முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » தொப்பையை ஈசியா குறைக்கலாம்… தினமும் 10 நிமிடங்கள் வொர்க் அவுட் செய்தால் போதும்..!

தொப்பையை ஈசியா குறைக்கலாம்… தினமும் 10 நிமிடங்கள் வொர்க் அவுட் செய்தால் போதும்..!

தினமும் வொர்க் அவுட் செய்வதால் உங்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் நீங்கி தொப்பை விரைவில் குறையும்.

  • 16

    தொப்பையை ஈசியா குறைக்கலாம்… தினமும் 10 நிமிடங்கள் வொர்க் அவுட் செய்தால் போதும்..!

    உங்கள் உடலில் குறைவான கொழுப்பை விரும்புவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. உடல் எடையை குறைப்பதற்கு உடற்பயிற்சி முக்கியம் என்பது மறுப்பதற்கில்லை. மேலும், அனைத்து வகையான உடற்பயிற்சிகளும் உங்களை சுறுசுறுப்பாகவும் நன்றாகவும் வைத்திருக்க உதவியாக இருக்கும். குறிப்பாக, தொப்பையைக் குறிவைத்து கொழுப்பை அகற்றச் செய்வதற்கு மிகவும் பயனுள்ள சில உடற்பயிற்சிகள் உள்ளன. ஜாகிங் மற்றும் சைக்கிலிங் இரண்டும் சிறந்த தேர்வுகள். அத்துடன் செடண்ட்டரி லைஃப்ஸ்டைல் எனப்படும் ஒரே இடத்தில் உட்கார்ந்துகொண்டு வாழ்க்கையை கழிக்கும் முறையைத் தவிர்ப்பதற்கான ஒரு வழியாக நடைபயிற்சி உதவும். எந்தவிதமான உடல் கொழுப்பும் அதிகமாக இருந்தால் அது உங்கள் ஆரோக்கியத்திற்கு கேடு. உள்ளுறுப்பு கொழுப்பு இதய நோய், அல்சைமர், டைப் 2 நீரிழிவு நோய், பக்கவாதம் மற்றும் அதிக கொலஸ்ட்ரால் போன்ற தீவிர மருத்துவ பிரச்சனைகளின் ஆபத்தை அதிகரிக்கும். சரி, தொப்பையை குறைக்க உதவும் எளிதான வொர்க் அவுட் குறித்து பார்க்கலாம்.

    MORE
    GALLERIES

  • 26

    தொப்பையை ஈசியா குறைக்கலாம்… தினமும் 10 நிமிடங்கள் வொர்க் அவுட் செய்தால் போதும்..!

    வாம்-அப் (Warmup): ஜாகிங் அல்லது ஜம்பிங் ஜாக்ஸ் போன்ற 2 முதல் 3 நிமிட வாம்-அப் செய்வது நம் உடலை சாந்தப்படுத்தும்.

    MORE
    GALLERIES

  • 36

    தொப்பையை ஈசியா குறைக்கலாம்… தினமும் 10 நிமிடங்கள் வொர்க் அவுட் செய்தால் போதும்..!

    பாப்-ஸ்குவாட்ஸ் (Pop Squats): தோள்பட்டை அகலத்தில் கால்களை நிறுத்தி, இரண்டு கால்களையும் பக்கவாட்டில் வைத்து ஒரு அரை அமருவதில் நிலைக்கு கீழே வந்து, பின்னர் தொடக்க நிலைக்குத் திரும்பவும்.

    MORE
    GALLERIES

  • 46

    தொப்பையை ஈசியா குறைக்கலாம்… தினமும் 10 நிமிடங்கள் வொர்க் அவுட் செய்தால் போதும்..!

    பர்பீஸ் (Burpees): தோள்பட்டையின் அகலத்துடன் நின்று, ஒரு பிளாங்க் நிலைக்கு விரைவாக கீழே இறங்குங்கள், புஷ்-அப் செய்யுங்கள், தொடக்க நிலைக்கு மீண்டும் மேலே குதிக்கவும். பின்னர் உங்கள் கைகளை மேல்நோக்கி அடைய நேராக குதிக்கவும்.

    MORE
    GALLERIES

  • 56

    தொப்பையை ஈசியா குறைக்கலாம்… தினமும் 10 நிமிடங்கள் வொர்க் அவுட் செய்தால் போதும்..!

    ஜம்ப்-லஞ்ச் (Jump Lunges): உங்கள் வலது காலை முன்னோக்கி மற்றும் பின்னால் இடதுபுறமாக முட்டியிட்ட நிலையில் இருக்கவும். மேலே குதித்து, உங்கள் இடது காலை முன்னும் பின்னும் வலது காலை மீண்டும் ஒரு லஞ்ச் நிலைக்கு கொண்டு வாருங்கள். விரைவாக முன்னும் பின்னுமாக மீண்டும் செய்யவும்.

    MORE
    GALLERIES

  • 66

    தொப்பையை ஈசியா குறைக்கலாம்… தினமும் 10 நிமிடங்கள் வொர்க் அவுட் செய்தால் போதும்..!

    மவுண்ட்டேன் கிளைம்பர்ஸ் (Mountain Climbers): முதலில் பிளாங்க் நிலையை எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் உங்கள் வலது முழங்காலை உங்கள் மார்பளவிற்கு உயர்த்தவும். பின்னர் இடது முழங்காலை உங்களால் முடிந்தவரை வேகமாக இயக்கவும். அடிப்படையில் ஒரு புஷ்-அப் நிலையில் இந்த உடற்பயிற்சி இயங்குகிறது. இந்த 5 வொர்க் அவுட்களையும் தினமும் 10 முதல் 15 நிமிடங்கள் செய்தால் போதும். உங்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் நீங்கி தொப்பையை குறைக்க பெரிதும் உதவும்.

    MORE
    GALLERIES