என்னதான் தடுப்பூசிகள் அவரநிலை காரணமாக பயன்பாட்டிற்கு வந்தாலும் புதிய வகை கொரோனா வைரஸ்களுக்கு எதிராக அவை எந்தளவுக்கு செயல்படுகின்றன என்பது சந்தேகம் தான் இந்த நிலையில் தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் மாஸ்க் அணிவது காட்டாயம் என வல்லுநர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். இருப்பினும் எந்த வகை மாஸ்க் சிறந்தது என்ற கேள்வி நம்மில் பலருக்கு எழுந்திருக்கலாம்.
அதேபோல ஒரு சமீபத்திய ஆய்வில், ஐந்து அடுக்கு மாஸ்க் போட்டுக்கொள்வதன் மூலம் நீர்த்துளியின் குறைந்தபட்ச கசிவு வெளியேறுவதால் அவை மிகவும் பயனுள்ளதாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும் என்று தெரிவித்துள்ளது. IIT புவனேஸ்வர் மேற்கொண்ட இந்த ஆய்வில், உட்புற சூழல்களில் அதாவது மூடப்பட்ட அறையில் கொரோனா பரவலைத் தடுக்க முகக்கவசங்களும் மற்றும் போதுமான காற்றோட்டம் இருப்பது முக்கியம் என்பதைக் சுட்டிக்காட்டியுள்ளது.
இது தொடர்பாக ஐ.ஐ.டி புவனேஸ்வர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சுவாசத்தின்” போது முகக்கவசங்கள் மற்றும் பேஸ் ஷீல்டு போன்ற பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளிலிருந்து ஏரோசல் துளிகளின் வெளியீட்டை குழு ஆராய்ந்தது. ஆய்வில் உருவகப்படுத்தப்பட்ட சுவாச முறைகள் வழக்கமான சுவாச அதிர்வெண்களைப் பின்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் சாதாரணமாக ஓய்வில் இருக்கும் போது ஏற்படும் சுவாசம் மற்றும் நடைபயிற்சி போன்ற மிதமான செயல்பாட்டில் ஈடுபடும் ஆரோக்கியமான பெரியவர்களில் இருக்கும் நீண்ட சுவாசம் ஆகியவை அடங்கும்.
மேலும் அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, "சுவாசத்தின் போது வெளியேற்றப்பட்ட சிறிய நீர்த்துளிகள் (விட்டம் <10um) 5 வினாடிகளில், 4 அடி வரை பயணித்தது. எனவே சாதாரண உரையாடல்களின் போது சர்ஜிக்கல் மாஸ்க்குகளை பயன்படுத்த வேண்டாம் என்று ஆய்வில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது ”இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் "சமூக விலகலை பின்பற்ற சற்று கடினமாக இருக்கும் இடங்களான மருத்துவமனை மற்றும் பிற பகுதிகளில் சர்ஜிக்கல் மாஸ்க் மற்றும் பேஸ் ஷீல்டு அணிவது காட்டாயமாக பாதுகாப்பாக இருக்காது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏனெனில் இந்த நிகழ்வுகளில் நீர்த்துளி கசிவு அதிகம் காணப்படுகிறது. இதுவே வணிக N -95 முகக்கவசங்களை அணியும் போது அவை முன்னோக்கி இருப்பதால் நீர்த்துளிகள் கசிவதை முற்றிலும் தடுக்கிறது. இருப்பினும், முகக்கவசத்திற்கும் மூக்கிற்கும் இடையிலான இடைவெளிகளில் இருந்து நீர்த்துளிகள் கசிவு குறிப்பிடத்தக்கதாகக் காணப்படுகிறது, ”என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனவே, 5 அடுக்கு முகக்கவசங்கள், நீர்த்துளிகளின் குறைந்தபட்ச கசிவையே வெளிப்படுத்துவதால், அவை மிகவும் பயனுள்ள பாதுகாக்கும் நடவடிக்கையாகக் காணப்படுகிறது என்று ஆய்வறிக்கையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து IIT புவனேஸ்வர் இயக்குநரும் பேராசிரியருமான ஆர். வி ராஜகுமார் கூறுகையில், எங்கள் நிறுவனம் கொரோனாவுடன் தொடர்புடைய பல்வேறு தொழில்நுட்பங்கள் மற்றும் ஆராய்ச்சி ஆய்வுகளுக்கு பங்களிப்பு செய்துள்ளது. வைரஸ் பரவுவதற்கான ஆதாரமாக இருக்கும் சுவாசித்தல் கடந்த காலத்தில் போதுமான அளவில் ஆராயப்படவில்லை. எங்கள் சமீபத்திய ஆய்வு இந்த திசையில் ஒரு படி மேலே உள்ளது. அந்த ஆய்வுகளில் முகக்கவசங்கள் மற்றும் ஷீல்டு போன்ற பொதுவாகப் பயன்படுத்தப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகளால் சுவாசத்தின் போது உருவாகும் நீர்த்துளிகள் வெளியேறுவதை தடுக்க முடியாது என்பதை ஆய்வு எடுத்துக்காட்டுகிறது, ”என்று கூறியுள்ளார்.
மேலும், ஒருவரிடம் இருந்து வெளியேறும் ஏரோசல் செல் வைரஸ் கொண்டவையாக இருக்கலாம். இது COVID-19 மற்றும் பிற ஒத்த நோய்களின் வான்வழி பரவலைத் தூண்டும். இந்த சூழ்நிலைகளில், காற்றின் தர குறியீட்டை மதிப்பிடுவதற்கான வரையறுக்கப்பட்ட இடத்தில் வழக்கமான CO2 நிலை அளவீட்டு காற்றோட்டத்தை கட்டுப்படுத்த போதுமானதாக இருக்காது. பாதுகாப்பு நடவடிக்கைகளில் இருந்து ஏரோசல் துகள் கசிந்ததைக் கருத்தில் கொண்டு வரையறுக்கப்பட்ட இடத்தில் காற்று சுழற்சி விகிதத்தை தீர்மானிக்க புதிய வழிகாட்டுதல்கள் வகுக்கப்பட வேண்டும், ”என்று அவர் மேலும் கூறியுள்ளார்.