முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » உங்கள் வீட்டிலேயே இருக்கும் ‘வலி நிவாரணி’ மருந்துகள் என்னென்ன தெரியுமா..?

உங்கள் வீட்டிலேயே இருக்கும் ‘வலி நிவாரணி’ மருந்துகள் என்னென்ன தெரியுமா..?

நமது சமையலறையில் உள்ள சில பொருட்களே நமது உடல் நல்ல பாதிப்புகள், வலிகளுக்கு மருந்தாக உள்ளது.

 • 19

  உங்கள் வீட்டிலேயே இருக்கும் ‘வலி நிவாரணி’ மருந்துகள் என்னென்ன தெரியுமா..?

  நம் உடலுக்கு தேவையான வலி நிவாரணிகள் எப்பொழுதும் மருந்தகத்தில் அல்லது மருத்துவமனையில் அல்லது ஏதாவது ஒரு கடையில் தான் வாங்குவோம். வீட்டிலேயே இயற்கையான வலி நிவாரணிகள் இருக்கின்றன என்பது உங்களுக்கு தெரியுமா? நமது சமையலறையில் உள்ள சில பொருட்களே நமது உடல் நல்ல பாதிப்புகள், வலிகளுக்கு மருந்தாக உள்ளது. அது என்னென்ன என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.

  MORE
  GALLERIES

 • 29

  உங்கள் வீட்டிலேயே இருக்கும் ‘வலி நிவாரணி’ மருந்துகள் என்னென்ன தெரியுமா..?

  பூண்டு : நம் சமையல் அறையில் பிரதான இடம் பிடிப்பது ‘பூண்டு’. பூண்டில் வைரஸ் எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு ஆகிய பண்புகள் அடங்கி இருக்கின்றன. பூண்டு எண்ணெய்யை காதுவலிக்கு இயற்கை வலி நிவாரணியாக பயன்படுத்தலாம் என்று குஃபா மருத்துவப் பத்திரிகை ஆய்வு தெரிவிக்கிறது.

  MORE
  GALLERIES

 • 39

  உங்கள் வீட்டிலேயே இருக்கும் ‘வலி நிவாரணி’ மருந்துகள் என்னென்ன தெரியுமா..?

  ஆப்பிள் சைடர் வினிகர் : உங்களுக்கு நெஞ்செரிச்சல் ஏற்பட்டால் ஆப்பிள் சைடர் வினிகரை ஒரு கிளாஸ் தண்ணீரில் கலந்து குடிக்கலாம். இதனால் நெஞ்செரிச்சல் உடனே அடங்கும். 2016ல் அரிசோனா மாநில பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் ஆப்பிள் சைடர் வினிகர் நெஞ்செரிச்சலை குணப்படுத்தும் என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது..

  MORE
  GALLERIES

 • 49

  உங்கள் வீட்டிலேயே இருக்கும் ‘வலி நிவாரணி’ மருந்துகள் என்னென்ன தெரியுமா..?

  செர்ரி : மூட்டு வலிக்கு இயற்கை வலி நிவாரணியாக செர்ரியை பயன்படுத்தலாம். செர்ரிகளில் பாலிபினால்கள் மற்றும் வைட்டமின் சி நிறைந்த ஆக்ஸிஜனேற்ற பண்புகள் இருக்கிறது. செர்ரியை தொடர்ந்து சாப்பிடும் போது, மூட்டுவலி மற்றும் கீல்வாதம் போன்றவற்றிலிருந்து விடுபட முடியும்.

  MORE
  GALLERIES

 • 59

  உங்கள் வீட்டிலேயே இருக்கும் ‘வலி நிவாரணி’ மருந்துகள் என்னென்ன தெரியுமா..?

  மிளகுக்கீரை : மிளகுக்கீரையை தசை புண்ணுக்கு வலி நிவாரணியாக பயன்படுத்தலாம். மிளகுக்கீரை ஆனது குளிர்ச்சிக்கு பெயர் பெற்றது. இதே போல் மிளகுக்கீரை எண்ணையை வீக்கத்தைக் குறைப்பதற்கு உபயோகிக்கலாம். எனவே வாரம் ஒரு முறையாவது மிளகுக்கீரையை உணவில் சேர்த்து வந்தால் தசைகள் வலுப்பெறும்.

  MORE
  GALLERIES

 • 69

  உங்கள் வீட்டிலேயே இருக்கும் ‘வலி நிவாரணி’ மருந்துகள் என்னென்ன தெரியுமா..?

  நீர் : நீரானது இரத்தத்தின் ஒரு முக்கிய அங்கமாகும். ஒரு நபரின் உடலில் நீரிழப்பு ஏற்பட்டால், அது இரத்தத்தின் அளவு குறைவாக இருப்பதால் உண்டாகும். இதனால் ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்து குறைகிறது. ஒருவருக்கு காயம் ஏற்பட்டால் அந்த வலியில் இருந்து மீட்க அவருக்கு நீர் உதவும். நீரானது ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனை உறிஞ்ச உதவுகிறது. எனவே எப்போதும் போதுமான அளவு நீரேற்றமாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

  MORE
  GALLERIES

 • 79

  உங்கள் வீட்டிலேயே இருக்கும் ‘வலி நிவாரணி’ மருந்துகள் என்னென்ன தெரியுமா..?

  கிராம்பு : பல்வலிக்கு இயற்கை வலி நிவாரணியாக கிராம்பு பயன்படுகிறது. கிராம்பில் ‘யூஜெனோல்’ என்ற மூலப்பொருள் உள்ளது. இது வலி நிவாரணியாக செயல்பட உதவுகிறது. கிராம்பு மற்றும் கிராம்பு எண்ணெய் பல் வலிக்கு உதவுகிறது.

  MORE
  GALLERIES

 • 89

  உங்கள் வீட்டிலேயே இருக்கும் ‘வலி நிவாரணி’ மருந்துகள் என்னென்ன தெரியுமா..?

  மஞ்சள் : மஞ்சள் ஒரு அற்புதமான பொருள் ஆகும். மஞ்சள் நோய் எதிர்ப்பு சக்தியை மட்டும் கொடுப்பதில்லை. எந்த ஒரு காயமோ அல்லது மூட்டு வலியோ உள்ளவர்களுக்கு சிறந்த வலி நிவாரணியாக செயல்படுகிறது. எனவே அடிக்கடி உணவில் மஞ்சளை சேர்த்து வருவது நல்லது. தினமும் இரவு மஞ்சள் கலந்த பாலையும் குடித்து வரலாம்.

  MORE
  GALLERIES

 • 99

  உங்கள் வீட்டிலேயே இருக்கும் ‘வலி நிவாரணி’ மருந்துகள் என்னென்ன தெரியுமா..?

  குதிரைவாலி : குதிரைவாலியில் நார்ச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து ஆகியவை உள்ளது. சைனஸ் வலிக்கு இயற்கையான வலி நிவாரணியாக குதிரைவாலி பயன்படுகிறது. மூக்கடைக்கும் சைனஸ் வலிக்கு மிக சிறந்த நிவாரணியாக ‘குதிரைவாலி’ இருக்கிறது.

  MORE
  GALLERIES