நாம் அனைவரும் ஆரோக்கியத்திற்காக பல சுகாதார விஷயங்களை மேற்கொள்வோம். அது காலையில் பல் துலக்குவது முதல் இரவு குளிப்பது வரை ஆரோக்கியத்தை பேன பல விஷயங்களை செய்வோம். அப்படி நாம் தினமும் நல்லது என நினைத்து செய்யக்கூடிய சில விஷயங்கள் நமக்கு தீங்கை விளைவிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? நம் ஆரோக்கிய வாழ்வை பாதிக்கும் அந்த ஒரு சில விஷயங்கள் பற்றி இந்த பதிவில் நாம் காணலாம்.
அதிக நேரம் ஹெட் செட் பயன்படுத்துவது : நம்மில் சிலருக்கு அதிகமாக பாட்டு கேக்கும் பழக்கம் இருக்கும். பாட்டு கேப்பது நல்லது தான். ஆனால், ஹெட்செட் அதிகமாக உபயோகிப்பது நல்லது அல்ல. ஹெட் செட் மூலம் அதிகமாக பாட்டு கேட்பது, உங்கள் காதுகளின் சவ்வுகளை பாதிக்கும். அதேநேரம், காது நரம்புகளின் தொற்றுக்கும் வழிவகுத்து, காது மற்றும் வாய் வலிக்கு காரணமாக அமையும்.
நீண்ட நேரம் பல் துலக்குவது : சந்தேகமே வேண்டாம், என்னை போல உங்களுக்கும் நீண்ட நேரம் பல் துலக்கும் பழக்கம் இருக்கும். நீண்ட நேரம் பல்துலக்குவதால், பற்பசையில் உள்ள வேதிப்பொருட்கள் பல்லின் எனாமல் சிதைவுக்கு வழிவகுக்கும். அதேப்போன்று அளவுக்கு அதிகமாக பற்பசை பயன்படுத்தினாலும் பல் எனாமலை பாதிக்கும். மிளகு அளவிற்கு மட்டுமே பற்பசையை உபயோகிக்க வேண்டும்.
எச்சில் தொட்டு பணம் எண்ணுவது : ரூபாய் நோட்டுகள் எண்ணும் போதும், புத்தகத்தில் பக்கங்களை திருப்பும் போது நம்மில் சிலர் ‘விரல்களில் எச்சிலை தொட்டு’ பணத்தை எண்ணுவோம். இவ்வாறு எச்சிலை தொட்டு காகிதங்களை திருப்புவது கிருமி தொற்றுக்கு வழிவகும். நுரையீரல் பாதிப்பு கூட ஏற்படலாம். எனவே, இந்த பழக்கத்தை மாற்றுவது நல்லது.