முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » பற்களை சுத்தமாக வைத்துக் கொள்ள அன்றாடம் கடைப்பிடிக்க வேண்டிய 4 விஷயங்கள்...

பற்களை சுத்தமாக வைத்துக் கொள்ள அன்றாடம் கடைப்பிடிக்க வேண்டிய 4 விஷயங்கள்...

நம்மில் பலர் உடலின் பிற உறுப்புகளின் ஆரோக்கியத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவம் அளவுக்கு பற்களை கண்டு கொள்வதில்லை என்பதே கசப்பான உண்மை.

 • 17

  பற்களை சுத்தமாக வைத்துக் கொள்ள அன்றாடம் கடைப்பிடிக்க வேண்டிய 4 விஷயங்கள்...

  நாம் நீண்ட ஆயுளுடன் வாழுவதற்கான முதல் படி, உண்ணும் உணவை மென்று, சவைத்து சாப்பிடுவதுதான். அப்படி உணவை அரைத்து கூழ் போல ஆக்குவதற்கு நம் வாயில் உள்ள, இயற்கை வழங்கிய கொடைதான் இந்த கூர்மையான பற்கள் ஆகும். உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கு காரணமாக உள்ள பற்களின் ஆரோக்கியம் குறித்து நாம் அக்கறை கொண்டுள்ளோமா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

  MORE
  GALLERIES

 • 27

  பற்களை சுத்தமாக வைத்துக் கொள்ள அன்றாடம் கடைப்பிடிக்க வேண்டிய 4 விஷயங்கள்...

  ஆமாம், நம்மில் பலர் உடலின் பிற உறுப்புகளின் ஆரோக்கியத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவம் அளவுக்கு பற்களை கண்டு கொள்வதில்லை என்பதே கசப்பான உண்மை. அதேபோல, வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும் மற்றும் பல்லு போனால் சொல்லு போச்சு என்ற பழமொழிகளை கேட்டிருப்பீர்கள். நாம் சிரிக்கும்போது நம் முகத்தின் அழகை கூடுதலாகக் காட்டுவதில் பற்களுக்கு முக்கிய பங்கு உண்டு. மேலும், வாயில் பற்கள் இல்லை என்றால் நாம் பேசும் சொற்கள் முழுமையான ஒலி வடிவத்தில் வெளிவராது.

  MORE
  GALLERIES

 • 37

  பற்களை சுத்தமாக வைத்துக் கொள்ள அன்றாடம் கடைப்பிடிக்க வேண்டிய 4 விஷயங்கள்...

  ஆக, இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த பற்களை எப்படி பாதுகாக்க வேண்டும் என்ற அவசியத்தை நாம் தெரிந்து கொண்டும். பல் சுகாதாரம் இல்லை என்றால் நீரிழிவு மெலிடஸ், இதய நோய் அபாயங்கள், சிறுநீரக நோய்கள் போன்றவை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கிறது மருத்துவ உலகம்.

  MORE
  GALLERIES

 • 47

  பற்களை சுத்தமாக வைத்துக் கொள்ள அன்றாடம் கடைப்பிடிக்க வேண்டிய 4 விஷயங்கள்...

  இனிப்பு சேர்க்கப்பட்ட பானங்கள் : இயற்கையான குளிர்பானங்களைக் காட்டிலும், செயற்கையாக இனிப்பூட்டப்பட்ட பானங்களை தான் நாம் விரும்பி அருந்துகிறோம். இது நமது பல் ஆரோக்கியம் மற்றும் உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பற்களில் சொத்தை, உடல் பருமன், நீரிழிவு மெலிடஸ், புற்றுநோய் போன்ற பல பிரச்சினைகளுக்கு இது காரணமாக அமைகிறது.

  MORE
  GALLERIES

 • 57

  பற்களை சுத்தமாக வைத்துக் கொள்ள அன்றாடம் கடைப்பிடிக்க வேண்டிய 4 விஷயங்கள்...

  இரண்டு நிமிடம் பல் துலக்க வேண்டும் : நாள்தோறும் காலை, இரவு இரண்டு வேளைகளில் குறைந்தது 2 நிமிடங்களுக்கு பல் துலக்க வேண்டும். இதை செய்தால் தான் பற்களில் உள்ள கிருமிகள் அழியும். அதே சமயம், நீங்கள் பயன்படுத்தும் ப்ரெஷ் சாஃப்டாகவும், நுனிப்பகுதி வளைய கூடியதாகவும் இருக்க வேண்டும். கடினமான ப்ரெஷ்களை கட்டாயம் தவிர்க்கவும்.

  MORE
  GALLERIES

 • 67

  பற்களை சுத்தமாக வைத்துக் கொள்ள அன்றாடம் கடைப்பிடிக்க வேண்டிய 4 விஷயங்கள்...

  பற்களின் இடைவெளி மீது கவனம் : நம் பற்களின் இடைவெளிப் பகுதிகள், ஈறுகள், மேல் தாடைப் பகுதிகள் போன்ற இடங்களுக்கு ப்ரெஷ்கள் சென்று சேராது. ஆகவே இந்தப் பகுதிகளை கவனமாக சுத்தம் செய்ய வேண்டும். எந்த உணவை சாப்பிட்டாலும் உடனடியாக தண்ணீர் வைத்து வாய் கொப்பளிக்க வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 77

  பற்களை சுத்தமாக வைத்துக் கொள்ள அன்றாடம் கடைப்பிடிக்க வேண்டிய 4 விஷயங்கள்...

  7 வயதில் பல் ஆரோக்கிய பரிசோதனை : குழந்தைகளுக்கு 7 வயதில் தான் பால் பற்கள் முளைக்கத் தொடங்குகிறது. இது நிலையான பற்களும் கூட. ஆகவே, இந்த வயதில் மருத்துவரை பார்த்து பற்கள் தவறான அமைப்பில் முளைக்கிறதா என்பதை கண்காணித்து, எதிர்கால பிரச்சனைகளை தவிர்க்கவும்.

  MORE
  GALLERIES