முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » கோடை வெப்பத்தினால் ஆண்களுக்கு விந்தணுக்கள் குறைபாடு ஏற்படுமா?

கோடை வெப்பத்தினால் ஆண்களுக்கு விந்தணுக்கள் குறைபாடு ஏற்படுமா?

பெரும்பாலும் இவை ஏற்படுவதற்கு மது அருந்துதல், புகைப்பிடித்தல், போதைப் பொருட்கள் மற்றும் பல காரணிகள் இருக்கின்றன. முக்கியமாக கோடை காலங்களில் ஏற்படும் அதித வெப்பத்தினால் ஆண்களின் உடலில் உயிரணுக்கள் குறைபாடு ஏற்படுவது என்பது தவிர்க்க முடியாத பிரச்சனையாகியுள்ளது.

 • 17

  கோடை வெப்பத்தினால் ஆண்களுக்கு விந்தணுக்கள் குறைபாடு ஏற்படுமா?

  இன்றைய நிலையில் ஆண்களுக்கு ஏற்படும் மலட்டு தன்மைக்கு முக்கிய காரணமாக இருப்பது விந்தணு குறைபாடு தான். விந்து வெளியேறும் போது அதில் தேவையான அளவிற்கு குறைவான அளவில் உயிரணுக்கள் இருப்பது ஒளிகோஸ்பெர்மியா என அழைக்கப்படுகிறது. ஒருவேளை வெளியேறும் உயிரணுக்களில் உயிரணுக்களே இல்லாத பட்சத்தில் அது அசூஸ்பெரிமியா என அழைக்கப்படுகிறது.

  MORE
  GALLERIES

 • 27

  கோடை வெப்பத்தினால் ஆண்களுக்கு விந்தணுக்கள் குறைபாடு ஏற்படுமா?

  பெரும்பாலும் இவை ஏற்படுவதற்கு மது அருந்துதல், புகைப்பிடித்தல், போதைப் பொருட்கள் மற்றும் பல காரணிகள் இருக்கின்றன. முக்கியமாக கோடை காலங்களில் ஏற்படும் அதித வெப்பத்தினால் ஆண்களின் உடலில் உயிரணுக்கள் குறைபாடு ஏற்படுவது என்பது தவிர்க்க முடியாத பிரச்சனையாகியுள்ளது.

  MORE
  GALLERIES

 • 37

  கோடை வெப்பத்தினால் ஆண்களுக்கு விந்தணுக்கள் குறைபாடு ஏற்படுமா?

  மருத்துவர்களின் கூற்றுப்படி பெரும்பாலான ஆண்களுக்கு கோடையின் வெப்பத்தை பற்றியும், அதன் மூலம் உயிரணுக்களுக்கு ஏற்படும் பாதிப்பை பற்றியும் சரியான புரிதல் இல்லை. இப்போது கோடை காலங்களில் அதிக நேரம் வெளியே வெயிலில் அலைபவர்களுக்கு குறைவான விந்தணுக்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இதற்கு அப்படியே எதிர்மாறாக வீட்டிலிருந்து வேலை செய்பவர்களுக்கும் அலுவலகத்தில் சென்று வேலை செய்பவர்களுக்கு ஆரோக்கியமான உயிரணுக்கள் இருக்கிறது என்பது குறிப்பிடதக்கது.

  MORE
  GALLERIES

 • 47

  கோடை வெப்பத்தினால் ஆண்களுக்கு விந்தணுக்கள் குறைபாடு ஏற்படுமா?

  இது போன்ற பிரச்சனைகளில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள ஆண்கள் வெயில் நேரங்களில் வெளியே செல்லும்போது தேவையான அளவு தண்ணீர் மற்றும் போதுமான அளவு ஊட்டச்சத்து நிறைந்த உணவு ஆகியவற்றை உற்கொள்ள வேண்டும். மேலும் முடிந்த அளவு நீண்ட நேரம் வெயிலில் அலைவதை குறைத்துக் கொள்வது நல்லது.

  MORE
  GALLERIES

 • 57

  கோடை வெப்பத்தினால் ஆண்களுக்கு விந்தணுக்கள் குறைபாடு ஏற்படுமா?

  தவிர்க்க முடியாத காரணங்களினால் வெளியே செல்லும் நிலை ஏற்பட்டால் வெயிலில் இருந்து தன்னை தற்காத்துக் கொள்ள குடை மற்றும் உடலுக்கு குளிர்ச்சியும் சக்தியும் அளிப்பதற்காக தண்ணீர் பாட்டில் மற்றும் குளுக்கோஸ் பவுடர் ஆகியவற்றை எடுத்துச் செல்லலாம். இவற்றின் மூலம் நமது உடலில் நீர்ச்சத்து குறைவதை நம்மால் தடுக்க முடியும். இதைத் தவிர ஆண்களின் உடலில் உயிரணுக்கள் எண்ணிக்கை அதிகரிக்க வேறு சில உபாயங்களையும் நாம் மேற்கொள்ளலாம்.

  MORE
  GALLERIES

 • 67

  கோடை வெப்பத்தினால் ஆண்களுக்கு விந்தணுக்கள் குறைபாடு ஏற்படுமா?

  உயிரணுக்கள் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு ஆண்கள் நல்ல காற்றோட்டமுள்ள பாக்ஸர் ஷார்ட்ஸ்களை அணியலாம். மிகவும் இறுக்கமான உள்ளாடைகளுக்கு பதிலாக இவ்வாறு பாக்சர்களை அணிவது மிகவும் நல்லது. இதைத் தவிர மது அருந்துதல், புகைப்பிடிப்பது, போதைப்பொருட்கள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். உடற்பயிற்சி செய்வதும் உயிரணுக்கள் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும். மேலும் உணவு கட்டுப்பாட்டிலும் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 77

  கோடை வெப்பத்தினால் ஆண்களுக்கு விந்தணுக்கள் குறைபாடு ஏற்படுமா?

  ஒரு வாரத்திற்கு 15 மணி நேரம் அல்லது அதற்கு அதிகமாக உடற்பயிற்சி செய்த ஆண்களுக்கு மற்ற நபர்களை விட 73% அதிக உயிரணுக்கள் எண்ணிக்கை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. வாரத்திற்கு 5 மணி நேரம் உடற்பயிற்சி செய்தவர்களை விட இது மிகவும் அதிகமாகும்.

  MORE
  GALLERIES