அதற்கு முன்னதாக தைராய்டு என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும். தைராய்டு என்பது நம் தொண்டைப் பகுதியில் பட்டாம்பூச்சி போன்ற அமைப்பில் உள்ள சுரப்பி ஆகும். இது உடலுக்கு தேவையான ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது. இந்த சுரப்பி பாதிக்கப்பட்டு, உடலுக்கு தேவையான ஹார்மோன்களை உற்பத்தி செய்ய முடியாமல் போனால் அதனை ஹைப்போதைராய்டிஸம் என்று குறிப்பிடுகின்றனர்.