

நீங்கள் படுத்தவுடன் தூங்கும் நபரா? ஆம் என்றால் உண்மையில் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்ட நபர் தான். தூங்குவதில் சிக்கல் அனுபவிக்கும் பல நபர்கள் நம்மிடையே உள்ளனர். மன அழுத்தம், மொபைல், லேப்டாப், டிவி மற்றும் சரியான டைமிற்கு தூங்காதது போன்ற பல காரணங்கள் தூக்கமின்மையை ஏற்படுத்தும். இரவுநேரங்களில் டீ மற்றும் காபி போன்ற பானங்கள் உடலை ஆக்டிவாக வைத்துக்கொண்டாலும் நம் தூக்கத்தை அவை தடுக்கின்றன. ஆனாலும் கவலை வேண்டாம் அதிர்ஷ்டவசமாக, இரவில் நன்றாக தூங்குவதற்கு நம்மிடையே சில உணவுப் பொருட்களும் உள்ளன. நீங்கள் தூங்கி பல நாட்கள் ஆனாலும் சரி, நல்ல தூக்கத்தை பெற போராடினாலும் சரி, இந்த பதிவை படித்தபின் பின்வரும் விஷயங்களை பின்பற்றினால் நிச்சயம் உங்களுக்கு நல்ல தூக்கம் வரும்.


சூடான மஞ்சள் பால்: வெதுவெதுப்பான மஞ்சள் பால் அமினோ அமிலம், டிரிப்டோபான் போன்றவற்றை உற்பத்தி செய்து அமைதியான மற்றும் பேரின்ப தூக்கத்தை உங்களுக்கு அளிக்கும். இதனால் நீங்கள் படுக்கையில் படுத்தவுடன் சட்டென்று தூங்கிவிடுவீர்கள். இந்த மஞ்சள் பால் உங்களை எளிதில் தூங்க வைக்கும் ஒரு அருமருந்துதான்.


சிக்கன்: நான்-வெஜ்களில் அதிக அளவு டிரிப்டோபான் உள்ளது, இது நம் உடலுக்கு தேவையான ஒரு அத்தியாவசிய அமினோ அமிலமாகும், இந்த அமிலம் உங்களை நன்றாக தூங்க வைக்கும். சாதாரண கோழி மற்றும் வான்கோழிகளில் புரதம் எக்கச்சக்கமாக உள்ளது. இறைச்சியையோ அல்லது இறைச்சி அடிப்படையாகக் கொண்ட உணவை சாப்பிட்ட பிறகு நீங்கள் சோர்வாகவும் தூக்கமாகவும் உணர்வீர்கள் அதற்கு மேற்சொன்னவை தான் முக்கிய காரணம்.


ஒயிட் ரைஸ்: கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்த இந்த உணவுப் பொருள் தூக்கத்தைத் தூண்டும் என்று கண்டறியப்பட்டுள்ளது. அதிக கிளைசெமிக்கை கொண்ட உணவுகளை தூங்குவதற்கு சரியாக 1 மணி நேரத்திற்கு முன்பு உட்கொண்டால், அவை தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தலாம் என்று ஆராய்ச்சி கூறுகிறது. மேலும் அதிக அரிசி உட்கொள்ளும் மக்கள் நன்றாக தூங்குகிறார்கள் என்று ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது.


சாமோமில் டீ : சாமோமில் பூக்கள் ஒரு மூலிகையாகும். இது இயற்கை மருத்துவத்துக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதை தேநீராக்கி குடிப்பது நல்லது. இவை பக்கவிளைவை உண்டாக்குவதில்லை என்பதால் நல்ல தூக்கம் கிடைக்கும். இந்த பானத்தில் அபிஜெனின் உள்ளது. அபிஜெனின் மூளையில் சில மேஜிக்குகளை செய்கிறது. இதனால் உங்கள் பதட்டம் குறைந்து நல்ல தூக்கம் ஏற்படும். சாமோமில் டீ உட்கொள்ளும் மக்களின் தூக்கத்தின் தரமும் மேம்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.


வாழைப்பழம்: தூக்கத்தைத் தூண்டும் டிரிப்டோபானின் மற்றொரு வளமான ஆதாரம் என்றால் அது வாழைப்பழம் தான். நடுத்தர அளவிலான வாழைப்பழத்தில் 11 மில்லிகிராம் டிரிப்டோபான் உள்ளது, மேலும் வாழைப்பழத்தில் மெக்னீசியமும் உள்ளது. இந்த இரண்டு ஊட்டச்சத்துக்களும் உங்கள் தூக்கத்திற்கு மிகவும் முக்கியம்.


குறைந்த நேர பகல் தூக்கம் நன்மை கொடுப்பதாக இருக்கும். ஆனால், நீண்ட, வழக்கமில்லாத பகல் தூக்கம், உங்களின் இரவு தூக்கத்தை பாதிக்கும். ட்ரைப்டோபான், மெக்னீசியம், கால்சியம் மற்றும் பி6 ஆகிய நான்கு முக்கியமான மினரல்களும், வைட்டமின்களும் உங்களின் சிறந்த தூக்கத்திற்கு உதவும். எனவே மேலே நாம் கண்ட பொருட்களை ட்ரை செய்து பாருங்கள் விரைவில் நல்ல மாற்றம் தெரியும்.