முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » செக்ஸ் ஆற்றலை அதிகரிக்கும் கிராம்பு : ஆண்களின் ஆரோக்கியத்திற்கு மகத்தான நன்மைகளை தரும் மசாலா

செக்ஸ் ஆற்றலை அதிகரிக்கும் கிராம்பு : ஆண்களின் ஆரோக்கியத்திற்கு மகத்தான நன்மைகளை தரும் மசாலா

பல நூறு ஆண்டுகளாக ஆண்களின் பொதுவான உடல்நலம் மற்றும் உயிர்ச்சக்தி பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க கிராம்பு பயன்படுத்தப்படுகிறது.

 • 18

  செக்ஸ் ஆற்றலை அதிகரிக்கும் கிராம்பு : ஆண்களின் ஆரோக்கியத்திற்கு மகத்தான நன்மைகளை தரும் மசாலா

  நம் இந்திய சமையலறைகளில் பயன்படுத்தப்படும் பல மசாலா பொருட்கள் மருத்துவ குணங்கள் நிறைந்தவை. உடல்நலனுக்கு அவை செய்யும் மாயங்கள் காரணமாக தங்கத்தை விட மதிப்புடையவையாக இருக்கின்றன. உங்கள் தினசரி உணவில் ஒரு மசாலாவை சேர்ப்பதன் மூலம் உங்கள் பாலியல் வாழ்க்கை, செரிமானம், சுவாச மண்டலம் உள்ளிட்டவற்றை மேம்படுத்தலாம். போதை பழக்கத்திலிருந்து விடுபடலாம் மற்றும் கருவுறுதல் விகிதத்தைஅதிகரிக்கலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா..? அந்த மசாலா கிராம்பு. பல நூறு ஆண்டுகளாக ஆண்களின் பொதுவான உடல்நலம் மற்றும் உயிர்ச்சக்தி பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க கிராம்பு பயன்படுத்தப்படுகிறது.

  MORE
  GALLERIES

 • 28

  செக்ஸ் ஆற்றலை அதிகரிக்கும் கிராம்பு : ஆண்களின் ஆரோக்கியத்திற்கு மகத்தான நன்மைகளை தரும் மசாலா

  இதன் சிறப்பான மருத்துவ பயன்கள் காரணமாக பல ஆயுர்வேத மருந்துகளை தயாரிப்பதில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது கிராம்பு. பல ஆய்வுகள் கிராம்புகளில் உள்ள கலவைகள் கல்லீரல் ஆரோக்கியத்தை ஆதரிப்பது மற்றும் ரத்த சர்க்கரை அளவை உறுதிப்படுத்த உதவுவது உட்பட பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருப்பதை வெளிப்படுத்தி உள்ளன. கிராம்பின் நன்மைகள் பற்றி இப்போது பார்க்கலாம்.

  MORE
  GALLERIES

 • 38

  செக்ஸ் ஆற்றலை அதிகரிக்கும் கிராம்பு : ஆண்களின் ஆரோக்கியத்திற்கு மகத்தான நன்மைகளை தரும் மசாலா

  பல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது: பல் சார்ந்த கோளாறுகளுக்கு சிகிச்சையளிப்பதில் கிராம்பு பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் இதில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் கிருமி நாசினிகள் நிறைந்துள்ளன. இது பிளேக் (plaque) மற்றும் ஈறு அழற்சி போன்ற பொதுவான பல் மற்றும் ஈறு பிரச்சனைகளை மேம்படுத்த உதவுகிறது. வாய் துர்நாற்றத்தை போக்கவும் உதவுகிறது. தவிர கிராம்பு பல்வலிக்கு தற்காலிக நிவாரணியாக பயன்படுத்தப்படுகிறது. பாதிக்கப்பட்ட பல் அல்லது குழிக்குள் கிராம்பை செருகுவது அந்த பகுதியை மரத்து போக செய்து வலியிலிருந்து தற்காலிக நிவாரணம் அளிக்கும்.

  MORE
  GALLERIES

 • 48

  செக்ஸ் ஆற்றலை அதிகரிக்கும் கிராம்பு : ஆண்களின் ஆரோக்கியத்திற்கு மகத்தான நன்மைகளை தரும் மசாலா

  சுவாச ஆரோக்கியம்: இயற்கையான சளி நீக்கியாக செயல்படும் கிராம்பு தொண்டை மற்றும் உணவுக்குழாயில் உள்ள சளியை தளர்த்தி வெளியேற்ற உதவுகிறது. சுவாச நோய்த்தொற்றை சமாளிக்கவும் கிராம்பு பயன்படுகிறது. கிராம்புகளை மென்று சாப்பிடுவது அல்லது கிராம்புகள் சேர்க்கப்பட்ட மசாலா டீ குடிப்பது வீக்கத்தை குறைக்க, தொண்டை புண் குணமாகவும் மற்றும் சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். மூச்சுக்குழாய் அழற்சி, இருமல், ஆஸ்துமா மற்றும் மேல்-சுவாச நிலைகள் உள்ளிட்ட சுவாச கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்க கூடிய ஒரு எதிர்பார்ப்பு மருந்தாக கிராம்பு செயல்படுகிறது.

  MORE
  GALLERIES

 • 58

  செக்ஸ் ஆற்றலை அதிகரிக்கும் கிராம்பு : ஆண்களின் ஆரோக்கியத்திற்கு மகத்தான நன்மைகளை தரும் மசாலா

  வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும்: உணவுக்கு பின் ஒன்றிரண்டு கிராம்புகளை மென்று சாப்பிடுவது அல்லது கிராம்பு கலந்த டீடாக்ஸ் தண்ணீரை பருகுவது நல்ல செரிமானத்திற்கு உதவும். தவிர கிராம்பு மற்றும் எண்ணெய் வளர்சிதை மாற்ற விகிதத்தை துரிதப்படுத்த மற்றும் மேம்படுத்த உதவும். கிராம்பு இன்சுலின் அளவை இயற்கையாகவே திறம்பட நிர்வகிக்க உதவி நீரிழிவு நோயை தடுப்பதில் பங்காற்றுகிறது.

  MORE
  GALLERIES

 • 68

  செக்ஸ் ஆற்றலை அதிகரிக்கும் கிராம்பு : ஆண்களின் ஆரோக்கியத்திற்கு மகத்தான நன்மைகளை தரும் மசாலா

  ஆண்கள் ஏன் கிராம்பை அவசியம் எடுத்து கொள்ள வேண்டும்? பாரம்பரியமான இந்த மசாலா, முன்கூட்டியே விந்து வெளியேறும் சிக்கல், குறைந்த விந்தணு இயக்கம் ஆண்களின் பொதுவான பாலியல் பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க பல வடிவங்களில் பழங்கால மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டது. கிராம்புகளை மென்றும் சாப்பிடலாம் அல்லது தேநீர் வடிவிலும் எடுத்து கொள்ளலாம்.

  MORE
  GALLERIES

 • 78

  செக்ஸ் ஆற்றலை அதிகரிக்கும் கிராம்பு : ஆண்களின் ஆரோக்கியத்திற்கு மகத்தான நன்மைகளை தரும் மசாலா

  உயிர்ச்சக்தியை அதிகரிக்கிறது : உயிர்ச்சக்தி என்பது ஒரு நபரின் ஆற்றல் மற்றும் சுறுசுறுப்பை குறிக்கிறது. மேலும் ஒரு நபரின் வாழும் மற்றும் வளரும் திறனை விவரிக்க பயன்படுத்தப்படும் சொல்லாகவும் இருக்கிறது. சூடான ஆற்றல் கொண்ட கிராம்பு உடல் வெப்பநிலையை அதிகரித்து ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. கிராம்பு அல்லது கிராம்பு டீ சாப்பிடுவது மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை குறைக்கிறது.

  MORE
  GALLERIES

 • 88

  செக்ஸ் ஆற்றலை அதிகரிக்கும் கிராம்பு : ஆண்களின் ஆரோக்கியத்திற்கு மகத்தான நன்மைகளை தரும் மசாலா

  எல்லாவற்றுக்கும் மேலாக மேலே குறிப்பிடப்படி ஆண்களுக்கு இருக்கும் சில பொதுவான பாலியல் பிரச்சனைகளை சரி செய்கிறது. கிராம்புகளில் உள்ள அத்தியாவசிய எண்ணெய் ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஆற்றலை மேம்படுத்த உதவுகிறது. செக்ஸ் டிரைவ் மற்றும் விந்தணு இயக்கத்தை மேம்படுத்தும் பழங்கால ரகசியங்களில் ஒன்றாக கிராம்பின் பயன்பாடு இருக்கிறது.

  MORE
  GALLERIES