ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » குழந்தைகள் மொபைலில் அதிக நேரம் செலவிடுதால் நினைவாற்றல் குறைகிறதா..? தீமைகளை தெரிந்துகொள்ளுங்கள்..!

குழந்தைகள் மொபைலில் அதிக நேரம் செலவிடுதால் நினைவாற்றல் குறைகிறதா..? தீமைகளை தெரிந்துகொள்ளுங்கள்..!

Kida Care | குழந்தைகள் டிஜிட்டல் சாதனங்கல் பயனப்டுத்தும் நேரத்தை பெற்றோர்கள் கட்டுப்படுத்துங்கள். ஆன்லைன் கிளாஸ் அல்லது முக்கிய வேலைகளை தவிர மற்ற நேரங்களில் உடல் செயல்பாடுகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

 • 18

  குழந்தைகள் மொபைலில் அதிக நேரம் செலவிடுதால் நினைவாற்றல் குறைகிறதா..? தீமைகளை தெரிந்துகொள்ளுங்கள்..!

  இப்போதெல்லாம் ஒரு சின்னஞ்சிறு குழந்தையின் கைகளில் கூட செல்போன் இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. குறிப்பாக கோவிட் பெருந்தொற்று துவங்கிய காலம் முதல் தான் குழந்தைகள் அதிக நேரம் ஸ்மார்ட் ஸ்கிரீனை பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.

  MORE
  GALLERIES

 • 28

  குழந்தைகள் மொபைலில் அதிக நேரம் செலவிடுதால் நினைவாற்றல் குறைகிறதா..? தீமைகளை தெரிந்துகொள்ளுங்கள்..!

  ஆனால் ஃபோன் மூலம் குழந்தைகளின் நினைவாற்றல் பாதிக்கப்படுவதை பல பெற்றோரும் உணர தவறுகிறார்கள். மொபைலில் அதிக நேரம் செலவிடும் பழக்கத்தால் குழந்தைகள் முதல் டீனேஜ் பிள்ளைகள் வரை பலருக்கும் நினைவாற்றல் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுகின்றன. எனவே சிறு வயதிலிருந்தே தங்கள் குழந்தைகளுக்கு ஸ்மார்ட் போன்களை கொடுத்து பழக்கும் பெற்றோர்கள் எச்சரிக்கையாக இருக்க நிபுணர்கள் கூறுகின்றனர்.

  MORE
  GALLERIES

 • 38

  குழந்தைகள் மொபைலில் அதிக நேரம் செலவிடுதால் நினைவாற்றல் குறைகிறதா..? தீமைகளை தெரிந்துகொள்ளுங்கள்..!

  ஒரு கணக்கெடுப்பில் சுமார் 60% குழந்தைகள் தங்களது 5 வயதிற்கு முன்பே ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்துகின்றனர். இதில் 31% பேர் 2 வயதிற்கு முன்பே ஃபோன்களை பயன்படுத்து துவங்கி விடுகின்றனர் எனபதும் அதிர்ச்சி தகவல். ஏன் குழந்தைகள் அதிக நேரம் மொபைல் அல்லது லேப்டாப் உள்ளிட்ட ஸ்மார்ட் ஸ்கிரீன்களில் நேரத்தை செலவிட கூடாது என்பதற்கான முக்கிய காரணங்களை இங்கே பார்க்கலாம்.

  MORE
  GALLERIES

 • 48

  குழந்தைகள் மொபைலில் அதிக நேரம் செலவிடுதால் நினைவாற்றல் குறைகிறதா..? தீமைகளை தெரிந்துகொள்ளுங்கள்..!

  ஸ்மார்ட் ஃபோன்கள் மூளையில் என்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது?
  குழந்தை பருவம் என்பது குழந்தைகளின் நினைவாற்றல் மற்றும் மூளை செல்களை வலுப்படுத்த வேண்டிய வளர்ச்சிக்கான ஒரு முக்கிய கட்டமாகும். ஆனால் ஸ்மார்ட் ஃபோன்கள் குழந்தைகளுக்கு அதிக கவனச்சிதறலை ஏற்படுத்துகின்றன. குழந்தைகள் எந்நேரமும் அல்லது அதிக நேரம் ஃபோன்களில் மூழ்கி இருக்கும் போது, அவர்களின் பெற்றோர் அல்லது ஆசிரியரின் அறிவுறுத்தல்களை தவிர்க்கிறார்கள். அவர்களது இந்த போக்கு எந்தவொரு திறமையையும் கற்று கொள்வதில் இருந்து அல்லது திறனை மாற்றியமைப்பதில் இருந்து குழந்தைகளை விலக்குகிறது. தவிர அவர்களின் வளர்ச்சி செயல்முறையில் குறைபாடு ஏற்படுகிறது.

  MORE
  GALLERIES

 • 58

  குழந்தைகள் மொபைலில் அதிக நேரம் செலவிடுதால் நினைவாற்றல் குறைகிறதா..? தீமைகளை தெரிந்துகொள்ளுங்கள்..!

  தீங்கு விளைவிக்கும் ப்ளூ ரேடியேஷன்ஸ்:
  தீங்கு விளைவிக்கும் கதிர்வீச்சு கண்களுக்கு மட்டுமல்ல, மூளை செல்களுக்கும் தீங்கு செய்ய கூடியது. அதிலும் குறிப்பாக Blue light radiation-க்கு தொடர்ந்து கண்களை வெளிப்படுத்துவது, ஒருவரது விஷயங்களை நினைவில் கொள்ளும் திறனை பாதிக்கிறது. தவிர குறுகிய கால நினைவாற்றலில் (short-term memory) குறுக்கிடுகிறது. ஒரு செயலில் கவனம் செலுத்துவதை கடினமாக்குகிறது.

  MORE
  GALLERIES

 • 68

  குழந்தைகள் மொபைலில் அதிக நேரம் செலவிடுதால் நினைவாற்றல் குறைகிறதா..? தீமைகளை தெரிந்துகொள்ளுங்கள்..!

  இரவில் நீண்ட நேரம் மொபைல் பயன்படுத்தும் போது அதிலிருந்து வெளியேறும் ப்ளூ ரேடியேஷன்ஸ், இது இரவல்ல பகல் என்று மூளையை நம்ப வைக்கிறது. இதனால் உடல் தூக்க ஹார்மோனான மெலடோனின் உற்பத்தியை நிறுத்துகிறது. எனவே அடுத்த நாள் தூக்கமின்றி களைப்பாக மற்றும் எந்தப் வேலையையும் முழு திறனில் செய்ய முடியாமல் ஒருவர் பாதிக்கப்படுவார்.

  MORE
  GALLERIES

 • 78

  குழந்தைகள் மொபைலில் அதிக நேரம் செலவிடுதால் நினைவாற்றல் குறைகிறதா..? தீமைகளை தெரிந்துகொள்ளுங்கள்..!

  டிஜிட்டல் அம்னீஷியா:
  இப்போதெல்லாம் ஃபோன் நம்பர்ஸ், நமக்கு தேவையானவர்களின் பிறந்தநாள் அல்லது முக்கியமான நாட்கள் உள்ளிட்டவற்றை பெரும்பாலானோர் தற்போது நினைவில் வைத்து கொள்வது இல்லை. ஏனென்றால் எல்லாமே மொபைலில் குறித்து வைக்கப்பட்டுள்ளதே. இது தான் "டிஜிட்டல் அம்னீஷியா". டிஜிட்டல் அம்னீஷியா என்பது ஒரு நபர் தன் மூளையில் நினைவில் வைத்து கொள்ள வேண்டிய விஷயங்களை டிஜிட்டல் டிவைஸை நம்பிய மறந்துவிடும் நிலை. ஒருவர் மற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்குப் பதிலாக டிஜிட்டல் மீடியாவில் அதிக நேரத்தை செலவிடுவதும் டிஜிட்டல் அம்னீஷியாவாக குறிப்பிடப்படுகிறது.

  MORE
  GALLERIES

 • 88

  குழந்தைகள் மொபைலில் அதிக நேரம் செலவிடுதால் நினைவாற்றல் குறைகிறதா..? தீமைகளை தெரிந்துகொள்ளுங்கள்..!

  தீர்வு:
  குழந்தைகள் டிஜிட்டல் சாதனங்கல் பயனப்டுத்தும் நேரத்தை பெற்றோர்கள் கட்டுப்படுத்துங்கள். ஆன்லைன் கிளாஸ் அல்லது முக்கிய வேலைகளை தவிர மற்ற நேரங்களில் உடல் செயல்பாடுகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். ஃபோனைப் பயன்படுத்தும் போது, தீங்கு விளைவிக்கும் கதிர்களில் இருந்து கண்களைப் பாதுகாக்க, குழந்தைகளுக்கு anti-fatigue கண்ணாடிகளை அணிவிக்க வேண்டும். யாரிடமாவது ஃபோனில் பேசும் போது லவுட் ஸ்பீக்கரில் பேச ஊக்குவிக்கவும்.

  MORE
  GALLERIES