ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » கர்ப்பிணிகள் குழந்தை பெற்றுக்கொள்ளும் முன் தாய்ப்பால் கொடுப்பது பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்

கர்ப்பிணிகள் குழந்தை பெற்றுக்கொள்ளும் முன் தாய்ப்பால் கொடுப்பது பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்

பொதுவாக குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்தில் இருந்து, ஆறு மாதங்கள் வரை தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று WHO பரிந்துரைத்து வருகிறது. அதன் முழு காரணம் தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் தான். குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பது நிமோனியா, வயிற்றுப்போக்கு மற்றும் காது நோய்த்தொற்றின் அபாயத்தை குறைக்கிறது

 • 19

  கர்ப்பிணிகள் குழந்தை பெற்றுக்கொள்ளும் முன் தாய்ப்பால் கொடுப்பது பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்

  பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் ஏராளம். புதிதாகப் பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது, அவர்கள் தாய் பாலின் மூலம் உடலுக்கு தேவையான அனைத்து நோய் எதிர்ப்பு சக்தியையும் பெறுவார்கள். ஆனால் பிரசவத்திற்கு பிறகு சில சமயங்களில், சில தாய்மார்களுக்கு போதிய அளவு தாய்ப்பால் உற்பத்தி ஆகாது. இதனால் அவர்கள் தாய்ப்பாலுக்காக வேறு ஃபார்முலாவுக்கு மாற வேண்டியிருக்கும்.

  MORE
  GALLERIES

 • 29

  கர்ப்பிணிகள் குழந்தை பெற்றுக்கொள்ளும் முன் தாய்ப்பால் கொடுப்பது பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்

  பொதுவாக குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்தில் இருந்து, ஆறு மாதங்கள் வரை தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று WHO பரிந்துரைத்து வருகிறது. அதன் முழு காரணம் தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் தான். குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பது நிமோனியா, வயிற்றுப்போக்கு மற்றும் காது நோய்த்தொற்றின் அபாயத்தை குறைக்கிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இதுதவிர அவர்களை ஒவ்வாமையிலிருந்து பாதுகாத்து அவர்களின் IQ-ஐ அதிகரிக்க தாய்ப்பால் உதவுகிறது.

  MORE
  GALLERIES

 • 39

  கர்ப்பிணிகள் குழந்தை பெற்றுக்கொள்ளும் முன் தாய்ப்பால் கொடுப்பது பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்

  தற்போது உலகெங்கிலும் தாய்ப்பால் வாரம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் குழந்தையைப் பெற்றுக்கொள்வதற்கு முன்னதாக ஒரு தம்பதியினர், குறிப்பாகத் கர்ப்பிணி பெண்கள் தாய்ப்பால் கொடுப்பது பற்றி கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்து பின்வருமாறு காணலாம்.

  MORE
  GALLERIES

 • 49

  கர்ப்பிணிகள் குழந்தை பெற்றுக்கொள்ளும் முன் தாய்ப்பால் கொடுப்பது பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்

  1. அடிப்படைகளைக் கற்றுக்கொள்ளுங்கள்: பெரும்பாலான மருத்துவமனைகள் பிரசவத்திற்கு முன்பே இதுதொடர்பான வகுப்புகளை நடத்தி வருகின்றன. அதில் குழந்தைக்கு உணவளிக்க பல்வேறு வழிகள், பல்வேறு நிலைகள் மற்றும் குழந்தையை மார்பகத்துடன் இணைக்கும் முறையைப் பற்றி பயிற்சி அளிக்கின்றனர். தாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் தடையாக இருக்கக்கூடிய தட்டையான அல்லது தலைகீழ் முலைக்காம்புகள் போன்ற பிரச்சினைகளை அடையாளம் காண, மார்பக மற்றும் முலைக்காம்புகளை பரிசோதிக்க வேண்டும். இதற்கு உங்கள் மருத்துவர் அல்லது பாலூட்டும் ஆலோசகரை அணுகுவது நல்லது. உங்கள் ஆலோசகர் இந்த சிக்கல்களை எப்படி சமாளிப்பது என்பதை விளக்குவார். இதன் மூலம் முலைக்காம்பு புண், மார்பகக் கோளாறு அல்லது பயனற்ற latch போன்ற தேவையற்ற சிக்கல்களைக் குறைக்கலாம்.

  MORE
  GALLERIES

 • 59

  கர்ப்பிணிகள் குழந்தை பெற்றுக்கொள்ளும் முன் தாய்ப்பால் கொடுப்பது பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்

  2. ஸ்டாக் அப்: மருத்துவமனைக்கு செல்லும் போதோ அல்லது வீட்டில் இருக்கும் போதோ குழந்தைக்கு வசதியாக உணவளிக்க பொருத்தமான மற்றும் பாதுகாப்பான ஆடைகளை அணியுங்கள். முதன்முதலில் பால் வரத் தொடங்கியவுடன், முதல் சில நாட்களுக்குப் பிறகு மார்பகப் பட்டைகளின் தேவை சிலருக்கு இருக்கலாம். சிலருக்கு முதல் சில வாரங்களில் மார்பக பம்ப்-ன் தேவை இருக்கலாம். குறிப்பாக முன்கூட்டிய பிறப்பு அல்லது வேறு ஏதேனும் பிரச்சினைகளால் குழந்தைக்கு பாலை உறிஞ்ச முடியாமல் போகலாம். அந்த சமயத்தில் இதன் உதவி அவசியம்.

  MORE
  GALLERIES

 • 69

  கர்ப்பிணிகள் குழந்தை பெற்றுக்கொள்ளும் முன் தாய்ப்பால் கொடுப்பது பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்

  3. ஒரு திட்டத்தை உருவாக்கி கொள்ளுங்கள்: பிரசவத்திற்குப் பிறகு முதல் ஒரு மணி நேரத்திற்குள் நீங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை உறுதி செய்ய உங்கள் மருத்துவரிடம் ஒரு திட்டத்தை பெறவும். "கொலஸ்ட்ரம்" இது குழந்தையின் முதல் இயற்கை தடுப்பூசி என்று அழைக்கப்படுகிறது. கர்ப்பத்தின் முடிவில் உற்பத்தி செய்யப்படும் கொலஸ்ட்ரம் என்ற மஞ்சள் நிற பால், ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டிபாடிகள் நிறைந்தவையாக இருக்கும். எனவே, பிறந்த முதல் ஒரு மணிநேரத்தில் குழந்தைக்கு அந்த பாலை கொடுப்பது மிக அவசியம். சாதாரண பிரசவத்திற்குப் பிறகும், அறுவைசிகிச்சை பிரசவத்திற்கு பிறகும் முடிந்தவரை குழந்தை உங்கள் சருமம் தோலைத் தொடர்புகொள்வதை உறுதி செய்யவும். இது மார்பகத்திற்கு ஒரு சிறந்த திறப்பானாக இருக்க உதவும்.

  MORE
  GALLERIES

 • 79

  கர்ப்பிணிகள் குழந்தை பெற்றுக்கொள்ளும் முன் தாய்ப்பால் கொடுப்பது பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்

  4. மற்ற குடும்ப உறுப்பினர்களிடமிருந்து உதவியைப் பெறுங்கள்: வீட்டு வேலைகள் அல்லது வழக்கமான வேலைகள் மற்றும் குழந்தையைப் பராமரிப்பது போன்ற பொறுப்புகளை வீட்டில் உள்ள மற்ற உறுப்பினர்களிடம் ஒப்படைப்பது முக்கியம். இதனால், பிரசவத்திற்கு பிறகு குழந்தைக்கு உணவளிப்பதிலும் இடையில் போதுமான ஓய்வு பெறுவதிலும் ஒரு தாய் கவனம் செலுத்த முடியும்.

  MORE
  GALLERIES

 • 89

  கர்ப்பிணிகள் குழந்தை பெற்றுக்கொள்ளும் முன் தாய்ப்பால் கொடுப்பது பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்

  5. தாய்ப்பால் மற்றும் கோவிட்: தாய்மார்களுக்கு பிரசவத்தின்போதோ அல்லது அதற்கு முன்னதாகவோ கோவிட் தொற்று இருப்பது கண்டறியப்பட்டால், கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. தனது குழந்தைக்கு அவர்கள் தாய்ப்பால் கொடுக்கலாம். முகக்கவசம் அணிவது மற்றும் அடிக்கடி கை கழுவுதல் போன்ற போதுமான முன்னெச்சரிக்கைகளுடன் தாய்ப்பால் கொடுக்க அவர்கள் வலியுறுத்தப்படுகிறார்கள். பாலூட்டும் தாய்மார்கள் பாதுகாப்பிற்காக தடுப்பூசி போட்டுக்கொண்டும் தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 99

  கர்ப்பிணிகள் குழந்தை பெற்றுக்கொள்ளும் முன் தாய்ப்பால் கொடுப்பது பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்

  6. மனதளவில் தயாராக இருங்கள்: தாய்ப்பால் கொடுக்கும் முறையில் அதிக நேரம் ஆகலாம். சில சமயங்களில் சோர்வு கூட தரும். முதல் சில வாரங்களில், குழந்தைகளுக்கு ஒவ்வொரு 2-3 மணி நேரத்திற்கும் உணவளிக்க வேண்டும். சில நேரங்களில் இரவில் அடிக்கடி கொடுக்க வேண்டியிருக்கும். எனவே, சுய சந்தேகம் மற்றும் கவலை பால் வெளியேற்றத்தைத் தடுக்கும் என்பதால் உறவினர்கள் வெளிப்படுத்தும் உணர்ச்சிகளையும் கருத்துகளையும் மனதில் போட்டுக்கொள்ளவேண்டாம்.

  MORE
  GALLERIES