால் நரம்புகளில் மெதுவாக சேர துவங்குகிறது.
பர்கர், பீட்சா, பாஸ்தா: எப்போதாவது பர்கர், பீட்சா, பாஸ்தா உள்ளிட்டவற்றை சாப்பிடுவது தவறில்லை. ஆனால் சில வாரத்தின் பல நாட்களில் இவற்றை மிகவும் விரும்பி சாப்பிடுகிறார்கள். பர்கர், பீட்சா. பாஸ்தா போன்றவற்றை அதிகம் சாப்பிடுவது ஆரோக்கியமற்ற உணவு முறையாக கருதப்படுகிறது. கெட்ட கொழுப்பை அதிகரிக்க செய்யும் வெண்ணெய், சீஸ் மற்றும் க்ரீம் போன்ற பல பொருட்கள் மேற்காணும் உணவுகளையும் தயாரிக்க அதிக அளவில் சேர்க்கப்படுகின்றன. எனவே உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு எளிதாக அதிகரிக்கிறது.
கெட்ட கொலஸ்ட்ராலை அதிகரிப்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்: திடீரென எடை அதிகரிப்பது, சில அடிப்படை வேலைகளை செய்யும் போது மூச்சுத்திணறல் ஏற்படுவது, கால்கள் மற்றும் பாதங்களில் வீக்கம் ஏற்படுவது, கை மற்றும் கால்களில் உணர்வின்மை, உயர் ரத்த அழுத்தம் இருப்பது, நெஞ்சு வலிப்பது போன்ற உணர்வு உள்ளிட்ட அறிகுறிகள் வெளிப்பட்டால் உடனடியாக கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்துங்கள்.