அந்த வகையில் உடலில் வைட்டமின் பி12 சத்து குறைபாடு இருக்கிறது என்பதையும் சில அறிகுறிகள் மூலமாக நாம் தெரிந்து கொள்ள முடியும். உடலில் சிவப்பணுக்களை கட்டமைப்பதிலும், மரபணுக்களை உருவாக்குவதிலும் வைட்டமின் பி12-இன் பங்கு மகத்துவமானது. நம் நரம்பிய கட்டமைப்பை ஊக்குவிக்கிறது மற்றும் மூளையின் நலனை காக்கிறது.
தலைவலி : உடலில் வைட்டமின் பி12 பற்றாக்குறை ஏற்படும்போது நரம்பியல் செயல்பாடுகள் பாதிக்கப்படும். மேலும் மூளையின் நலனை மேம்படுத்துகின்ற நரம்பு கட்டமைப்பு பாதிக்கப்படும்போது, அதன் எதிரொலியாக தலைவலி ஏற்படும். பி12 பற்றாக்குறை உள்ள மக்களை ஒப்பிடும்போது, இந்த சத்து நிறைவாக கொண்ட மக்களுக்கு மைக்ரைன் தலைவலி ஏற்படும் வாய்ப்பு குறைவு என்று ஆய்வு தெரிவிக்கிறது.
வாய்ப்புண் : உங்கள் நாக்கில் வெடிப்பு தென்படுவது, ஈறுகளில் வெள்ளை, வெள்ளை திட்டுகளாய் தென்படுவது போன்றவை வாய்ப்புண் காரணமாக உண்டாகுபவையாகும். சிலருக்கு நாக்கு ரத்த சிவப்பில் மாறியிருக்கும். இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுகி வைட்டமின் பி12 சத்து குறைபாடு குறித்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.