பால், காளான், மீன், சோயா பால், ஆரஞ்சு சாறு போன்றவற்றைத் தினமும் உங்களது உணவில் எடுத்துக் கொள்ளும் போது வைட்டமின் டி யை வெளியில் செல்லாமலே நீங்கள் பெற்றுக் கொள்ள முடியும்.நம்முடைய எலும்புகள், பற்கள் மற்றும் தசைகள் திடமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுவது வைட்டமின் டி சத்து. உடலுக்கு தேவையான வைட்டமின் டி கிடைக்க வேண்டும் என்றால் வெயிலில் தினமும் சிறிது நேரம் நிற்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுவார்கள் . வெயில் படும் போது நமது தோலில் சுரக்கும் ஒரே வைட்டமின் இது என்பதால் பெரும்பாலான மருத்துவர்கள் வைட்டமின் டியைப் பெறுவதற்கு இதனை மேற்கொள்ளப் பரிந்துரைப்பார்கள்.
இதன் மூலம் வைட்டமின் நம் உடலுக்குள் சென்றவுடன், உடல் அதிகமாக கால்சியம், பாஸ்பேட் ஆகியவற்றை உள்வாங்குவதற்கு பெருமளவில் உதவுகிறது.எனவே உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்வதற்கு வைட்டமின் டி அவசியமானது.ஆனால் நம்மில் சிலருக்கு வெயிலில் நிற்கவே பிடிக்காது. இதுப்போன்ற சூழலில் வைட்டமின் டியை எப்படிப் பெறுவது என்ற சந்தேகம் அனைவருக்கும் ஏற்படலாம். இது ஒன்றும் பெரிய விஷயமில்லை என்றும், வைட்டமின் டி சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருள்களை முறையாக உட்கொண்டாலே போதும் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். அவை என்னென்ன என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்ளலாம்.
காளான்கள்: மனிதர்களைப் போலவே காளான்களுக்கும் சூரிய ஒளியிலிருந்து வைட்டமின் டியை ஒருங்கிணைத்து வைத்துக் கொள்ளும் தன்மை உள்ளது. எனவே நீங்கள் காளாணை உங்களது உணவில் சேர்த்துக் கொள்ளலாம். சூரிய ஒளியில் வளரும் காளாண்களில் அதிக வைட்டமின்கள் உள்ளது அதே சமயம் வணிக ரீதியாக வளர்க்கப்படும் காளான்களில் குறைந்த அளவில் கிடைக்கிறது என்றாலும் இரண்டையும் சேர்த்து நீங்கள் சாப்பிடும் போது வைட்டமின் டி கிடைக்க உதவியாக உள்ளது.
பசும் பால் :பசும்பாலில் வைட்டமின் டி அதிகளவில் உள்ளது. எனவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தினமும் பசும் பால் பருகும் போது எலும்புகள் மற்றும் தசைகள் வலுப்பெற உதவுகிறது. சூரிய ஒளியில் கிடைக்கும் வைட்டமின் டியைப் போன்று இதிலும் கிடைக்கிறது. இதேப் போன்று சோயா பாலிலும் 107-11 IU வைட்டமின் டி உள்ளது.