நாம் எவ்வளவுதான் மாற்ற நினைத்தாலும் சில பழக்கங்களை நம்மால் விட முடியாது. அவை கேட்ட பழக்கமாகவும் இருக்கலாம் நல்ல பழக்கமாகவும் இருக்கலாம். நாம் அன்றாடம் செய்யும் சில நடவடிக்கைகள் நமது மூளையின் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அந்தவகையில், நமது மூளையின் ஆரோக்கியத்தை பாதிக்கும் சில பழக்கங்கள் பற்றி இங்கு பார்க்கலாம்.
அதிகமாக ஹெட்ஃபோன் பயன்படுத்துவது : தற்போதைய இளைஞர்கள், குழந்தைகள் என அனைவரும் அதிகமாக பயன்படுத்து விஷயங்களில் ஒன்று ஹெட்ஃபோன். இந்த பழக்கம் நமது மூளையின் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?. ஹெட்ஃபோன்களை அதிக சத்தத்துடன் பயன்படுத்துவது மூளை நரம்புகளை பாதிக்கும். அதுமட்டும் அல்ல, அதிக சத்தத்துடன் ஹெட்ஃபோன் பயன்படுத்துவது உங்கள் கேட்கும் திறனையும் பாதிக்கும் என கூறப்படுகிறது.
குறைவான உடல் அசைவு : உங்கள் உடலுக்கு சரியான அளவு வேலை கொடுக்காமல் ஒரே இடத்தில் படுத்திருப்பது, அமர்ந்திருப்பதும் மூளையின் செயல்பாட்டை குறைத்து மூளையின் ஆரோக்கியத்தை பாதிக்கும் என ஆய்வின் முடிவுகள் கூறுகின்றனர். அதுமட்டும் அல்ல போதிய உடல் அசைவுகள் இல்லாவிட்டால், உடல் எடை அதிகரிப்பு, மன அழுத்தம் என பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும்.