முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » இந்த 4 வகையான கண் பார்வை பிரச்னைகள் இருந்தால் உங்களுக்கு நீரிழிவு நோய் தீவிரமடைகிறது என்று அர்த்தம்..!

இந்த 4 வகையான கண் பார்வை பிரச்னைகள் இருந்தால் உங்களுக்கு நீரிழிவு நோய் தீவிரமடைகிறது என்று அர்த்தம்..!

பொதுவாக, உயர் இரத்த சர்க்கரை உள்ளவர்கள் ஒரு பொருளின் நுணுக்கமான விவரங்களைப் பார்ப்பது கடினம். கண் ஆரோக்கியமும் நீரிழிவு நோயும் இணைந்திருப்பதே இதற்குக் காரணம்.

  • 17

    இந்த 4 வகையான கண் பார்வை பிரச்னைகள் இருந்தால் உங்களுக்கு நீரிழிவு நோய் தீவிரமடைகிறது என்று அர்த்தம்..!

    இந்தியாவில் சுமார் 70 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியா உலகின் நீரிழிவு நோயின் தலைநகரம் என்று அழைக்கப்படுகிறது. நீரிழிவு நோயில் இரண்டு வகைகள் உள்ளன. இதில் டைப் 1 நீரிழிவு நோயை விட டைப் 2 நீரிழிவு நோய் மிகவும் பொதுவானது. பொதுவாக, உயர் இரத்த சர்க்கரை உள்ளவர்கள் ஒரு பொருளின் நுணுக்கமான விவரங்களைப் பார்ப்பது கடினம். கண் ஆரோக்கியமும் நீரிழிவு நோயும் இணைந்திருப்பதே இதற்குக் காரணம். நீரிழிவு உங்கள் கண் ஆரோக்கியத்தை பாதிக்கும் மற்றும் பல்வேறு கண் தொடர்பான சிக்கல்களுக்கும் வழிவகுக்கும். அப்படி கட்டுப்பாடற்ற இரத்த சர்க்கரையால் ஏற்படக்கூடிய நான்கு கண் பிரச்சினைகள் என்னென்ன பார்க்கலாம்.

    MORE
    GALLERIES

  • 27

    இந்த 4 வகையான கண் பார்வை பிரச்னைகள் இருந்தால் உங்களுக்கு நீரிழிவு நோய் தீவிரமடைகிறது என்று அர்த்தம்..!

    மங்கலான பார்வை : நீரிழிவு நோய் உங்கள் கண் லென்ஸ்களை வீக்கமடையச் செய்யும். இதனால் மங்கலான பார்வைக்கு வழிவகுக்கும். எனவே, நீங்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், திடீரென்று உங்கள் பார்வை மங்குவதை நீங்கள் கவனித்தால் உடனடியாக உங்கள் கண்ணாடிகளை மாற்ற வேண்டிய அவசியமில்லை. உங்கள் இரத்த சர்க்கரையை பரிசோதித்து, மங்கலான பார்வை சிக்கலை சரிசெய்ய சர்க்கரை அளவை சீராக வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் பார்வை திரும்ப 3 மாதங்கள் வரை ஆகலாம். இது குறித்து உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுதல் அவசியம்.

    MORE
    GALLERIES

  • 37

    இந்த 4 வகையான கண் பார்வை பிரச்னைகள் இருந்தால் உங்களுக்கு நீரிழிவு நோய் தீவிரமடைகிறது என்று அர்த்தம்..!

    கண்புரை உருவாதல் : ஒரு கேமராவைப் போலவே, உங்கள் கண்களின் இயற்கையான லென்ஸ் ஒரு படத்தைப் பார்க்கவும் கவனம் செலுத்தவும் உதவுகிறது. லென்ஸ் மேகமூட்டமாகவோ அல்லது அழுக்காகவோ இருந்தால் பார்வை சரியாக தெரியாது. இது கண்புரை உருவாகியிருப்பதற்கான அறிகுறியாகும். யாருக்கு வேண்டுமென்றாலும் கண்புரை ஏற்படலாம், ஆனால் நீரிழிவு இருப்பவர்களுக்கு முன்பே உண்டாகும் வாய்ப்புகள் அதிகம். லென்ஸ் மேகமூட்டமாக இருந்தால் எந்த பொருளையும் கூர்மையாக பார்க்க முடியாது. கண்புரை அகற்ற அறுவை சிகிச்சை தேவை. அறுவை சிகிச்சையில், ஒரு செயற்கை லென்ஸ் வைத்துவிட்டு மேகமூட்டமான லென்ஸ் அகற்றப்படும்.

    MORE
    GALLERIES

  • 47

    இந்த 4 வகையான கண் பார்வை பிரச்னைகள் இருந்தால் உங்களுக்கு நீரிழிவு நோய் தீவிரமடைகிறது என்று அர்த்தம்..!

    கிளௌகோமா உருவாதல் : நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிளௌகோமா வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதில் பல வகைகள் உள்ளன. கிளௌகோமா உருவானால், கண்ணுக்குள் அழுத்தம் உருவாகிறது. இதனால் திரவம் அதன் வழியில் வழியில் வெளியேறாமல் தடைபடும். இது நரம்புகள் மற்றும் இரத்த நாளங்களை சேதப்படுத்தும். இது பார்வை மாற்றங்களுக்கு வழிவகுக்கும். கிளௌகோமாவின் மிகவும் பொதுவான வடிவம் திறந்த கோண கிளௌகோமா ஆகும், இதை மருந்துகள் மூலம் சிகிச்சையளிக்கப்பட்டு சரி செய்யலாம்.. இந்த மருந்துகள் கண் வடிகட்டலை துரிதப்படுத்துவதன் மூலமும், உங்கள் கண்ணுக்குள் இருக்கும் திரவத்தைக் குறைப்பதன் மூலமும் அழுத்தத்தைக் குறைக்கின்றன.

    MORE
    GALLERIES

  • 57

    இந்த 4 வகையான கண் பார்வை பிரச்னைகள் இருந்தால் உங்களுக்கு நீரிழிவு நோய் தீவிரமடைகிறது என்று அர்த்தம்..!

    விழித்திரை நோய் : விழித்திரை என்பது உங்கள் கண்களின் பின்புறத்தில் உள்ளது. இது ஒளியை உள்வாங்கும் உயிரணுக்களின் குழுவாகும். இது நீங்கள் பார்க்கும் விஷயங்களை உங்கள் மூளைக்கு கொண்டு செல்லும் பார்வை நரம்பு ஆகும் . உங்கள் விழித்திரையில் உள்ள சிறிய இரத்த நாளங்கள் சேதமடைந்தாலும் நீரிழிவு நோயானது விழித்திரை நோயை ஏற்படுத்தும். சரியான நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை அளிக்காவிட்டால், பார்வை இழப்பு கூட ஏற்படலாம்.

    MORE
    GALLERIES

  • 67

    இந்த 4 வகையான கண் பார்வை பிரச்னைகள் இருந்தால் உங்களுக்கு நீரிழிவு நோய் தீவிரமடைகிறது என்று அர்த்தம்..!

    இதுபோன்ற சிக்கல்களை தவிர்க்க வருடத்திற்கு ஒரு முறையேனும் கண் பார்வை பரிசோதனை செய்து கொள்வது நல்லது. இதனால் தேவையற்ற அசம்பாவிதங்களை தவிர்க்கலாம்.

    MORE
    GALLERIES

  • 77

    இந்த 4 வகையான கண் பார்வை பிரச்னைகள் இருந்தால் உங்களுக்கு நீரிழிவு நோய் தீவிரமடைகிறது என்று அர்த்தம்..!

    எப்போது அவசரம் தேவை : கண் பார்வையில் கரும்புள்ளிகள் உருவானால், ஓட்டைகள் விழத் தொடங்கினால் , வெளிச்சம் கண்களை கூச வைத்தால், பார்வை மங்களாக தெரிந்தால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.

    MORE
    GALLERIES