நம் உடலில் உள்ள கழிவுகளை சுத்திகரிப்பதில் சிறுநீரகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவை செயலிழக்கும் பட்சத்தில் உடலில் கழிவுகள் தேக்கமடையும். இறுதியாக உயிரிழப்பு ஏற்படும். நீரிழிவு, வயோதிகம், ஹைப்பர்டென்சன் போன்ற காரணங்களால் சிறுநீரக செயலிழப்பு ஏற்படும்.சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டால் அதன் விளைவாக இதயம் மற்றும் ரத்த நாளங்கள் சம்பந்தப்பட்ட நோய்களும் வரும். இது மட்டுமல்லாமல் சிறுநீரகத்தில் பெரிய அளவிலான கட்டிகள் உருவாகி, சுற்றியுள்ள திசுக்களை சேதப்படுத்திக் கொண்டிருக்கும். இதனை குணப்படுத்த முடியாது.
சிறுநீரகங்களை பாதுகாப்பது எப்படி : உங்கள் உடல்வாகிற்கு ஏற்றாற்போல நாளொன்றுக்கு 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். ஒரே அடியாக குடித்து விடாமல், அவ்வபோது இடைவெளி விட்டு கொஞ்சம், கொஞ்சமாக அருந்த வேண்டும். மதுப்பழக்கத்தை கைவிட வேண்டும் அல்லது கட்டுப்படுத்த வேண்டும். மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் மருந்தகங்களில் இஷ்டப்பட்ட மாத்திரைகளை வாங்கி சாப்பிடக் கூடாது. சிறுநீரை கழிக்காமல் அடக்கி வைக்கக் கூடாது.