ஆயுர்வேதம் நமது வளமான இந்திய பாரம்பரியத்தின் பெருமைமிக்க விஷயங்களில் ஒன்றாகும். நாடு முழுவதும் பரந்து விரிந்திருக்கும் ஆயுர்வேத மூலிகைகளின் பொக்கிஷம் மிகவும் தலைசிறந்தது. அதிதி அமித் தேஷ்முக் என்கிற ஆயுர்வேத பயிற்சியாளர் 21 ஆர்கானிக் இந்திய மூலிகைகள் மற்றும் நீங்கள் அவற்றைப் பெறக்கூடிய இடங்களை குறித்து கூறியுள்ளார். இந்த பதிவில் இந்தியாவில் ஆயுர்வேத மூலிகைகளுக்கான தலைசிறந்த 5 இடங்கள் பற்றி விரிவாக பார்க்கலாம்.
கேரளாவில் அபியங்கா : கேரளா பல்வேறு ஆயுர்வேத அபியங்களுக்கு பிரபலமானது. அதாவது ஆயுர்வேத மசாஜ்களுக்கு பேர்பெற்றது. முக அபியங்கா அல்லது முக மசாஜ், மருத்துவ ஆயுர்வேத எண்ணெய்கள், மூலிகைகளுடன் கலந்த நெய்யைப் பயன்படுத்தி, சருமத்தை நன்கு சுத்தப்படுத்த உதவும். மேலும், இது சருமத்திற்கு புத்துயிர் பெறவும், ஊட்டமளிக்கவும் வழி வகுக்கிறது..
காஷ்மீரை சேர்ந்த குங்குமப்பூ : காஷ்மீரி குங்குமப்பூ, அதன் நறுமணம், நிறம் மற்றும் மருத்துவ குணங்களுக்கு பெயர் பெற்றது. உடல் நலம், மருத்துவ பண்புகள் மட்டுமல்லாமல், இதில் அழகுக்காக, ஒப்பனையில் உதவும் நன்மைகளுக்காக அங்கீகரிக்கப்பட்ட மிகவும் பழமையான மசாலாப் பொருட்களில் ஒன்றாக நம்பப்படுகிறது. கரும்புள்ளிகள், ஹைப்பர் பிக்மென்டேஷன் மற்றும் முகத்தில் உள்ள மங்குகள் ஆகியவற்றைக் குறைக்க குங்குமப்பூ உதவுகிறது. சூரிய ஒளியில் இருந்து சருமத்தை பாதுகாக்கும் தன்மையும் இதில் உள்ளது. இதன் வழக்கமான பயன்பாடு உங்களுக்கு ஒரு சீரான சரும நிறத்தை கொடுக்கும். குங்குமப்பூ மற்றும் நெய் கலந்த ஃபேஸ் பேக் உங்கள் சருமத்தை புத்துயிர் பெற உதவும். பளபளப்பான சருமத்திற்கு இந்த ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்த ஃபேஸ் மாஸ்க்கை தவறாமல் பயன்படுத்தவும்.
ராஜஸ்தானை சேர்ந்த கற்றாழை : கற்றாழை என்பது பொதுவாக குறைந்த மழைப்பொழிவு, ஈரப்பதமான காலநிலை மற்றும் மணல் மண் கொண்ட வறண்ட பகுதியில் பயிரிடப்படுகிறது. எனவே இது ராஜஸ்தானின் தட்பவெப்ப நிலைகளில் செழித்து வளரும். காயங்கள் மற்றும் தீக்காயங்களை குணப்படுத்த உதவும் பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு, ஆண்டிசெப்டிக் பண்புகளும் இதில் உள்ளது. மேலும், வயதான தோற்றத்தை தள்ளிப்போடும் கொலாஜனை உருவாக்கும் பண்புகளும் உள்ளது. இதில் வைட்டமின்கள், அமினோ அமிலங்கள், பல ஊட்டச்சத்துக்கள், தாதுக்கள் மற்றும் என்சைம்கள் ஆகியவையும் நிறைந்துள்ளது. இவை தோல் மற்றும் முடி இரண்டையும் பாதுகாக்கின்றன. கற்றாழை சருமத்தை ஈரப்பதமாக்குகிறது மற்றும் ஆரோக்கியமான பளபளப்பை அளிக்கிறது.
ஊட்டியில் இருந்து யூகலிப்டஸ் எண்ணெய் : தமிழகத்தில் நீலகிரியில் உள்ள ஊட்டிக்கு பயணம் சென்றவர்கள் யூகலிப்டஸ் எண்ணெய் வாங்காமல் பயணம் முழுமையடையாது. இது இருமல், ஆஸ்துமா, சைனசிடிஸ் போன்றவற்றுக்கு மருந்தாக பயன்படும் மூலிகையாகும். இதைப் பயன்படுத்த எளிதான வழி, சூடான நீரில் சில துளிகள் யூகலிப்டஸ் எண்ணெயைச் சேர்த்து நீராவியை உள்ளிழுப்பது அல்லது உங்கள் கைக்குட்டையில் இரண்டு சொட்டுகளை இட்டு முகர்வது நல்ல பலனை தரும். இந்த எண்ணெய் சளி சவ்வுகளுடன் வினைபுரிகிறது, சளியைக் குறைப்பது மட்டுமல்லாமல், உங்கள் சைனஸைத் குறைக்க உதவுகிறது, இதனால் உங்களுக்கு கடுமையான குளிர் இருக்கும்போது எளிதாக சுவாசிக்க முடியும்.
மகாராஷ்டிரா சேர்ந்த அஸ்வகந்தா : துணை வெப்பமண்டல மற்றும் வெப்பமண்டல காலநிலையில் வளர்க்கப்படும் அஸ்வகந்தா மூலிகை வளர மிகக் குறைந்த நீர் தேவைப்படுகிறது. எனவே இது லத்தூர் போன்ற வறட்சி பாதிப்புக்குள்ளான பகுதி வளர கூடிய ஒரு சிறந்த மூலிகையாகும். அஸ்வகந்தாவை மாத்திரை வடிவில் அல்லது பொடியாக தினமும் பாலுடன் சேர்த்து சாப்பிடலாம். அஸ்வகந்தாவை சாப்பிடுவதற்கான மற்றொரு சிறந்த வழி மூலிகை தேநீர் வடிவில் அருந்துவது. அஸ்வகந்தா நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குதல், சகிப்புத்தன்மையை அதிகரிப்பது, எலும்புகள், தசைகள் மற்றும் நரம்புகளை வலுப்படுத்துதல் போன்ற பல நன்மைகளைக் கொண்டுள்ளது. இது மூட்டுவலி, வலி நிவாரணி மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது.