இஸ்ரேலின் சஃபேடில் உள்ள பார்-இலன் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் இஸ்ரேலின் நஹாரியாவில் உள்ள கலிலி மருத்துவ மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஆகியோர் இணைந்து நடத்திய இந்த ஆய்வில் , வைட்டமின் D குறைபாடானது கொரோனா நோயின் தீவிரம் அதிகரிப்பதற்கும், நோயாளிகள் இறப்பதற்குமான தொடர்பை சுட்டிக்காட்டினர். நோய்த்தொற்றுக்கு முன்னரே வைட்டமின் டி அளவை ஆய்வு செய்ததில் முதன்மையானது இந்த ஆய்வு ஆகும்.
MedRxiv இல் ஆரம்பத்தில் வெளியிடப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் இந்த கண்டுபிடிப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் 2020 மற்றும் பிப்ரவரி 2021 க்கு இடையில் கலிலீ மருத்துவ மையத்தில் (ஜிஎம்சி) அனுமதிக்கப்பட்ட 1,176 கொரோனா நோயாளிகளின் பதிவுகளை ஆய்வு செய்தது. அதில் அவர்களின் விட்டமின் டி அளவு மற்றும் நோயின் தீவிரத் தன்மையை கண்கானித்தது.
எனவே "வைட்டமின் D இன் இயல்பான அளவைப் பராமரிப்பது அவசியம் என ஆய்வாளர்கள் அழுத்தமாக கூறியுள்ளனர். குறிப்பாக இது வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்மை பயக்கும்" என்று கலிலி மருத்துவ மையம் மற்றும் பார்-இலன் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் Azrieli டாக்டர் Amiel Dror கூறினார். இவர்தான் ஆய்வுக்கு தலைமை தாங்கினார்.