முகப்பு » புகைப்பட செய்தி » கொலஸ்ட்ரால் இருக்கவங்க இதை மட்டும் செய்யவே கூடாது..!

கொலஸ்ட்ரால் இருக்கவங்க இதை மட்டும் செய்யவே கூடாது..!

இங்கே கொலஸ்ட்ரால் விஷயத்தில் ஆபத்தில் ஆழ்த்தக்கூடிய அதே நேரம் மக்கள் புறக்கணிக்கும் சில விஷயங்களை பற்றி இங்கே பார்க்கலாம்.

 • 19

  கொலஸ்ட்ரால் இருக்கவங்க இதை மட்டும் செய்யவே கூடாது..!

  ஒருவரது கொலஸ்ட்ரால் லெவல் 200 mg/dL-க்கும் அதிகமாக இருப்பது ஆபத்தானதாக கருதப்படுகிறது. ஒரு நார்மல் கொலஸ்ட்ரால் அல்லது பிளட் லிப்பிட் ரிப்போர்ட்டானது ஹை டென்சிட்டி லிப்போப்ரோட்டீன், லோ டென்சிட்டி லிப்போப்ரோட்டீன், ட்ரைகிளிசரைட்ஸ் உள்ளிட்ட 3 காம்போனென்ட்ஸ்களை உள்ளடக்கியது.

  MORE
  GALLERIES

 • 29

  கொலஸ்ட்ரால் இருக்கவங்க இதை மட்டும் செய்யவே கூடாது..!

  இவை பெரும்பாலும் நம் உடலில் உள்ள ஒட்டுமொத்த கொலஸ்ட்ரால் கலவையை (cholesterol composition) தீர்மானிப்பதாக கருதப்படுகிறது. கொலஸ்ட்ரால் பரிசோதனையில் மற்ற அளவுறருக்களை விட லோ டென்சிட்டி லிப்போப்ரோட்டீன் எனப்படும் LDL அளவின் மீது அதிக கவனம் செலுத்தப்படுகிறது. LDL என்பது கெட்ட கொலஸ்ட்ரால் என குறிப்பிடப்படுகிறது. LDL-ன் நார்மல் ரேஞ்ச் 100 mg/dL-க்கும் குறைவாக உள்ளது.

  MORE
  GALLERIES

 • 39

  கொலஸ்ட்ரால் இருக்கவங்க இதை மட்டும் செய்யவே கூடாது..!

  ஹை டென்சிட்டி லிப்போப்ரோட்டீன் எனப்படும் HDL மற்றும் ட்ரைகிளிசரைட்ஸ் முறையே 40mg/dL அல்லது அதற்கும் அதிகமாகவும் 150 mg/dL-க்கும் குறைவாகவும் இருக்க வேண்டும். இங்கே கொலஸ்ட்ரால் விஷயத்தில் ஆபத்தில் ஆழ்த்தக்கூடிய அதே நேரம் மக்கள் புறக்கணிக்கும் சில விஷயங்களை பற்றி இங்கே பார்க்கலாம்.

  MORE
  GALLERIES

 • 49

  கொலஸ்ட்ரால் இருக்கவங்க இதை மட்டும் செய்யவே கூடாது..!

  ரெகுலர் செக்கப் : பல உயிருக்கு ஆபத்தான நோய்கள் எளிதில் தீவிரமடைய முக்கிய காரணங்களில் ஒன்று மக்கள் தங்களது ரெகுலர் மெடிக்கல் செக்கப்-ஐ புறக்கணிப்பது. அதிக கொலஸ்ட்ரால் இருந்தால், ரத்தத்தில் உள்ள லிப்பிட் ப்ரொஃபைல் அளவை தவறாமல் சரிபார்க்க வேண்டியது அவசியம். வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் மருந்துகள் மூலம் ஹை லெவல் LDL கட்டுப்படுத்தப்பட வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 59

  கொலஸ்ட்ரால் இருக்கவங்க இதை மட்டும் செய்யவே கூடாது..!

  ரெகுலர் ஒர்கவுட்ஸ் : பெருந்தொற்றுக்கு பிறகு ஒர்கவுட்ஸ் மற்றும் பிசிக்கல் ஆக்டிவிட்டீஸ் பற்றி விழிப்புணர்வு அதிகரித்திருந்தாலும் இன்னும் நம்மில் எத்தனை பேர் தினசரி தவறாமல் இவற்றை பின்பற்றி வருகிறோம். கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த மருந்துகள் உதவும் என்பதன் அடிப்படையில் statins பரிந்துரைக்கப்பட்டவுடன் பலர் மருந்தை மட்டுமே நம்பியிருக்கிறார்கள். ஆனால் உடல் ரீதியாகவும் சுறுசுறுப்பாக இருப்பது கொலஸ்ட்ரால் பிரச்சனைக்கு மிகவும் முக்கியம். குறைந்தபட்சம் வாரத்திற்கு 150 நிமிட நடைப்பயிற்சி போன்ற உடல் செயல்பாடுகள் இதய நோய் போன்ற உயர் கொலஸ்ட்ரால் தொடர்பான அபாயங்களைக் குறைப்பதை ஆய்வுகள் காட்டுகின்றன.

  MORE
  GALLERIES

 • 69

  கொலஸ்ட்ரால் இருக்கவங்க இதை மட்டும் செய்யவே கூடாது..!

  நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது... நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதால் ஏற்படும் ஆபத்துகளை பலரும் புறக்கணிக்கிறோம். அதிக நேரம் உட்கார்ந்தே இருப்பது உடல் பருமன் அபாயத்தை அதிகரிக்கிறது. உடலில் ரத்த அழுத்தம் அதிகரிக்க இதுவும் ஒரு காரணம். வேலை நிமித்தமாக நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது இடுப்பை சுற்றி கொழுப்பை அதிகரிப்பதோடு மற்றும் ஆரோக்கியமற்ற கொலஸ்ட்ரால் எனப்படும் LDL அளவை உடலில் அதிகரிக்கிறது. இப்பழக்கம் உடலில் HDL எனப்படும் நல்ல கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது.

  MORE
  GALLERIES

 • 79

  கொலஸ்ட்ரால் இருக்கவங்க இதை மட்டும் செய்யவே கூடாது..!

  புகைப்பழக்கம் : புகைப்பழக்கத்தால் ஏற்படும் ஆபத்துகளை நாம் புறக்கணிக்கிறோம். இந்த பழக்கத்திற்கும் கொலஸ்ட்ரால் லெவல் அதிகரிப்பதற்கும் இடையே உள்ள தொடர்பை பல ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. மேலும் புகை பழக்கத்தை கைவிடுவது உடலில் நல்ல கொலஸ்ட்ரால் (HDL) அளவை அதிகரிக்க உதவுகிறது. ஆம், HDL மற்றும் புகைப்பழக்கம் ஆகியவை ஒன்றுக்கொன்று நேர்மாறாக தொடர்புடையவை. புகைப்பழக்கம் ரத்தத்தில் உள்ள HDL அளவை குறைக்கிறது.

  MORE
  GALLERIES

 • 89

  கொலஸ்ட்ரால் இருக்கவங்க இதை மட்டும் செய்யவே கூடாது..!

  உடல் எடை : சில கூடுதல் கிலோ எடை அதிகரிப்பை கூட நாம் அலட்சியம் செய்ய கூடாது. நிபுணர்களின் கூற்றுப்படி, ஒவ்வொரு கூடுதல் 10 பவுண்டுகளும் உடல், 10 மிகி கூடுதல் கொழுப்பை உற்பத்தி செய்கிறது. எனவே கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும் விஷயத்தில் அதிக எடை மற்றும் உடல் பருமன் ஆபத்தானது என மருத்துவர்கள் எச்சரிகின்றனர். அதிக எடை அல்லது உடல் பருமனாக இருப்பது கெட்ட கொழுப்பை (LDL) அதிகரித்து நல்ல கொழுப்பை (HDL) குறைப்பதாக அமெரிக்கன் ஹார்ட் அசோசியேன் கூறுகிறது.

  MORE
  GALLERIES

 • 99

  கொலஸ்ட்ரால் இருக்கவங்க இதை மட்டும் செய்யவே கூடாது..!

  கொலஸ்ட்ராலை எப்படி நிர்வகிப்பது..? கொலஸ்ட்ராலை நிர்வகிப்பதில் வாழ்க்கை முறை மாற்றங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒருவர் அதிக நேரம் உட்கார்ந்தே இருக்க கூடாது, வேலைகளுக்கு நடுவே ஓய்வெடுக்க வேண்டும். ஒவ்வொரு 20-30 நிமிடங்களுக்கு ஒருமுறை உட்காரும் நிலையை மாற்றி லேசான சிலநிமிட வாக்கிங்கில் ஈடுபடலாம். ஒருவேளை ஒர்கவுட்டில் ஈடுபட முடியாவிட்டால் மொபைல் பேசும் சந்தர்ப்பங்களில் நடந்து கொண்டே பேசுவதில் கவனம் செலுத்தலாம்.

  MORE
  GALLERIES