இவ்வாறு பல திரைப்படங்களின் நடித்ததன் மூலம் தனக்கென ஓர் ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள டாப்ஸி, எப்போதும் ஆரோக்கியம் மற்றும் உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்பதற்கான பல தீவிர உடற்பயிற்சிகளைத் தவறாமல் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் தான் சில தினங்களுக்கு முன்னதாக, 6 பேக்குடன், தன்னுடைய ஜிம் டிரெய்னருடன் இணைந்து புகைப்படம் ஒன்றை சோசியல் மீடியாவில் வெளியிட்டது ரசிகர்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுக்குறித்து பலர் பல்வேறு கமெண்ட்டுகளை முன்வைத்தாலும், பலர் இவரின் கடின உழைப்பிற்கு நிச்சயம் பாராட்டுகளைத் தெரிவித்தே ஆக வேண்டும் என்று கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். அடுத்ததாக ஹிந்தியில் நடிக்கவிருக்கும் ஒரு புதிய படத்திற்காக சிக்ஸ் பேக் வைத்திருப்பதாகவும் நடிகை டாப்ஸி தெரவித்துள்ளார்.
இதுக்குறித்து இவரின் பயிற்சியாளர் தெரிவிக்கையில், தன்னுடைய அடுத்த படத்தில் நடிப்பதற்கு கடந்த நவம்பரில் என்னிடம் வந்து, எனக்கு சிக்ஸ் பேக் உடல் வேண்டும் என்ற கேட்டதாக தெரிவிக்கிறார். மேலும் இவர் இதற்கென காலக்கெடுவை எதுவும் வைக்கவில்லை ஆனால் தன்னுடைய அடுத்த பட சூட்டிங் ஆரம்பிப்பதற்குள் முடிக்க வேண்டும் என்ற மதிப்பிடப்பட்ட காலவரையறை கேட்டார்.