நமது வாழ்க்கை முறை நமது ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கிறது. நமக்கு வாழ்க்கையை ஆரோக்கியமாக வைக்க, நாம் என்ன சாப்பிடுகிறோம், எவ்வளவு உடற்பயிற்சி செய்கிறோம் மற்றும் பிற காரணிகள் மூலம் நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம் அல்லது மோசமாக்கலாம். எனவே, நாம் பின்பற்றும் பழக்கவழக்கங்களை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். முதுமை என்பது நமது உடலின் பொதுவான தேய்மானம் மற்றும் காலப்போக்கில் இயற்கையாக ஏற்படும் விஷயங்களில் ஒன்று. இதை தடுக்க முடியாது என்றாலும், கட்டுப்படுத்த முடியும். நம்மிடம் இருக்கும் சில பழக்கங்கள் நம்மை விரைவில் வயதானவராக காட்டும். அந்த பழக்கங்கள் என்ன என்பதை இங்கே காணலாம்.
ஆரோக்கியமற்ற உணவு : இது அதிர்ச்சியான விஷயம் அல்ல என்றாலும், நம் எல்லாருக்கும் தெரிந்த ஒன்று. ஆரோக்கியமற்ற உணவைத் தொடர்ந்து சாப்பிடுவது வளர்சிதை மாற்றத்தைக் குறைத்தல், எடை அதிகரிப்பு, அதிக கொழுப்பு, நீரிழிவு போன்றவை பாதிப்புக்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. அதுமட்டும் அல்ல, நமது சரும பிரச்சனைகளை அதிகரிப்பதுடன், விரைவில் வயதான தோற்றத்தையும் கொடுக்கிறது.
குறைந்த உடல் அசைவு : நீரிழிவு நோய் மற்றும் அதிகரித்த இதய அபாயங்கள் போன்ற பல ஆபத்தான நோய்களுக்கு குறைந்த உடல் அசைவுகள் தான் முக்கிய காரணமாக இருக்கிறது. இதனால், உடல் எடை அதிகரிப்பதுடன் முதுமையான தோற்றத்தையும் கொடுக்கும். சிலர் வேலையின் போது அதிகமாக உட்காந்திருப்பார்கள். நீங்கள் தொடர்ந்து உடற்பயிற்சி செய்தாலும் அதிகமாக உட்கார்ந்திருப்பது உடலில் இரத்த ஓட்டத்தை பாதிக்கிறது. வேலையின் போது நீங்கள் நடக்க அல்லது கால்களை நீட்ட முயற்சிக்க வேண்டும்.
அதிக மன அழுத்தம் : ஒவ்வொருவருக்கும் வெளியில் சொல்ல முடியாத பல பிரசனைகள் இருக்கும். தனிப்பட்ட வாழ்க்கை, வேலை என அனைத்து விஷயங்களிலும் பிரச்சனைகள் இருக்கும். பிரச்சனைகளுக்கு கண்டிப்பாக தீர்வு என ஒன்று இருக்கும். நீங்கள் நீண்ட காலத்திற்கு மன அழுத்தத்துடன் இருப்பது, உங்களின் உடலை சேதப்படுத்துகிறது மற்றும் வயதாவதை துரிதப்படுத்துகிறது.