உடலுறவு என்பது இருவர் தங்களின் உணர்வுகளை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு அழகான விஷயம். பாலுறவு குறித்த அனைத்து விஷயங்களும் தெரியாவிட்டாலும், ஓரளவுக்கு அனைவருக்கும் இது குறித்த புரிதல் இருக்கும். ஆனால், உடலுறவுக்கு பின் நாம் கட்டாயம் செய்ய வேண்டிய விஷயங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?. ஆரோக்கியமான உடலுறவை பேண, உடலுறவுக்கு பின்னர் நாம் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய சில விஷயங்களை பற்றி இங்கு காணலாம்.
வெந்நீர் குளியல் : உடலுறவுக்கு பின்னர் ஏற்படும் உடல் வலி, களைப்பு போன்ற பிரச்சனைகளை தவிர்க்க, மிதமான சூட்டில் ஒரு வெந்நீர் குளியல் போடுவது நல்லது. முடிந்தால், பாத்-டப்பில் வெந்நீர் நிரப்பி சிறிது நேரம் அதில் ஓய்வு எடுப்பது நல்லது. இது உங்களுக்கு நல்ல உறக்கத்தை தருவதுடன், உடலை புத்துணர்ச்சியாக வைக்கும்.