முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » சுட்டெரிக்கும் கோடை வெயிலிலிருந்து தப்பிக்க இதை தினமும் ஃபாலோ பண்ணுங்க.. சும்மா கூலா இருப்பீங்க..

சுட்டெரிக்கும் கோடை வெயிலிலிருந்து தப்பிக்க இதை தினமும் ஃபாலோ பண்ணுங்க.. சும்மா கூலா இருப்பீங்க..

நாட்டில் தொடங்கி இருக்கும் கடும் வெப்ப அலைகளிலிருந்து உங்கள் உடல் மற்றும் சருமத்தை காப்பாற்றி கொள்ளும் வழிகள் பற்றி இங்கே பார்க்கலாம்.

 • 18

  சுட்டெரிக்கும் கோடை வெயிலிலிருந்து தப்பிக்க இதை தினமும் ஃபாலோ பண்ணுங்க.. சும்மா கூலா இருப்பீங்க..

  நாடு முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரியை தாண்டி பதிவாகி வருகிறது. இதனால் பகல் நேரத்தில் கடும் வெப்ப அலைகள் காரணமாக மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

  MORE
  GALLERIES

 • 28

  சுட்டெரிக்கும் கோடை வெயிலிலிருந்து தப்பிக்க இதை தினமும் ஃபாலோ பண்ணுங்க.. சும்மா கூலா இருப்பீங்க..

  தகிக்கும் கோடை வெயிலுக்கு மத்தியில் நம்மை பாதுகாப்பாக பார்த்து கொள்வதும், உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்வதும் மிகவும் முக்கியமானது. ஏனென்றால் அதிக வெயில் காரணமாக உடல் குளிர்ச்சியடையாத போது உஷ்ண நோய்கள் வரலாம். கடும் வெப்ப சூழல் காரணமாக பொதுவாக ஒருவரின் உடல் அதன் மைய வெப்பநிலையை (core temperature) ஒழுங்குபடுத்தும் திறனை இழக்க தொடங்கும் போது ஒருவருக்கு வெப்ப சோர்வு (Heat exhaustion) மற்றும் ஹீட் ஸ்ட்ரோக் உள்ளிட்ட சிக்கல்கள் ஏற்படுகிறது.

  MORE
  GALLERIES

 • 38

  சுட்டெரிக்கும் கோடை வெயிலிலிருந்து தப்பிக்க இதை தினமும் ஃபாலோ பண்ணுங்க.. சும்மா கூலா இருப்பீங்க..

  நாட்டில் தொடங்கி இருக்கும் கடும் வெப்ப அலைகளிலிருந்து உங்கள் உடல் மற்றும் சருமத்தை காப்பாற்றி கொள்ளும் வழிகள் பற்றி இங்கே பார்க்கலாம்.

  MORE
  GALLERIES

 • 48

  சுட்டெரிக்கும் கோடை வெயிலிலிருந்து தப்பிக்க இதை தினமும் ஃபாலோ பண்ணுங்க.. சும்மா கூலா இருப்பீங்க..

  வெள்ளரி : கோடைகாலத்தில் உங்கள் டயட்டில் வெள்ளரி காய்களை சேர்த்து கொள்வது உங்களது உடலை ஹைட்ரேட்டாக வைத்து கொள்ள உதவுகிறது மற்றும் எடை இழப்புக்கும் உதவுகிறது. வெள்ளரிக்காயில் 95 சதவீதம் தண்ணீர் உள்ளது மற்றும் ஒரு கப் வெள்ளரிக்காயில் கலோரிகள் குறைவாகவே உள்ளது. வெள்ளரியை சாப்பிடும் போது தோலை நீக்காமல் சாப்பிட நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

  MORE
  GALLERIES

 • 58

  சுட்டெரிக்கும் கோடை வெயிலிலிருந்து தப்பிக்க இதை தினமும் ஃபாலோ பண்ணுங்க.. சும்மா கூலா இருப்பீங்க..

  வைட்டமின் சி : உங்கள் கோடைகால தோல் பராமரிப்பு வழக்கத்தில் வைட்டமின் சி சேர்ப்பது கோடை வெயிலில் இருந்து உங்கள் சருமத்தை ஆரோக்க்கியமாக வைக்கும் பயக்கும். இது சூரியனில் இருந்து வெளிப்படும் தீங்கு விளைவிக்கும் கதிர்களில் இருந்து உங்களை பாதுகாக்கும். தவிர வயதான அறிகுறிகளைக் குறைத்து, உங்கள் முகத்தை பிரகாசமாக்குகிறது.

  MORE
  GALLERIES

 • 68

  சுட்டெரிக்கும் கோடை வெயிலிலிருந்து தப்பிக்க இதை தினமும் ஃபாலோ பண்ணுங்க.. சும்மா கூலா இருப்பீங்க..

  லெமன் வாட்டர்: கோடை காலத்தில் அடிக்கடி லெமன் வாட்டர் குடிப்பது மிகவும் நன்மை பயக்கும். இது உங்களை ஹைட்ரேட்டாக மற்றும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும் பானமாகும். காலை நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றை கலந்து குடிப்பது ஆரோக்கியமானது.

  MORE
  GALLERIES

 • 78

  சுட்டெரிக்கும் கோடை வெயிலிலிருந்து தப்பிக்க இதை தினமும் ஃபாலோ பண்ணுங்க.. சும்மா கூலா இருப்பீங்க..

  டிரெட்மில் : வெயில் காலத்தில் நீங்கள் ஒர்கவுட் செய்ய நினைத்தாலும் வீட்டிற்குள்ளேயே இன்டோர் ஆக்ட்டிவிட்டீஸ்களில் ஈடுபடலாம். அந்த வகையில் டிரெட்மில் என்பது எளிமையான ஆனால் சக்திவாய்ந்த உடற்பயிற்சி கருவியாகும். இது உடலில் இருக்கும் கலோரிகளை எரிக்க ஊக்குவிக்கிறது.

  MORE
  GALLERIES

 • 88

  சுட்டெரிக்கும் கோடை வெயிலிலிருந்து தப்பிக்க இதை தினமும் ஃபாலோ பண்ணுங்க.. சும்மா கூலா இருப்பீங்க..

  பழங்கள்: தர்பூசணி, கிர்ணி பழம், திராட்சை, அன்னாசி, லிச்சி, கிவி, மாதுளை, மாம்பழம் உள்ளிட்ட பழங்களை கோடை காலத்தில் உங்கள் டயட்டில் சேர்த்து கொள்வது கடும் வெப்பநிலை மாற்றம் காரணமாக உடலில் ஏற்படும் நீர்ச்சத்து இழப்பை சரி செய்து ஹைட்ரேட்டாக இருக்க உதவுகிறது.

  MORE
  GALLERIES