கோபம் நம் ஒவ்வொருவருக்கும் இருக்கும் உணர்வு. சிலருக்கு குறிப்பாக கோபம் சற்று அதிகமாகவே இருக்கும். எதற்கெடுத்தாலும் கோபப்படும் பழக்கம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பல முக்கிய தருணங்களில் தவறான முடிவுகளையே எடுப்பர். ஏனெனில், கோபத்தில் இருக்கும் போது நமது மூளை நிதானமாக வேலை செய்யாது. பொதுவாக கோபம் ஒருவரின் பலவீனத்தின் வெளிப்பாடு என்று சொல்கிறார்கள். தன்னை மீறி, தன் உணர்வுகளை வன்முறை முறையில் வெளிப்படுத்துதல் என்பது பலவீனத்தின் உச்சம் ஆகும்.
அத்தகைய கோபத்தை குறைத்துக் கொண்டால் அது நம் உடலுக்கும், மனதிற்கும், பிறருக்கும் மிக சிறந்தது. இதயத்துடிப்பு அதிகமாவது, நகங்களைக் கடிப்பது, வேகமாக சுவாசிப்பது, பற்களைக் கடிப்பது, கைகளை இறுகப் பிடிப்பது இவற்றில் ஏதேனும் சிலவற்றை நீங்கள் செய்துகொண்டிருந்தால், உடனடியாக உங்கள் மனதைச் சாத்தப்படுத்துவது அவசியம். அவ்வாறு அதிக கோபம் கொள்பவர்கள் தங்களது கோபத்தை குறைக்க நினைத்தால் அதற்கும் பல வழிகள் இருக்கிறது. அதனை பின்பற்றினாலே போதும், உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படும். எனவே உங்களுக்கு கோபம் ஏற்படும் போது கீழ்காணும் சில வழிகளை கடைபிடியுங்கள்.
4. மந்திரத்தை மீண்டும் சொல்லவும்: "அமைதியாக இரு; கவனம் செலுத்து" எனத் தொடர்ந்து உங்களுக்கே சொல்லிக்கொள்ளுங்கள். இல்லையெனில் உங்களை அமைதியாகவும், வேலையில் மீண்டும் கவனம் செலுத்தவும் உதவும் ஒரு சொல் அல்லது சொற்றொடரைக் கண்டறியவும். நீங்கள் கோபமாக இருக்கும் போது அந்த வார்த்தையை மீண்டும் மீண்டும் சொல்லுங்கள். காட்டாயம் கோபம் குறையலாம்.