முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » இல்லத்தரசிகளுக்கு மன நிம்மதி தரும் தையல் கலையின் நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்.!

இல்லத்தரசிகளுக்கு மன நிம்மதி தரும் தையல் கலையின் நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்.!

இன்றைக்கும் பல வீடுகளில் தையல் மெஷின்கள் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக பாட்டி அல்லது அம்மாக்கள் இதை பயன்படுத்தி தங்கள் அன்புக்குரிய பிள்ளைச் செல்வங்களுக்காக துணிகளை தைத்து கொடுக்கின்றனர்.

  • 17

    இல்லத்தரசிகளுக்கு மன நிம்மதி தரும் தையல் கலையின் நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்.!

    தையல் கலை என்பது இன்று, நேற்று தொடங்கியது அல்ல. மெட்டல் ஊசிகளை கண்டறியும் முன்பாகவே தையல் கலை தொடங்கிவிட்டது. என்னது ஊசி இல்லாமல் தையலா? அதெப்படி சாத்தியம் என்று ஆச்சரியமாக உள்ளதா? ஆம், பழங்காலத்தில் கூர்மையான கற்களை கொண்டு, விலங்கு தோல்களில் துளையிட்டு தையல் செய்தனர்.

    MORE
    GALLERIES

  • 27

    இல்லத்தரசிகளுக்கு மன நிம்மதி தரும் தையல் கலையின் நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்.!

    இதன் பரிணாம வளர்ச்சியாக விலங்குகளின் எலும்புகளைக் கொண்டு ஊசி தயார் செய்யப்பட்டது. 14ஆம் நூற்றாண்டின்போது மெட்டல் ஊசிகள் தயார் செய்யப்பட்டன. இந்த நிலையில் 1830ஆம் ஆண்டு முதன் முதலாக தையல் மெஷின் தயாரிக்கப்பட்டது. அப்போதைய காலத்தில் இருந்து தையல் மிஷினும் கூட பல கட்ட மேம்பாடுகளை அடைந்துள்ளது. மனிதர்களின் உதவியின்றி தானியங்கி முறையில் இயங்கும் தையல் மிஷின்கள் கூட வந்து விட்டன. மிக நேர்த்தியான எம்பிராய்டிங் டிசைன்களை கூட அதில் செய்ய முடியும்.

    MORE
    GALLERIES

  • 37

    இல்லத்தரசிகளுக்கு மன நிம்மதி தரும் தையல் கலையின் நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்.!

    இன்றும் பழக்கத்தில் உள்ள நடைமுறை : இன்றைக்கும் பல வீடுகளில் தையல் மெஷின்கள் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக பாட்டி அல்லது அம்மாக்கள் இதை பயன்படுத்தி தங்கள் அன்புக்குரிய பிள்ளைச் செல்வங்களுக்காக துணிகளை தைத்து கொடுக்கின்றனர். தையல் தைக்கும்போது எழும்பக் கூடிய ஓசையே ஒரு இசை போல நம் மனதை ஈர்க்கும்.தையல் மிஷின்கள் நம் வாழ்வில் பெரிய அளவுக்கு மாற்றத்தை ஏற்படுத்தி, நம் வாழ்க்கையை மாற்றியமைக்கும் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? இதனால் கிடைக்கும் பலன்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

    MORE
    GALLERIES

  • 47

    இல்லத்தரசிகளுக்கு மன நிம்மதி தரும் தையல் கலையின் நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்.!

    மன அழுத்தம் மற்றும் கவலை குறையும் : இன்றைய துரித வாழ்க்கையில் பலரும் மன அழுத்தம் மற்றும் மனக்கவலை போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர். அது நம் அன்றாட வாழ்க்கையை பாதிக்கிறது. ஆனால், தையல் என்பது மனதை ஒருநிலைப்படுத்தி செய்யக் கூடிய கலை என்பதால், அது ஒரு தியானப் பயிற்சி போல அமைகிறது.

    MORE
    GALLERIES

  • 57

    இல்லத்தரசிகளுக்கு மன நிம்மதி தரும் தையல் கலையின் நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்.!

    குறிப்பாக, தையல் இடம்பெற வேண்டிய இடத்தை நோக்கி துணியை நீங்கள் நகர்த்துகின்ற நேர்த்தியான நடவடிக்கையால் மனதில் உள்ள பாரம் குறைகிறது.

    MORE
    GALLERIES

  • 67

    இல்லத்தரசிகளுக்கு மன நிம்மதி தரும் தையல் கலையின் நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்.!

    புதிதாக சிந்தனையை ஊக்குவிக்கிறது : நம் மூளையின் இடதுபக்க செயல்பாட்டை தையல் கலை ஊக்குவிக்கிறதாம். எந்த துணிக்கு எந்த கலர் நூலை பயன்படுத்தலாம், எந்த டிசைனில் தைக்கலாம் என ஒவ்வொன்றாக நம் மூளை சிந்திக்க தொடங்குகிறது. அதுவும் எம்பிராய்ட்ரி செய்பவர்களின் கலை குறித்து சொல்லத் தேவையில்லை. தினம் ஒரு புதிய டிசனை அவர்கள் முயற்சிப்பார்கள்.

    MORE
    GALLERIES

  • 77

    இல்லத்தரசிகளுக்கு மன நிம்மதி தரும் தையல் கலையின் நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்.!

    கை - கண் ஒருங்கிணைப்பு : தையல் என்பது ஏதோ வெறும் மிஷின் தொடர்புடைய வேலை அல்ல. இதை செய்யும்போது உங்கள் மூளை சிந்திக்கும், கண் கவனிக்கும், அதற்கேற்ப உங்கள் கைகள் செயல்படும். இத்தனை உறுப்புகளும் ஒரே நேர்கோட்டில் இணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும். ஒரு சில நொடிகள் கவனம் சிதறினால் கூட டிசைன் மாறி போகும் அல்லது மொத்தமும் வீணாகிவிடும். ஆக, மிக துல்லியமாக நீங்கள் கவனித்து வேலை செய்யும்போது நம் மனதில் உள்ள அழுத்தம், கவலை போன்றவை நீங்கி புத்துணர்ச்சி அடைகிறோம்.

    MORE
    GALLERIES