தாக்கத்தை தணிக்க சில குளிர்பானங்கள் போன்ற பதப்படுத்தப்பட்ட பொருட்களை தேர்வு செய்வது சில நேரங்களில் ஆரோக்கியத்தில் தொந்தரவை ஏற்படுத்துகிறது. சிலர் வெப்பத்தால் ஏற்படும் நீரிழப்பை ஈடுகட்ட முடியாமல் நீரிழப்புக்கு ஆளாகின்றனர். எனினும் முறையற்ற ஹைட்ரேஷன் ரத்த சர்க்கரை அளவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், நீரிழிவு நோயாளிகள் கோடையில் கவனமுடன் இருக்க வேண்டும். நீரிழிவு நோயாளிகளுக்கான கோடைகால ஊட்டச்சத்து குறிப்புகள் பற்றி இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஸ்வீட் ஜூஸ்கள் தவிர்க்கப்பட வேண்டும்.. வெயிலில் வெளியே செல்லும் போது வெப்ப விளைவுகளை சமாளிக்க ஒரு கிளாஸ் ஜூஸ் குடிப்பதை தவிர்ப்பது கடினம். இந்த நேரத்தில் சுகர் லோடட் ட்ரிங்ஸ்கள் வெப்ப விளைவுகளில் இருந்து தற்காலிக நிவாரணம் அளிக்குமே தவிர, உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தை அளிக்காது என்பதை நீரிழிவு நோயாளிகள் புரிந்து கொள்ள வேண்டும். எனவே கோடைக் காலத்தில் வெளியே செல்லும் போது தண்ணீர் பாட்டில் எடுத்து செல்வது நல்லது.
அதிகம் ஃபைபர் சத்து எடுக்க வேண்டும்.. நார்ச்சத்துகள் (ஃபைபர்) ரத்த ஓட்டத்தில் சர்க்கரையின் வெளியீட்டை மெதுவாக்கும் மற்றும் ரத்த குளுக்கோஸ் அளவு ஏறுவதை தடுக்கும். எனவே கோடை காலத்தில் நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் நார்ச்சத்து அதிகம் சேர்த்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். நார்ச்சத்து நிறைந்த உணவை உண்பதும் அடிக்கடி ஏற்படும் பசியைத் தடுக்கும்.
எப்போதுமே ஹைட்ரேட்டாக இருக்க வேண்டும்.. நீரிழிவு நோயாளிகள் வெளியே சென்றால் எப்போதுமே தங்களுடன் தண்ணீர் பாட்டிலை எடுத்து செல்ல வேண்டும். நாள் முழுவதும் நீரிழிவு நோயாளிகள் ஹைட்ரேட்டாக இருப்பது ரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கிறது மற்றும் ரத்த ஓட்டத்தில் இருந்து கூடுதல் நச்சுகளை வெளியேற்றுகிறது.
டயட்டை மாற்றுங்கள்.. கோடைகாலம் என்பதால் வழக்கமான டயட்டை பின்பற்றாமல் அதிக நீர்ச்சத்து நிறைந்த உணவுகள் உணவில் இருக்குமாறு நீரிழிவு நோயாளிகள் பார்த்து கொள்ளலாம். உதாரணமாக ஸ்னாக்ஸ் நேரத்தில் எப்போது சாப்பிடும் பொருட்களுக்கு பதில் வெள்ளரி அல்லது தர்பூசணி சாப்பிடலாம். இந்த பழங்கள் 90% தண்ணீரால் ஆனது டயட்டில் சேர்ப்பது மிகவும் நன்மை பயக்கும். வெப்பம் அதிகமாக இருப்பதால் இன்சுலின் பயன்படுத்துவோர் அதை குளிர்ந்த இடத்தில் பாதுகாப்பாக வைப்பது நல்லது. குளுக்கோஸ் மீட்டர் மற்றும் டெஸ்ட் ஸ்ட்ரிப்ஸ் உள்ளிட்டவற்றை சாதாரண வெப்பநிலையில் வைத்திருக்க வேண்டும்.