கறிவேப்பிலை என்பது நாம் தினமும் சமைக்கக்கூடிய பலவிதமான உணவுப் பொருட்களிலும் சேர்ப்பது வழக்கம். முக்கியமாக குழம்பு, பொரியல் போன்ற அனைத்திலுமே, தாளிக்கும் பொழுது கருவேப்பிலை இல்லாமலேயே இருக்காது. அந்த அளவிற்கு நாம் கறிவேப்பிலையை அனைத்து உணவு வகைகளையும் சேர்த்து வந்துள்ளோம். கறிவேப்பிலை என்பது வாசனைக்காக மட்டுமே உபயோகிக்க கூடிய ஒரு வாசனை பொருள் என்றே நம்மில் பலரும் நினைத்து வருகிறோம். ஆனால் உண்மையிலேயே கருவேப்பிலையில் ஏகப்பட்ட நன்மைகள் ஒளிந்திருக்கின்றன.
கறிவேப்பிலையில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின்-ஏ போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை கல்லீரல் மற்றும் செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைக்கிறது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் கறிவேப்பிலை சாறு குடிப்பதால் நல்ல பலன் கிடைக்கும். எலுமிச்சம் பழச்சாறு மற்றும் கறிவேப்பிலைச் சாறு சர்க்கரையுடன் சேர்த்து உட்கொள்ள வேண்டும். இது வாந்தி, குமட்டல் போன்ற பிரச்சனைகளைத் தடுக்கிறது.