முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » அச்சுறுத்தும் பெருங்குடல் புற்றுநோய்... இந்த அறிகுறிகளில் உஷாராக இருங்கள்..!

அச்சுறுத்தும் பெருங்குடல் புற்றுநோய்... இந்த அறிகுறிகளில் உஷாராக இருங்கள்..!

பல விளைவுகளைத் தரும் இந்த அபாயகரமான பெருங்குடல் புற்றுநோய் குறித்த சில அறிகுறிகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

  • 16

    அச்சுறுத்தும் பெருங்குடல் புற்றுநோய்... இந்த அறிகுறிகளில் உஷாராக இருங்கள்..!

    பெருங்குடல் புற்றுநோய் என்பது பெருங்குடல் மற்றும் மலக்குடலில் உருவாகும் ஒரு வகை புற்றுநோயாகும். இது ஒரு ஆபத்தான புற்றுநோய் என்றாலும், ஆரம்ப கட்டத்தில் இதை கண்டறிந்தால் குணப்படுத்த முடியும். இருப்பினும், பெருங்குடல் புற்றுநோயின் அறிகுறிகளை அது பரவும் வரை புறக்கணிக்கும் போக்கு நிறைய பேருக்கு உள்ளது.இது புற்றுநோய்க்கான சிகிச்சையை மிகவும் சவாலானதாக மாற்றும். இந்த பதிவில் இந்த அபாயகரமான பெருங்குடல் புற்றுநோய் குறித்த சில அறிகுறிகளை பற்றி பார்க்கலாம்.

    MORE
    GALLERIES

  • 26

    அச்சுறுத்தும் பெருங்குடல் புற்றுநோய்... இந்த அறிகுறிகளில் உஷாராக இருங்கள்..!

    குடலில் ஏற்படும் மாற்றங்கள் : மணிப்பால் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் ஸ்னிதா சினுகுமா பெருங்குடல் புற்றுநோய் குறித்து கூறுகையில், “எப்போதாவது குடல் பழக்கங்களில் மாற்றங்கள் ஏற்படுவது மிகவும் பொதுவானது. இருப்பினும், இது அடிக்கடி நிகழும் பட்சத்தில், அந்த நபர் தொடர்ந்து வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் அல்லது மலத்தின் நிலைத்தன்மையில் ஏற்படும் மாற்றங்களால் பாதிக்கப்பட்டிருந்தால், அது பெருங்குடல் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.

    MORE
    GALLERIES

  • 36

    அச்சுறுத்தும் பெருங்குடல் புற்றுநோய்... இந்த அறிகுறிகளில் உஷாராக இருங்கள்..!

    எடை இழப்பு மற்றும் வயிற்று வலி : தற்செயலாக எடை இழப்பு என்பது பெருங்குடல் புற்றுநோய் உட்பட பல நோய்களின் அறிகுறியாக இருக்கலாம். உணவுமுறை அல்லது உடற்பயிற்சியை மாற்றாமல் ஒருவர் கணிசமான அளவு எடையைக் குறைத்திருந்தால் மருத்துவரைப் பார்ப்பது முக்கியம். தொடர்ச்சியான வயிற்று வலி, தசைப்பிடிப்பு அல்லது குடலில் அசௌகரியம் ஆகியவை பெருங்குடல் புற்றுநோய் அறிகுறியாக இருக்கலாம்.

    MORE
    GALLERIES

  • 46

    அச்சுறுத்தும் பெருங்குடல் புற்றுநோய்... இந்த அறிகுறிகளில் உஷாராக இருங்கள்..!

    ரத்தப்போக்கு : மலத்தில் ரத்தத்தைக் கண்டறிவது மோசமான அனுபவமாக இருந்தாலும், பலர் அதை மூல நோய் அல்லது வேறு பாதிப்பில்லாத நோய் என்று கருதுகின்றனர். இருப்பினும், இதைப் பரிசோதிக்க உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. மேலும், மலக்குடலில் இருந்து ரத்தப்போக்கு அல்லது குடல் இயக்கத்திற்குப் பிறகு கழிப்பறையில் இரத்தம் வருவது பெருங்குடல் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். மூல நோய் அல்லது ஃபிசர்ஸ் கூட மலக்குடல் இரத்தப்போக்கிற்கு வழிவகுக்கும். எனவே, இது போன்ற நிலையை எப்போதும் புறக்கணிக்காதீர்கள். அதே போன்று, மலம் கழிக்கும் போது ஏற்படும் வலி போன்றவையும் இதற்கான அறிகுறிகளில் ஒன்றாக இருக்கலாம்.

    MORE
    GALLERIES

  • 56

    அச்சுறுத்தும் பெருங்குடல் புற்றுநோய்... இந்த அறிகுறிகளில் உஷாராக இருங்கள்..!

    சோர்வு : சோர்வாக அல்லது பலவீனமாக இருப்பது பெருங்குடல் புற்றுநோய் உட்பட பல நோய்களின் அறிகுறியாக இருக்கலாம். எனவே, உங்கள் சோம்பல் மற்றும் பலவீனம் போன்ற உணர்வுகளை பரிசோதித்துக்கொள்வது நல்லது, ஏனெனில் இது ஆபத்தான உடல்நலப் பிரச்சினைகளின் அறிகுறியாக இருக்கலாம். இந்த சோர்வு நிலை நீண்ட நாட்களாக நீடித்தால் வேறு சில பாதிப்புகள் இருப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளன.

    MORE
    GALLERIES

  • 66

    அச்சுறுத்தும் பெருங்குடல் புற்றுநோய்... இந்த அறிகுறிகளில் உஷாராக இருங்கள்..!

    மேற்குறிப்பிட்ட அறிகுறிகளில் பல பிற நோய் பாதிப்புகளாலும் ஏற்படலாம். மேலும், பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இவை ஏற்படாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இருப்பினும், இந்த அறிகுறிகளில் ஏதேனும் உங்களுக்கு ஏற்பட்டால், மருத்துவரை அணுகுவது அவசியம். சரியான நேரத்தில் அணுகினால், பெருங்குடல் புற்றுநோய் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம். இவற்றுடன் சரியான உணவு பழக்கம், சீரான வாழ்க்கை முறை ஆகியவையும் இந்த புற்றுநோய் பாதிப்பில் இருந்து பாதுகாக்கும்.

    MORE
    GALLERIES