முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » புதிதாக ஜிம்மிற்கு செல்ல போறீங்களா..? உங்களுக்கான டயட் பிளான் இதோ..

புதிதாக ஜிம்மிற்கு செல்ல போறீங்களா..? உங்களுக்கான டயட் பிளான் இதோ..

எடை குறைப்பில் ஈடுபடுவோர் செய்யும் முக்கிய தவறு தங்கள் டயட்டில் இருந்து முற்றிலும் கார்போஹைட்ரேட்ஸை தவிர்ப்பது.

  • 19

    புதிதாக ஜிம்மிற்கு செல்ல போறீங்களா..? உங்களுக்கான டயட் பிளான் இதோ..

    ஜிம்மிற்கு சென்று வழக்கமான உடற்பயிற்சிகளை மேற்கொள்வது என்பது நல்ல உடல் ஆரோக்கியத்தை பராமரிப்பதில் ஒரு முக்கிய அங்கமாக மாறி இருக்கிறது. வீட்டிலேயே ஒர்கவுட்ஸ் செய்வதை விட ஜிம்மிற்கு செல்வது எடையை கட்டுப்படுத்த மற்றும் மனரீதியாக பாசிட்டிவாக இருக்க ஒரு சிறந்த வழியாக பலருக்கும் இருந்து வருகிறது.

    MORE
    GALLERIES

  • 29

    புதிதாக ஜிம்மிற்கு செல்ல போறீங்களா..? உங்களுக்கான டயட் பிளான் இதோ..

    புதிதாக நீங்கள் ஜிம் செல்ல திட்டமிட்ருந்தால் விரும்பிய முடிவுகளை அடைய நீங்கள் சரியான உணவுகள் அடங்கிய டயட்டை பின்பற்றுவது மிக முக்கியம். உங்களது இலக்குகளை அடைய நீங்கள் தினசரி எவ்வளவு உணவு மற்றும் திரவங்கள் எடுத்து கொள்ள வேண்டும் என்ற துல்லி விகிதங்கள் உங்களை ஃபிட்டாக மற்றும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

    MORE
    GALLERIES

  • 39

    புதிதாக ஜிம்மிற்கு செல்ல போறீங்களா..? உங்களுக்கான டயட் பிளான் இதோ..

    மேலும் ரத்த குளுக்கோஸ் செறிவை பராமரிக்க மற்றும் உங்களின் அதிகபட்ச திறனுடன் உடற்பயிற்சி செய்யவும் இந்த பழக்கம் உதவும் என அமெரிக்கன் காலேஜ் ஆஃப் ஸ்போர்ட்ஸ் மெடிசின் ஆய்வில் தெரிய வந்துள்ளது. எனவே ஜிம் செல்லும் புதிதில் உங்கள் டயட் குறித்து மனதில் கொள்ள வேண்டிய சில குறிப்புகள் இங்கே..

    MORE
    GALLERIES

  • 49

    புதிதாக ஜிம்மிற்கு செல்ல போறீங்களா..? உங்களுக்கான டயட் பிளான் இதோ..

    ஹைட்ரேட்டாக இருக்க வேண்டும் : உங்கள் உடல் சரியான ஹைட்ரேட்டுடன் இருக்க மற்றும் ஜிம் செஷன்களின் போது உங்கள் உடல் சிறப்பாக செயல்பட தினசரி நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளபடி நிறைய தண்ணீர் குடிப்பது மிகவும் முக்கியம். உடற்பயிற்சி செய்யும் போது உனக்கு அதிகம் வியர்வை வெளியேறுகிறது என்றால் ஒரு நாளைக்கு குறைந்தது 8-10 கிளாஸ் தண்ணீர் அல்லது அதற்கும் அதிகமாக குடிக்க இலக்கு கொள்ளுங்கள். உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் குடிப்பது தசை வலியை குறைக்க மற்றும் ரெக்கவரி டைமை மேம்படுத்த உதவும்.

    MORE
    GALLERIES

  • 59

    புதிதாக ஜிம்மிற்கு செல்ல போறீங்களா..? உங்களுக்கான டயட் பிளான் இதோ..

    போதுமான அளவு புரோட்டீன் சாப்பிடுங்கள் : தசை திசுக்களை (Muscle tissue) உருவாக்க மற்றும் சரி செய்ய புரோட்டீன் அவசியம். தவிர உங்கள் இலக்கு பிசிக்கல் ட்ரான்ஸ்ஃபரமேஷனாக இருந்தால் புரோட்டீன் முக்கியமானது. நேஷ்னல் லைப்ரரி ஆஃப் மெடிசின் நடத்திய ஆய்வின்படி, உடற்பயிற்சிக்குப் பிறகு ஒருவர் குறைந்தபட்சம் 1.6 கிராம்/கிலோ புரோட்டீன் எடுத்து கொள்ள வேண்டும். வேகவைத்த முட்டை, மீன் அல்லது இறைச்சியை நீங்கள் புரோட்டீன் ஆதாரமாக எடுத்து கொள்ளலாம்.

    MORE
    GALLERIES

  • 69

    புதிதாக ஜிம்மிற்கு செல்ல போறீங்களா..? உங்களுக்கான டயட் பிளான் இதோ..

    கார்போஹைட்ரேட்ஸ்களை முற்றிலும் தவிர்க்காதீர்கள்: எடை குறைப்பில் ஈடுபடுவோர் செய்யும் முக்கிய தவறு தங்கள் டயட்டில் இருந்து முற்றிலும் கார்போஹைட்ரேட்ஸை தவிர்ப்பது. கார்போஹைட்ரேட்ஸ் நம் உடலின் முதன்மை ஆற்றல் மூலமாகும், எனவே அவற்றை உங்கள் டயட்டில் சேர்ப்பது முக்கியம். முழு தானியங்கள்,ஆப்பிள், வாழைப்பழம் மற்றும் காய்கறிகள் மூலம் கார்போஹைட்ரேட்டுகளை எடுக்க முயற்சிக்கவும்.

    MORE
    GALLERIES

  • 79

    புதிதாக ஜிம்மிற்கு செல்ல போறீங்களா..? உங்களுக்கான டயட் பிளான் இதோ..

    பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்கவும் : பெரும்பாலும் ப்ராசஸ்ட் ஃபுட்ஸ்கள் கலோரிகள், ஆரோக்கியமற்ற கொழுப்புகள் மற்றும் கூடுதல் சர்க்கரைகளை அதிகம் கொண்டுள்ளன. மேலும் இவை எடை அதிகரிப்பு மற்றும் பல உடல்நல பிரச்சினைகள் ஏற்பட வழிவகுக்கின்றன. எனவே பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கு பதில் ஊட்டச்சத்து நிறைந்த ஆரோக்கியமான உணவுகள் மற்றும்பழங்கள், காய்கறிகளை டயட்டில் சேர்த்து கொள்வதில் கவனம் செலுத்துங்கள். இவை உங்கள் உடலுக்குத் தேவையான வைட்டமின்ஸ், மினரல்ஸ்களை அளிக்கின்றன.

    MORE
    GALLERIES

  • 89

    புதிதாக ஜிம்மிற்கு செல்ல போறீங்களா..? உங்களுக்கான டயட் பிளான் இதோ..

    உங்கள் உடல் சொல்வதை கேளுங்கள் : டயட்டில் வெவ்வேறு உணவுகளை சேர்க்கும் போது உங்கள் உடல் எவ்வாறு பதிலளிக்கிறது என்பதில் கவனம் செலுத்த வேண்டும். மேலும் அதற்கேற்ப உங்கள் டயட்டை அட்ஜஸ்ட் செய்வது முக்கியம். நீங்கள் டயட்டில் புதிய உணவுகளை சேர்த்த பின் மந்தமாக உணர்ந்தாலோ அல்லது செரிமான பிரச்சனைகளை சந்தித்தாலோ உங்கள் டயட்டில் மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்பதற்கான அறிகுறிகளாக அவை இருக்கலாம்.

    MORE
    GALLERIES

  • 99

    புதிதாக ஜிம்மிற்கு செல்ல போறீங்களா..? உங்களுக்கான டயட் பிளான் இதோ..

    புதிதாக ஜிம்மிற்கு செல்லும் போது உங்கள் உடலை எவ்வாறு சிறப்பாக வைத்து கொள்வது என்பது குறித்து பிரத்யேக ஆலோசனையைப் பெற உணவியல் நிபுணர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரை கலந்தாலோசிக்கலாம்.

    MORE
    GALLERIES