

பால் ஊட்டச்சத்து மிக்கது. இதை தினமும் குடித்தால் கால்சியம் சத்து கிடைக்கும். இதனால் எலும்புகள் உறுதியாகும் , தசைகள் வளர்ச்சி அடையும் என்று கூறுவார்கள். ஆனால் அதற்காக அளவுக்கு அதிகமாகக் குடித்தாலும் ஆபத்து என ஆய்வுகள் கூறுகின்றன. எப்படி என்று பார்க்கலாம்.


அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். அதுபோல் பாலை அளவுக்கு அதிகமாக குடிக்கிறீர்கள் எனில் அது உங்களுக்கு நஞ்சாகவே முடியும். ஒரு நாளைக்கு அளவுக்கு அதிகமாக பால் குடிக்கிறீர்கள் எனில் எலும்பு முறிவு ஏற்படும் ஆபத்து உள்ளது. இறப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளது என ஸ்வதிஷ் நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளது.


அதாவது அந்த ஆய்வில் ஒரு நாளைக்கு மூன்று கிளாஸ் தினமும் குடித்தால் இறப்பின் ஆபத்து இரண்டு மடங்கு அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதுவும் பெண்களுக்குதான் ஆண்களைக் காட்டிலும் ஆபத்து அதிகம் என்று கூறப்பட்டுள்ளது.


எனவே என்னதான் பாலில் கால்சியம், விட்டமின் டி, விட்டமின் பி12 என இருந்தாலும் ஒரு நாளைக்கு ஒரு கிளாஸ் பால் தான் குடிக்க வேண்டும் என்கிறது. அப்படி அளவுக்கு அதிகமாக குடிக்கிறீர்கள் எனில் சில பக்கவிளைவுகளையும் சந்திக்கக் கூடும்.