முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » பிசிஓஎஸ் இருக்கும் பெண்கள் கருத்தரிக்க முயற்சி செய்கிறீர்கள் எனில் இதையெல்லாம் கட்டாயம் ஃபாலோ பண்ணுங்க...

பிசிஓஎஸ் இருக்கும் பெண்கள் கருத்தரிக்க முயற்சி செய்கிறீர்கள் எனில் இதையெல்லாம் கட்டாயம் ஃபாலோ பண்ணுங்க...

இந்தியாவில் 20 சதவீதம் பெண்கள் பிசிஓஎஸால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஆய்வு கூறுகிறது.

  • 17

    பிசிஓஎஸ் இருக்கும் பெண்கள் கருத்தரிக்க முயற்சி செய்கிறீர்கள் எனில் இதையெல்லாம் கட்டாயம் ஃபாலோ பண்ணுங்க...

    பிசிஓஎஸ் , பிசிஓஎடி என்னும் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் பெண்களின் கருத்தரித்தலை சிக்கலாக்கியுள்ளது. பெரும்பாலான பெண்கள் இந்த பாதிப்பால் உடலளவில் பிரச்னைகளை அனுபவித்து வருகின்றனர். இந்தியாவில் 20 சதவீதம் பெண்கள் பிசிஓஎஸால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஆய்வு கூறுகிறது. பிசிஓஎஸ் என்பது உடலில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வை உண்டாக்குகிறது. சாதாரண மாதவிடாய் சுழற்சியின் ஒரு பகுதியாக கருப்பைகள் ஒவ்வொரு மாதமும் ஒரு முட்டையை உற்பத்தி செய்து வெளியிடும். ஆனால் ஒரு பெண் பிசிஓஎஸ் -யால் அவதிப்படும்போது, முட்டை சரியாக வளராமல் இருக்கலாம் அல்லது அண்டவிடுப்பின் போது வெளியிடப்படாமல் போகலாம்.

    MORE
    GALLERIES

  • 27

    பிசிஓஎஸ் இருக்கும் பெண்கள் கருத்தரிக்க முயற்சி செய்கிறீர்கள் எனில் இதையெல்லாம் கட்டாயம் ஃபாலோ பண்ணுங்க...

    இதனால் பல அறிகுறிகளை ஆனுபவிக்கின்றனர். அதில் ஒன்றுதான் கருத்தரிக்க முடியாமல் போவது... பிசிஓஎஸ் என்பது வாழ்க்கை முறை காரணிகளால் உருவாவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அதை சரி செய்வது வாழ்க்கை முறையை ஒழுங்கு முறைக்கு கொண்டு வருவதுதான் தீர்வு என்கின்றனர். அந்த வகையில் பிசிஓஎஸ் இருக்கும் பெண்கள் இந்த விஷயங்களையெல்லாம் சரியாக பின்பற்றினால் கருத்தரிப்பதற்கான வாய்ப்புகள் உண்டு என்கின்றனர். அவை என்னென்ன பார்க்கலாம்.

    MORE
    GALLERIES

  • 37

    பிசிஓஎஸ் இருக்கும் பெண்கள் கருத்தரிக்க முயற்சி செய்கிறீர்கள் எனில் இதையெல்லாம் கட்டாயம் ஃபாலோ பண்ணுங்க...

    மருந்து மாத்திரைகள் உதவலாம் : கருவுறுதலுக்கான மாத்திரைகள் அண்டவிடுப்பை ஒழுங்குபடுத்துவதற்கும் தூண்டுவதற்கும் உதவுகின்றன. அண்டவிடுப்பின் சீரற்ற செயல்பாட்டால் கருவுறுதல் பிரச்சினைகளை சந்திக்கின்றனர். இவர்கள் மருத்துவரின் ஆலோசனையின் படி கரு உருவாக உதவும் மாத்திரை, மருந்துகளை உட்கொள்ளலாம். நுண்ணுயிர் தூண்டுதல் ஹார்மோன்கள் மற்றும் லுடினைசிங் ஹார்மோன்கள் போன்ற இயற்கை ஹார்மோன்களைப் போலவே இந்த மருந்துகளும் அண்டவிடுப்பை அதிகரிக்க உதவுகின்றன.

    MORE
    GALLERIES

  • 47

    பிசிஓஎஸ் இருக்கும் பெண்கள் கருத்தரிக்க முயற்சி செய்கிறீர்கள் எனில் இதையெல்லாம் கட்டாயம் ஃபாலோ பண்ணுங்க...

    ஆரோக்கியமான எடையை பராமரித்தல் : ஆரோக்கியமான எடையை பராமரிப்பது கர்ப்பமாக இருப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது மற்றும் கர்ப்பம் தொடர்பான அபாயங்களை குறைக்கிறது. கருத்தரிப்பதற்கு ஏற்ற BMI 18.5 முதல் 24.9 வரை இருக்க வேண்டும். அதிக பிஎம்ஐ இருப்பது உங்கள் கருத்தரிக்கும் வாய்ப்புகளைத் தடுக்கும். 35 மற்றும் அதற்கு மேற்பட்ட பிஎம்ஐ ப்ரீ-எக்லாம்ப்சியா அபாயத்தை அதிகரிக்கிறது. இது தாய் மற்றும் குழந்தைக்கு ஆபத்தான நிலை என அறியப்படுகிறது. அதிக பிஎம்ஐ இருந்தால் இரத்த உறைவு, கருச்சிதைவு, முன்கூட்டிய குழந்தை பிறப்பு மற்றும் கர்ப்ப காலத்தில் நீரிழிவு போன்ற பிரச்னைகளை உருவாக்கலாம்.

    MORE
    GALLERIES

  • 57

    பிசிஓஎஸ் இருக்கும் பெண்கள் கருத்தரிக்க முயற்சி செய்கிறீர்கள் எனில் இதையெல்லாம் கட்டாயம் ஃபாலோ பண்ணுங்க...

    மன அழுத்தத்தை நிர்வகிக்கவும் : நிர்வகிக்கப்படாத மன அழுத்தம் கருத்தரிக்க முயற்சிக்கும் பெண்களுக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். தியானம் செய்ய முயற்சி செய்யுங்கள், பாடல்களைக் கேளுங்கள், யோகா செய்யுங்கள், நடைப்பயிற்சி செய்யுங்கள் அல்லது உங்கள் அன்புக்குரியவர்களுடன் மன அழுத்தத்தைக் குறைக்க மற்றும் உங்கள் கருவுறுதலை அதிகரிக்க நேரம் செலவிடுங்கள்.

    MORE
    GALLERIES

  • 67

    பிசிஓஎஸ் இருக்கும் பெண்கள் கருத்தரிக்க முயற்சி செய்கிறீர்கள் எனில் இதையெல்லாம் கட்டாயம் ஃபாலோ பண்ணுங்க...

    இனப்பெருக்க தொழில்நுட்பம் உதவி : பிசிஓஎஸ் நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அதிக உடல் எடை முதல் முகத்தில் முடி வளர்ச்சி மற்றும் ஹைபரின்சுலினீமியா வரை பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் இருக்கும். இது கருத்தரிக்கும் செயல்முறையை சிக்கலாக்கும். எனவே அவர்கள், IVF சிகிச்சைக்கு முன் எண்டோமெட்ரியல் நியோபிளாசியா, ஹைபரின்சுலினீமியா மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகளை சரி செய்யும் சிறந்த சிகிச்சை முறைகளை மேற்கொள்ளுங்கள். அதை மருத்துவரிடம் கொண்டு சென்று கலந்து ஆலோசனை செய்யுங்கள்.

    MORE
    GALLERIES

  • 77

    பிசிஓஎஸ் இருக்கும் பெண்கள் கருத்தரிக்க முயற்சி செய்கிறீர்கள் எனில் இதையெல்லாம் கட்டாயம் ஃபாலோ பண்ணுங்க...

    ஒரு சீரான உணவு வேண்டும் : நல்ல சீரான உணவு மற்றும் ஜங்க் ஃபுட்களை தவிர்ப்பது முக்கியம். துத்தநாகம், இரும்பு, நார்ச்சத்து, கார்போஹைட்ரேட் மற்றும் நல்ல கொழுப்புகள் நிறைந்த உணவுகளை உட்கொள்ளுங்கள். பருப்பு மற்றும் பீன்ஸ் அதிகமாக உட்கொள்ளுங்கள். சர்க்கரை நிறைந்த உணவுகளைத் தவிர்க்கவும். வெண்ணெய், கொட்டைகள், விதைகள் மற்றும் மீன் எண்ணெய் போன்ற நிறைவுறா உணவுகளை உட்கொள்ளவும்.

    MORE
    GALLERIES