ஆரோக்கியமான உடலையும், மனதையும் பராமரிக்க மனிதனுக்கு நல்ல தூக்கம் அவசியம். சிலர் வெறும் தரையில் படுத்து உறங்கிவிடுவார்கள். ஆனால் தரையின் வெப்பநிலை நம் தூக்கத்தை தடுத்து விடக்கூடும். அதற்காக பாய், தரைவிரிப்பு பயன்படுத்துவார்கள். மெத்தையில் தூங்கினால் அருமையான தூக்கம் வரும். ஆனாலும் சிலருக்கு அதனால் உடல் வலி, முதுகு வலி போன்றவை ஏற்படுகின்றன. ஆனால் வசதியான உயர்தர மெத்தைகள் பயன்படுத்துபவர்கள் அதைப்பற்றி கவலைப்பட தேவையில்லை.
ஏனெனில் உயர்தர மெத்தைகளை 10 முதல் 12 ஆண்டுகளுக்கும் மேலாக எந்த பிரச்சனையும் இல்லாமல் பயன்படுத்தப்படலாம். ஆனால் தரமற்ற மெத்தைகளை அடிக்கடி மாற்ற வேண்டியிருக்கும். அவை மாற்றப்படாவிட்டால், அது உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். அப்படி தரமற்ற மெத்தைகளை பயன்படுத்துவதால் என்னென்ன உடல்நல பிரச்சினைகள் ஏற்படுகின்றன? அவற்றை தடுக்க என்னமாதிரியான மெத்தைகளை பயன்படுத்தலாம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
முதுகு, கழுத்து மற்றும் உடல் வலி : சிலருக்கு உடலில் எந்த பிரச்சினைகளும் ஏற்படாமல் இருக்கலாம், ஆனால் காலை எழுந்தவுடன் முதுகுவலியால் அவதிப்படுவர். இதற்கான காரணம் அவர்கள் தூங்கும் மெத்தையுடன் அவர்கள் தொடர்புப்படுத்த மாட்டார்கள். காலையில் இதுபோன்ற வலிகள் உங்களுக்கு அடிக்கடி இருந்தால், உங்கள் மெத்தை தவறாக இருக்கலாம். இது போன்ற பிரச்சினைகளில் இருந்து விடுபட நல்ல மெத்தையை நீங்கள் தேர்ந்தெடுக்க விரும்பினால் எடைக் குறைவான memory foam mattress-களை பயன்படுத்தலாம். இது வலிகள் ஏற்படாமல் தடுக்கும். இதனால் இரவு முழுவதும் நிம்மதியாக தூங்கலாம்.
ஒவ்வாமை பிரச்சினைகள் : உங்கள் மெத்தையில் dust mites எனப்படும் தூசிப் பூச்சிகள் இருந்தால் உங்களுக்கு ஒவ்வாமை ஏற்படலாம். இதனால் தோல் மற்றும் சுவாசப்பிரச்சினைகள் ஏற்படலாம். மெத்தையில் ஏற்படும் துர்நாற்றங்களாலும் இதுபோன்ற அலர்ஜி பிரச்சினைகள் ஏற்படும். எனவே ஒரு தரமான மெத்தை பயன்படுத்துவதன் மூலம் ஒவ்வாமை போன்ற பாதிப்புகளை குறைக்கும், ஏனெனில் இதில் உள்ள நச்சுத்தன்மையற்ற Foam-கள் சுவாசிக்கக்கூடிய hypoallergenic இருப்பதால் அவை உண்மையான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன.
தரமற்ற மெத்தைகள் : தரமற்ற மெத்தைகள் ஐந்து ஆண்டுகள் வரை மட்டுமே பயன்படுத்தப்படக் கூடியவையாக உள்ளன. மேலும் அத்தகைய மெத்தைகளில் தூங்குவது முதுகுவலி, கழுத்து வலி, தூக்கமின்மை போன்ற பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். எனவே, அத்தகைய மெத்தைகள் போதுமான உங்களுக்கு சவுகரியமாக இல்லாதபோது அவற்றை மாற்றுவது முக்கியம் என்கிறார் Magniflex India நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு. ஆனந்த் நிச்சானி.